

சென்னை: சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.66.50 உயர்ந்து, ரூ.2,983 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு 14.2 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு ரூ.19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன.
இந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாற்றம் செய்கின்றன, அந்த வகையில், நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.66.50 உயர்ந்து, ரூ.2,983-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதாவது,ரூ.2,916.50-லிருந்து ரூ.2,983 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் பண்டிகைக் காலம் தொடங்கவுள்ள நிலையில், இப்புதிய விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. தற்போதைய வணிக ரீதியான காஸ் சிலிண்டர் விலை உயர்வால் உணவகங்கள், ஹோட்டல்களில் உணவுகள் விலை ஏற வாய்ப்பு உள்ளது.