உடன்குடி அனல் மின் நிலையத்தில் வணிக ரீதியான உற்பத்தி தொடக்கம்

உடன்குடி அனல் மின் நிலையத்தில் வணிக ரீதியான உற்பத்தி தொடக்கம்
Updated on
1 min read

சென்னை: உடன்குடி அனல் மின்நிலையம் வணிக ரீதியான 660 மெகாவட் முழு மின் உற்பத்தியை தொடங்கியது என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.13,076 கோடி மதிப்பீட்டில் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகளுடன் அனல் மின்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 13-ம் தேதி உடன்குடி மிக உய்ய அனல் மின்நிலையம் (2x660 MW) அலகு -1-ல் மின் உற்பத்தியை தொடங்கியது. தினமும் 300 முதல் 400 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

உடன்குடி அனல் மின்நிலை யத்தில் அலகு 1-ல் வணிக ரீதியான 660 மெகாவாட் முழு மின் உற்பத்தியை விரைவில் கொண்டு வர முதல்வர் உத் தரவிட்டார். அதன் அடிப்படை யில் உடன்குடி (660 மெகா வாட்) அனல் மின் நிலையம் அலகு 1-ல் வணிக ரீதியான முழு மின் உற்பத்தி அடைய பல்வேறு சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன.

72 மணி நேரம் முழு உற்பத்தி: இதை தொடர்ந்து அலகு 1-ல் வணிக ரீதியான சோதனை உற்பத்திக்கான தொடர் முழு உற்பத்தி திறன் ஆய்வு சோதனை ஓட்டம் கடந்த 2-ம் தேதி மாலை 04.16 மணி முதல் நேற்று (5-ம் தேதி) மாலை 04.15 வரை வெற் றிகரமாக நடத்தப்பட்டு தொடர்ச்சியாக 72 மணி நேரம் முழு உற்பத்தியான 660 மெகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்தது.

இந்த சாதனை மைல்கல்லை தொடர்ந்து, இந்த அனல் மின் நிலையம் அலகு 1-ல் நேற்று மாலை முதல் 660 மெகா வாட்டுக்கு மேல் வணிக ரீதி யாக முழு மின் உற்பத்திக்கு கொண்டுவரப்பட்டது. மேலும், உடன்குடி அனல் மின் நிலை யம் அலகு 2-ல் கட்டுமான வேலைகள் மிக துரிதமாக நடை பெற்று வருகிறது. விரைவில் மின் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

உடன்குடி அனல் மின் நிலையத்தில் வணிக ரீதியான உற்பத்தி தொடக்கம்
தாம்பரம் அரசு மருத்துவமனையில் ரூ.4.92 லட்சம் மதிப்பிலான மின் பொருட்கள் திருட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in