சென்னையில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.11.50 உயர்வு

சென்னையில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.11.50 உயர்வு
Updated on: 
1 min read

சென்னை: சென்​னை​யில் வணிக பயன்​பாட்​டுக்​கான எல்​பிஜி சிலிண்​டர்​ விலை ரூ.11.50 உயர்ந்து, ரூ.2,994.50 ஆக அதி​கரித்​துள்​ளது.

பொதுத்​துறையைச் சேர்ந்த இந்​தி​யன் ஆயில் நிறு​வனம், பாரத் பெட்​ரோலியம் நிறு​வனம், ஹிந்​துஸ்​தான் பெட்​ரோலியம் நிறு​வனம் ஆகிய எண்​ணெய் நிறு​வனங்​கள், வீடுகளுக்கு 14.2 கிலோ எடை​யிலும், வணிக பயன்​பாட்​டுக்கு ரூ.19 கிலோ எடை​யிலும் சமையல் காஸ் சிலிண்​டர்​களை விநியோகம் செய்​கின்​றன.

இந்​நிறு​வனங்​கள், சர்​வ​தேச சந்​தையில் நில​வும் கச்சா எண்​ணெய் விலைக்கு ஏற்ப விலையில் மாற்​றம் செய்​கின்​றன, அந்த வகை​யில், நாடு முழு​வதும் உள்ள முக்​கிய நகரங்​களில் 19 கிலோ எடைக்​கொண்ட வணிக பயன்​பாட்​டுக்​கான சிலிண்​டர் விலை ரூ.10 முதல் ரூ.17 வரை உயர்ந்​துள்​ளது. இது வணிக சிலிண்​டர் விலை​யில் தொடர்ந்து ஏற்​படும் 3-வது மாத உயர்வு ஆகும். சென்​னை​யில் கடந்த அக்​டோபரில் வணிக பயன்​பாட்​டுக்​கான சிலிண்​டர் விலை ரூ.66.50 உயர்த்​தப்​பட்​டிருந்​தது.

சென்​னை​யில் 19 கிலோ எடைக்​கொண்ட சிலிண்​டர் விலை ரூ.11.50 உயர்ந்து, ரூ.2,994.50 ஆக அதி​கரித்​துள்​ளது. புதுடெல்​லி​யில் ரூ.10 உயர்ந்து ரூ.2,820 ஆகவும், மும்​பையில் ரூ.10.50 உயர்ந்து, ரூ.2,775 ஆகவும், கொல்​கத்​தாவில் ரூ.17 உயர்ந்து, 2,971 ஆகவும் நிர்​ணயிக்​கப்​பட்​டுள்​ளன. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்​தது. வீடுகளுக்​குப் பயன்​படுத்​தப்​படும் 14.2 கிலோ வீட்டு உபயோக காஸ் சிலிண்​டர் விலை​யில் எந்த மாற்​றமும் இன்றி பழைய விலை​யிலேயே நீடிக்​கிறது.

சென்னையில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.11.50 உயர்வு
‘முரசு’ புயல் எதிரொலி: அத்தியாவசியப் பொருட்களை தயாராக வைக்க தமிழக அரசு அறிவுறுத்தல்

X