எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க இன்று கடைசி

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க இன்று கடைசி
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், கணக்கீட்டுப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கின. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை பதிவு செய்வது ஆகிய பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் டிச.4-ம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், படிவம் விநியோகம், பூர்த்தி செய்து திரும்ப பெறுவது போன்றவற்றில் சிக்கல்கள் எழுந்தது மற்றும் பருவமழை உள்ளிட்ட காரணங்களால், அவகாசத்தை நீட்டிக்குமாறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதை ஏற்று, எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்கும் அவகாசம் டிச.11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

டிச.16-ல் வரைவு வாக்காளர் பட்டியலும், பிப்.14-ல் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கணக்கீட்டுப் படிவம் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்து பெறப்பட்டது. படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணியும் தொடர்ந்து நடந்தது.

கடந்த 11-ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் எஸ்ஐஆர் படிவம் விநியோகிக்கும் பணி, பூர்த்தி செய்து பெற்ற படிவங்களை பதிவேற்றும் பணி 100 சதவீதம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படிவம் விநியோகம், திரும்பப் பெறுதல், பதிவு செய்தல் ஆகிய பணிகளுக்கான அவகாசத்தை டிச.14 வரை மேலும் 3 நாட்கள் நீட்டித்து தேர்தல் ஆணையம் 11-ம் தேதி மாலை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, படிவத்தை பூர்த்தி செய்துசமர்ப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19-ம் தேதி வெளியாகும். அன்று முதல், ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம். வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் அல்லதுஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். அதன்பின், அவற்றின் மீது பரிசீலனை நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.14-ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கணக்கீட்டுப் படிவத்துக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், இறுதிவாக்காளர் பட்டியல் பிப்ரவரியில் வெளியிடப்படும் என்றுமட்டுமே தேர்தல் ஆணையம்தெரிவித்துள்ளது. சரியான தேதி குறிப்பிடப்படவில்லை.

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க இன்று கடைசி
கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் ரியாக்‌ஷன்களும் - ஒரு விரைவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in