இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்
Updated on
1 min read

சென்னை: இலங்கை சிறை​யில் உள்ள அனைத்து மீனவர்​கள், படகு​களை விடுவிக்க தேவை​யான நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும் என மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கருக்கு முதல்​வர் விஜய் கடிதம் மூலம் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்து மத்​திய அமைச்​சருக்கு முதல்​வர் எழு​திய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: ராம​நாத​புரம் மாவட்ட மீனவர்​கள் 11 பேர் இலங்கை கடற்​படை​யின​ரால் சிறை பிடிக்​கப்​பட்​டு, படகும் பறி​முதல் செய்​யப்​பட்ட சம்​பவம் குறித்து தங்​கள் கவனத்​துக்கு கொண்டு வரு​கிறேன்.

இச்​சம்​பவத்​தில் இயந்​திரக்​கோளாறால் படகு நெடுந்​தீவு கரையை ஒட்டி தரைதட்டி நின்ற நிலை​யில், சர்​வ​தேச கடல் எல்​லை​யைத் தாண்​டிய​தாக கூறி, படகை​யும் மீனவர்​களை​யும் சிறை பிடித்​துள்​ளனர்.

நமது மீனவர்​களை இலங்கை கடற்​படை​யினர் தொடர்ந்து கைது செய்து வரு​வது மீனவ சமூகத்​தினரிடையே ஆழ்ந்த மனவேதனையை ஏற்​படுத்​தி​யுள்​ளதுடன், அவர்​களின் வாழ்​வா​தா​ரத்தை பாதித்​துள்​ளது. பாக்​ஜலசந்​தியை நம்பி வாழும் மீனவர்​கள் மத்​தி​யி்ல் நிலை​யற்ற தன்​மையை உரு​வாக்​கி​யுள்​ளது.

எனவே, உரிய தூதரக வழி​முறை​கள் வாயி​லாக இலங்கை அரசுடன் பேசி, ஏற்​கெனவே சிறைபிடிக்​கப்​பட்ட அனைத்து மீனவர்​களை​யும், அவர்​களின் படகு​களை​யும் விரை​வாக விடு​வித்​து, பாது​காப்​பாக தாயகம் திரும்ப தேவை​யான நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும்.

கூட்டு செயல்​பாட்​டுக் குழு மூலம் இரு தரப்பு பேச்​சு​வார்த்​தையை விரை​வாக நடத்​து​வது மட்​டுமே இது​போன்ற பிரச்​சினை​கள் மீண்​டும் மீண்​டும் நிகழா வண்​ணம் தீர்வு காண்​ப​தற்கு உதவும். மீனவர்​களின் வாழ்​வா​தா​ரம், நலன்​களை பாது​காக்க தாங்​கள் தனிப்​பட்டமுறை​யில் தலை​யிட்டு தீர்வு காண வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

மாணிக்​கம் தாகூர்

தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர் விடுத்​துள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக மீனவர்​கள் நிரந்​தர​மாக பாது​காப்பை பெறுகிற வகை​யில் இந்​திய - இலங்கை வெளி​யுறவுத்​துறை அமைச்​சகம் இணைந்த கூட்டு நடவடிக்​கைக்​குழு அமைத்து இத்​தகைய கைது நடவடிக்​கைகளை கண்​காணித்து உரிய தீர்​வை காண வேண்​டுமென நாடாளு​மன்​றத்​தில் கோரிக்கை வைக்​கப்​பட்​டுள்​ளது.

கடந்த 2023 -ம் ஆண்டு வரை 1306 தமிழக மீனவர்​கள் கைது செய்​யப்​பட்​டிருப்​ப​தோடு,179 படகு​கள் இலங்கை கடற்​படை​யின​ரால் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. இத்​தகைய கைது நடவடிக்​கைகளை தடுத்து நிறுத்த வேண்​டும்.

எனவே, அப்​பாவி தமிழக மீனவர்​களை பாது​காக்க, இலங்கை அரசுடன் பேசி மீனவர்​களை உடனடி​யாக விடு​விப்​ப​தோடு, பறி​முதல் செய்​யப்​பட்ட படகு​களை​யும் திரும்ப ஒப்​படைக்க உரிய நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும்​.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்
தொகுதி மறுவரையறை தொடர்பாக விவாதிக்க முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் கூட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in