அந்த்யோதயா அன்னயோஜனா திட்டம்: சட்டத் திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

அந்த்யோதயா அன்னயோஜனா திட்டம்: சட்டத் திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
Updated on
2 min read

சென்னை: அந்த்​யோதயா அன்​னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு குடும்ப உறுப்​பினர் எண்​ணிக்​கைக்​கேற்ப உணவு தானி​யம் வழங்​கும் சட்​டத்​திருத்​தத்தை மறு​பரிசீலனை செய்ய வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடிக்கு முதல்​வர் விஜய் கடிதம் எழு​தி​யுள்​ளார்.

இதுகுறித்து பிரதமருக்கு எழு​திய கடிதத்​தில் அவர் கூறியிருப்பதாவது : மதிய உணவு மற்​றும் பொது விநி​யோகத் துறை கடந்த ஜூன் 24-ல் வெளி​யிட்ட தேசிய உணவு பாது​காப்பு (திருத்​தச்) சட்ட வரை​வால், தமிழக மக்​களுக்கு ஏற்​படும் பாதிப்புகளை தங்​கள் கவனத்​துக்கு கொண்டு வரு​கிறேன்.

இச்​சட்ட வரைவு, அந்த் யோதயா அன்ன யோஜனா (AAY) திட்​டத்​தின் கீழ் தகு​தி​வாய்ந்த குடும்​பங்​களுக்கு வழங்​கப்​படும் உணவுப்​பொருள் உரிமை​களை மாற்ற வகை செய்​கிறது. தற்​போதைய நடை​முறைப்​படி, குடும்ப உறுப்​பினர்​களின் எண்​ணிக்​கை​யைக் கணக்​கில் கொள்​ளாமல், ஒரு குடும்​பத்​துக்கு மாதம் 35 கிலோ கிராம் உணவு தானி​யங்​கள் வழங்​கப்​படு​கிறது.

தற்​போதைய திருத்​தத்​தால், குடும்​பத்​துக்கு அதி​கபட்​சம் 35 கிலோ என்ற உச்​சவரம்​பில் மாதம் 7 கிலோ தானி​யம் வழங்​கப்பட உள்​ளது. தமிழகத்​தில் சராசரி குடும்ப உறுப்​பினர் எண்​ணிக்கை 3.54 ஆக மட்​டுமே இருப்​ப​தால், இத்​திருத்​தம், மாநிலத்​தின் மிக ஏழ்​மை​யான குடும்​பங்​களுக்​கான உணவு தானிய அளவை குறைக்கும்.

தமிழகத்​தில் தற்​போது 18,64,600 அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்​டைகள் உள்​ளன. இதன்​மூலம் 69,26,983 ஏழைப் பயனாளி​கள் பயன்​பெற்று வரு​கின்​றனர்​.இக்​குடும்​பங்​கள், மத்​திய அரசால் வரையறுக்​கப்​பட்​டுள்ள தகுதி வழி​காட்​டு​தல்​களின்​படி, சமூகத்​தின் மிக​வும் நலிவடைந்த பிரி​வினரிலிருந்து தேர்வு செய்​யப்​பட்​ட​வர்​கள்.

குடும்ப உறுப்​பினர்​களின் எண்​ணிக்​கை​யைப் பொருட்​படுத்​தாமல் எந்​தவொரு குடும்​பத்​துக்​கும் போதிய அளவில் உணவு தானி​யங்​கள் கிடைக்​காமல் போய்​விடவோ அல்​லது பசி மற்​றும் ஊட்​டச்​சத்​துக் குறை​பாட்​டால் பாதிக்​கப்​படவோ கூடாது என்​ப​தற்​காகவே, இந்த உரிமை​கள் எளிமை​யான​தாக​வும், நிபந்தனையற்ற​தாக​வும், குடும்ப அடிப்​படையி​லான​தாக​வும் வடிவ​மைக்​கப்​பட்டன.

மேலும், தற்​போது, தமிழகத்​தில் அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்​காக அரிசி, கோதுமை அல்​லது கேழ்​வரகு போன்ற 65,261 டன் (MT) உணவு தானி​யங்​கள் மாதந்​தோறும் மத்​திய அரசால் இலவச​மாக ஒதுக்​கப்​படு​கிறது. முன்​மொழியப்​பட்​டுள்ள திருத்​தம் அமலாகும்​போது, இந்த விநி​யோக அளவு சுமார் 42,040 டன்​னாகக் குறைந்​து​விடும். இது 70 லட்​சம் ஏழை மக்​களை பெரிதும் பாதிக்​கும்.

அந்த்​யோதயா அன்ன யோஜனா குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்கு வழங்​கப்​படும் அரிசி, அவர்​களின் அன்​றாட மூன்று வேளை உணவுக்​கும் ஒரு தவிர்க்க முடி​யாத முக்​கிய அங்​க​மாக விளங்​கு​கிறது.

இதை மாற்​றி​னால், அவர்​களுக்​குக் கூடு​தல் செலவை ஏற்​படுத்​தி, வறுமை, ஊட்​டச்​சத்​துக் குறை​பாடு மற்​றும் பசி​யின் பிடிக்கு ஆட்​படுத்​தி​விடும்.

இதனால், தமிழகம் மட்​டுமல்​லாது, அத்​தகைய பிற மாநிலங்​கள் அதிக அளவில் பாதிப்​படை​யும். எனவே மத்​திய அரசால் முன்​மொழியப்​பட்​டுள்ள திருத்​தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்​டும்​. தற்​போதைய நடை​முறை​யான மாதம் 35 கிலோஉணவு தானி​யங்​கள் வழங்​கும் உரிமை​யைத்​ தொடர வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ பிரதமரை வலி​யுறுத்​தியுள்ளார்.

அந்த்யோதயா அன்னயோஜனா திட்டம்: சட்டத் திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால் பல கோடி ரூபாய் தருவதாக திமுக பேரம்: தவெக எம்எல்ஏ சரவணன் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in