விஜய், ராகுல் காந்தி இணைந்திருக்கும் ஏஐ வீடியோவை பகிர்ந்த கிரிஷ் சோடங்கர்

விஜய், ராகுல் காந்தி இணைந்திருக்கும் ஏஐ வீடியோவை பகிர்ந்த கிரிஷ் சோடங்கர்
Updated on
1 min read

சென்னை: முதல்வர் விஜய், வருங்கால பிரதமர் ராகுல் காந்தி என குறிப்பிட்டு ஏஐ வீடியோவை தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் - 5, இந்திய கம்யூனிஸ்ட் - 2, மார்க்சிஸ்ட் - 2, விசிக - 2 மற்றும் ஐயுஎம்எல் - 2 ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது. விஜய் முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கிறார். இதில் காங்கிரஸ் கட்சி, தவெக கூட்டணி அரசில் பங்கேற்கிறது. மற்ற கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி உள்ளன.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ஏஐ வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். இதை அறிவிக்கும் விதமாக தனது பாணியில் இருவரும் இணைந்து வரும் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அந்த வீடியோவை பல்வேறு தருணங்களில் பலரும் வெவ்வேறு விதமாக மாற்றி பகிர்ந்தது உண்டு.

தற்போது தவெக உடன் காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்துள்ளது. தமிழகத்தில் அடுத்து வரும் தேர்தல்களை இரண்டு கட்சிகளும் இணைந்து சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய், நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

இந்நிலையில், விஜய் மற்றும் ராகுல் காந்தி வருவது போல அந்த வீடியோவை மாற்றி பகிர்ந்துள்ளார் கிரிஷ் சோடங்கர். அதற்கு ‘வருங்கால பிரதமர் ராகுல் காந்தி உடன் முதல்வர் விஜய்’ என அவர் கேப்ஷன் கொடுத்துள்ளார். இப்போது அது சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.

விஜய், ராகுல் காந்தி இணைந்திருக்கும் ஏஐ வீடியோவை பகிர்ந்த கிரிஷ் சோடங்கர்
‘த்ரிஷ்யம் 3’ ட்ரெய்லர் எப்படி? - ஜார்ஜ் குட்டியின் அடுத்த த்ரில்லர் அத்தியாயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in