முதல்வர் விஜய் இன்று புதுக்கோட்டை வருகை: வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு

14 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்
புதுக்கோட்டையில் இன்று (நவ.2) முதல்வர் விஜய் திறந்துவைக்க உள்ள புதிய பேருந்து நிலையம்.

புதுக்கோட்டையில் இன்று (நவ.2) முதல்வர் விஜய் திறந்துவைக்க உள்ள புதிய பேருந்து நிலையம்.

Updated on: 
1 min read

புதுக்கோட்டை: புதிய பேருந்து நிலை​யம் திறப்பு உள்​ளிட்ட நிகழ்​வு​களில் பங்​கேற்​ப​தற்​காக முதல்​வர் விஜய் இன்று புதுக்​கோட்டை வரு​கிறார். அவருக்கு உற்​சாக வரவேற்பு அளிக்க ஏற்​பாடுகள் செய்​யப்​பட்​டுள்​ளன.

புதிதாக கட்டி முடிக்​கப்​பட்​டுள்ள பேருந்து நிலை​யம் திறப்பு உள்​ளிட்ட முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்​றும் பயனாளி​களுக்கு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா புதுக்​கோட்​டை​யில் இன்று நடை​பெற உள்​ளது. இந்த விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக முதல்​வர் விஜய், சென்​னை​யில் இருந்து தனி விமானத்​தில் காலை 9.30 மணிக்கு புறப்​பட்டு, திருச்சி விமான நிலை​யத்தை காலை 10.30 மணிக்கு வந்​தடைகிறார். அங்கு, அவருக்கு சிறப்​பான வரவேற்பு அளிக்​கப்​படு​கிறது.

அதன்​பிறகு, அங்​கிருந்து 10.45 மணிக்கு காரில் புறப்​பட்டு, நண்​பகல் 12 மணிக்கு புதுக்​கோட்டை பேருந்து நிலை​யத்தை வந்​தடைகிறார். அங்கு, புதிய பேருந்து நிலை​யத்​தைத் திறந்து வைத்​து​விட்டு, அதன் அரு​கில் உள்ள ஆயுதப்​படை மைதானத்​துக்கு காரில் செல்​கிறார். அங்கு நடை​பெறும் அரசு விழா​வில், முடிவுற்ற திட்​டப் பணிகளை திறந்​து​வைத்து, சுமார் ரூ.100 கோடி மதிப்​பில் 14 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பயனாளி​களுக்கு நலத் திட்ட உதவி​களை வழங்கி சிறப்​புரையாற்​றுகிறார்.

மதி​யம் 1 மணிக்கு அங்​கிருந்து புறப்​பட்டு, புதுக்​கோட்டை விருந்​தினர் மாளி​கைக்கு சென்று மதிய உணவு அருந்​தி​விட்டு ஓய்​வெடுக்​கிறார். அதன்​பிறகு, பிற்​பகல் 3 மணிக்கு காரில் புறப்​பட்டு திருச்சி விமான நிலை​யம் சென்று, மாலை 4.15 மணிக்கு தனி விமானத்​தில் சென்னை திரும்​பு​கிறார்.

முதல்​வர் வருகையையொட்டி, புதுக்​கோட்டை மட்​டுமின்றி திருச்சி, அரியலூர், பெரம்​பலூர் உள்​ளிட்ட மாவட்​டங்​களைச் சேர்ந்த 3,500 போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர்.

முதல்​வரின் வருகையையொட்டி அவருக்கு மாத்​தூர், மண்​டையூர், குளத்​தூர், கீரனூர், நார்த்​தாமலை, கட்​டி​யாவயல் உள்​ளிட்ட இடங்​களில் உற்​சாக வரவேற்பு அளிக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

நாளை ஈரோடு பயணம்: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வாய்க்கால்மேட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் அரசு சார்பில் நாளை (3-ம் தேதி) நடைபெறும் விழாவில், ஈரோடு, கரூர், திருப்பூர், சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த 4,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1,110 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வரும் முதல்வர், அங்கிருந்து சாலை மார்க்கமாக பெருந்துறை செல்ல உள்ளார்.

செங்கப்பள்ளி பாலத்தில் தொடங்கி, பெருந்துறை புறவழிச்சாலை பிரிவு, சிப்காட் ரவுண்டானா, பழைய பேருந்து நிலைய ரவுண்டானா, புதிய பேருந்து நிலைய ரவுண்டானா, அரசு மருத்துவமனை ரவுண்டானா, பணிக்கம்பாளையம் ஆகிய 7 இடங்களில் ‘ரோடு ஷோ’ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>புதுக்கோட்டையில் இன்று (நவ.2) முதல்வர் விஜய் திறந்துவைக்க உள்ள புதிய பேருந்து நிலையம்.</p></div>
தமிழ்நாடு நாள் - முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

X