புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்

13,676 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினார்
புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த முதல்வர், அங்கிருந்த மக்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். படம்: ர.செல்வமுத்துகுமார்

புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த முதல்வர், அங்கிருந்த மக்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். படம்: ர.செல்வமுத்துகுமார்

Updated on: 
2 min read

புதுக்கோட்டை: புதுக்​கோட்​டை​யில் நேற்று நடை​பெற்ற அரசு விழா​வில் புதிய பேருந்து நிலை​யம் உள்​ளிட்ட முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 13,676 பேருக்கு ரூ.62.73 கோடி மதிப்​பில் நலத் திட்ட உதவி​கள் வழங்​கும் பணியை முதல்​வர் விஜய் தொடங்கி வைத்​தார்.

புதுக்​கோட்டை ஆட்சி​யர் அலு​வல​கத்​தில் நடை​பெற்ற அரசு விழா​வில் கலந்து கொள்ள திருச்சி விமான நிலை​யத்​தில் இருந்து சாலை வழி​யாக புதுக்​கோட்​டைக்கு நேற்று முதல்​வர் விஜய் வந்​தார். வரும் வழி​யில் பல்​வேறு இடங்​களில் பொது​மக்​கள் உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.

புதுக்​கோட்டை கட்​டி​யாவயல் பகுதி​யில் இருந்து 3 கி.மீ. தொலை​வுக்கு ரோடு ஷோவாக ஆட்சி​யர் அலு​வல​கம் சென்​றடைந்த முதல்​வர் விஜய், அங்​குள்ள கூட்​டரங்​கில் நடை​பெற்ற விழா​வில் ரூ.68.31 கோடி மதிப்​பில் கட்​டப்​பட்ட உள்​விளை​யாட்டு அரங்​கம் உட்​பட 44 முடிவுற்ற புதிய திட்​டங்​களைத் திறந்து வைத்​தார். மேலும், ரூ.11.72 கோடி மதிப்​பில் 70 புதிய பணிகளுக்கு அடிக்​கல் நாட்​டியதுடன், 13,676 பயனாளி​களுக்கு ரூ.62.73 கோடி மதிப்​பில் நலத் திட்ட உதவி​கள் வழங்​கும் பணி​யைத் தொடங்கி வைத்​தார்.

நலத் திட்ட உதவி​கள் வழங்​கியபோது மாற்​றுத் திறனாளி​களிடம் நேரடி​யாகச் சென்று வழங்​கியதுடன், ஒரு பெண்​ணுடன் செல்ஃபி எடுத்​துக் கொண்​டார். பின்​னர் மீண்​டும் ரோடு ஷோ மூலம் புதிய பேருந்து நிலை​யத்​துக்​குச் சென்று, ரூ.23.25 கோடி​யில் கட்​டப்​பட்ட புதிய பேருந்து நிலை​யத்தை திறந்து வைத்து பார்​வை​யிட்​டார்.

அதைத்​தொடர்ந்து, விருந்​தினர் மாளி​கைக்​குச் சென்று ஓய்​வெடுத்த அவர், மாலை 3 மணி​யளவில் சாலை வழி​யாக மீண்​டும் திருச்சி விமான நிலை​யம் சென்று, அங்​கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்​பட்​டார்.

விழா​வில் நீர்​வளத் துறை அமைச்​சர் என்.ஆனந்த், தொழிலா​ளர் நலத் துறை அமைச்​சர் ஜெ.முகமது பர்​வேஸ், எம்.பி.க்​கள் துரை வைகோ, ஜோதி​மணி, நவாஸ் கனி, எம்​எல்ஏ என்.சுப்​பிரமணி​யன், ஆட்சி​யர் எம்.அருணா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். புதிய பேருந்து நிலை​யம் அருகே முதல்​வரை வரவேற்​ப​தற்​காக வெயி​லில் நீண்ட நேரம் காத்​திருந்த 3 பேர் அடுத்​தடுத்து மயங்கி விழுந்​தனர். அவர்​களை போலீ​ஸாரே தூக்​கிச் சென்று நிழலில் அமர வைத்​தனர்.மேலும், வெயி​லில் காத்​திருந்த பொது​ மக்​களுக்கு போலீ​ஸார் குடிநீர் வழங்​கினர்.

தேமுதி​க​வினர் சிறை வைப்பு: விலை​வாசி உயர்வை தமிழக அரசு தடுக்க தவறி​விட்​ட​தாக குற்​றம்​சாட்டி முதல்​வருக்கு கருப்​புக் கொடி காட்​டத் திட்​ட​மிட்​டிருந்த தேமுதிக மாவட்​டச் செய​லா​ளர் கார்த்​தி​கேயன், மாநகரச் செய​லா​ளர் பரமஜோதி ஆகியோரை, அக்​கட்சி அலு​வல​கத்​திலேயே போலீ​ஸார் காவலில் வைத்​தனர். இதேபோல, முதல்​வரிடம் கோரிக்கை மனு அளிப்​ப​தற்​காக ஆட்சி​யர் அலு​வல​கம் வந்​திருந்த புதுக்​கோட்டை தொகுதி​யில் தவெக சார்​பில் போட்​டி​யிட்ட கே.எம்.சரீப்​பையும் போலீ​ஸார் தடுத்து நிறுத்​தினர்.

புதுக்​கோட்டை பேருந்து நிலை​யம் அரு​கில் உள்ள ஆயுதப்​படை மைதானத்​தில் பயனாளி​களுக்கு நலத் திட்ட உதவி​கள் வழங்​கும் விழாவை நடத்​து​வது என முதலில் திட்​ட​மிடப்​பட்​டது. இதற்​காக அங்கு பிரம்​மாண்ட பந்​தல் மற்​றும் 2,000 பேர் வரை அமர்​வதற்​கான இருக்கை வசதி​கள் ஏற்​படுத்​தப்​பட்டு வந்​தன. ஆனால், பாது​காப்பு காரணங்​கள் என்​பதை சுட்​டிக்​காட்டி அங்கு விழாவை நடத்த வேண்​டாம் என உளவுத் துறை​யினர் கொடுத்த தகவலின் அடிப்​படை​யில், அந்த இடம் கைவிடப்​பட்டு, ஆட்சி​யர் அலு​வலக கூட்​டரங்​குக்கு கடைசி நேரத்​தில் விழா மாற்​றப்​பட்​டது.

மக்​கள் அவதி: பேருந்து நிலை​யம் கட்​டு​மானப் பணி​யின்​போது, தற்​காலிக பேருந்து நிலை​யம் செயல்​பட்​டது. இந்​நிலை​யில், புதிய பேருந்து நிலை​யம் திறப்பு விழாவுக்​கான முன்​னேற்​பாடு பணிக்​காக வேறு இடத்​துக்கு தற்​காலிக பேருந்து நிலை​யம் மாற்​றப்​பட்​டது. ஆனால், நேற்று திறப்பு விழா நடை​பெற்​றபோது வெவ்​வேறு இடங்​களுக்கு மாற்​றப்​பட்​டது. இது​குறித்து மாவட்ட நிர்​வாகம் முன்​னறி​விப்பு செய்​யாததா​லும், பேருந்து நிலை​யம் திறந்​தவுடன் அங்​கிருந்து பேருந்​துகளை இயக்​காததா​லும் பள்ளி, கல்​லூரி மாணவ, மாணவி​கள், பொது​மக்​கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

<div class="paragraphs"><p>புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த முதல்வர், அங்கிருந்த மக்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். படம்: ர.செல்வமுத்துகுமார்</p></div>
ஆந்திராவை நெருங்கும் ‘முரசு’ புயல்: 120 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று, 19 விமானங்கள் ரத்து

X