எஸ்சி, எஸ்டி மேம்பாட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

எஸ்சி, எஸ்டி மேம்பாட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: எஸ்​சி, எஸ்டி மேம்​பாட்​டுக்​காக ஒதுக்​கப்​படும் நிதியை முழு​மை​யாகப் பயன்​படுத்​து​வதுடன், திட்​டங்​களின் செயல்​பாடு​களை அதி​காரி​கள் தீவிர​மாகக் கண்​காணிக்க வேண்​டும் என்று முதல் ​வர் விஜய் அறி​வுறுத்​தினார்.

தமிழகத்​தில் ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினருக்​காக ஒதுக்​கப்​படும் நிதி முழு​மை​யாக சென்​றடைவதை உறு​தி​செய்​யும் வகை​யில், ‘தமிழ்​நாடு மேம்​பாட்டு செயல்​திட்ட சட்​டம்’ கடந்த 2024 மே 29-ம் தேதி அமல்​படுத்​தப்​பட்​டது. இந்த சட்​டத்​தின்​படி எஸ்​சி, எஸ்டி துறைக்கு ஒதுக்​கப்​படும் நிதி முறை​யாகச் செல​விடப்​படு​கிறதா என்​பதை கண்​காணிக்க முதல்​வர் தலை​மை​யில் மாநில மன்​றம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த மன்​றத்​தின் 2026-27-ம் நிதி​யாண்​டுக்​கான முதல் கூட்​டம், முதல்​வர் விஜய் தலை​மை​யில் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நடை​பெற்​றது.

கூட்​டத்​தில் முதல்​வர் விஜய் பேசி​ய​தாவது: எஸ்​சி, எஸ்டி மேம்​பாட்​டுச் செயல்​திட்​டத்​தின் கீழ் ஒதுக்​கப்​படும் நிதியை எளிய மக்​களின் பயன்​பாட்​டுக்கு முழு​மை​யாக உபயோகிக்க வேண்​டும்.

இதன் செயல்​பாடு​களை தொடர்ந்து அதி​காரி​கள் கண்​காணிக்க வேண்​டும். குறிப்​பாக இத்​திட்​டங்​களை செயல்​படுத்​தும் துறை​களின் மாதாந்​திர செல​வின விவரம், பணி முன்​னேற்ற அறிக்கை மற்​றும் பயனாளி களின் விவரத்தை www adtwdap.tn.gov.in என்ற வலை​தளத்​தில் பதிவுசெய்ய வேண்​டும்.

மேலும், ஆதி​தி​ரா​விடர் மற்றும் பழங்​குடி​யினர் முன்​னேற்​றத்​துக்கு இடையூறாக உள்ள தடைகளைக் கண்​டறிந்​து, அவற்றை களைவதற்​கான பரிந்​துரைகளை தெரிவிக்க வேண்டும். அதற்​கான புதிய திட்​டங்​களை அனைத்து துறைச் செயலர்​கள் உரு​வாக்க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ பேசினார்.

எஸ்சி, எஸ்டி மேம்பாட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாகப் பேசியதாக வழக்கு: உதயநிதி கைதாகி விடுதலை - முழு விவரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in