மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளை ஆய்வு செய்த முதல்வர் விஜய்: சக பயணியாக பொதுமக்களுடன் பயணித்தார்

மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளை ஆய்வு செய்த முதல்வர் விஜய்: சக பயணியாக பொதுமக்களுடன் பயணித்தார்
Updated on
2 min read

சென்னை: சென்​னை​யில் மெட்ரோ ரயில் திட்​டத்​தின் 2-ம்​கட்ட பணி​களை முதல்​வர் விஜய் நேரில் ஆய்வு செய்​ததுடன், பொதுமக்களு​டன் சக பயணி​யாக ரயி​லில் பயணம் செய்​தார்.

தமிழக முதல்​வ​ராக விஜய் பொறுப்​பேற்ற பின்பு வார நாட்​களில் தின​மும் தலை​மைச் செயல​கம் வந்து அலு​வல் பணி​களை மேற்​கொண்​டு வரு​கிறார். அதன்​படி பணி​களை முடித்​து​விட்டு மாலை வீடு திரும்​பு​கை​யில் அவ்​வப்​போது ஆய்​வுக்கு செல்​வதை வழக்​க​மாக கொண்​டுள்​ளார். அதன் தொடர்ச்​சி​யாக சென்னை மெட்ரோ ரயில் 2-ம்​ கட்ட திட்​டப் பணி​களை முதல்​வர் விஜய் நேற்று நேரில் ஆய்வு செய்​தார். இதற்​காக தலை​மைச் செயல​கத்​தில் இருந்து தனது காரில் முதல்​வர் விஜய் அரசினர் தோட்​டம் மெட்ரோ ரயில் நிலை​யம் வந்​தடைந்​தார்.

அங்​கிருந்து மெட்ரோ ரயி​லில் பயணித்து நந்​தனம் மெட்ரோ ரயில் நிலை​யத்​துக்கு சென்​றார்.

மெட்ரோ ரயிலுக்​கான டிக்​கெட்டை எடுத்​துக்​கொண்​டு, பொது​மக்​களு​டன் சக பயணி​யாக பயணம் செய்த அவர் பயணி​களு​டன் கலந்​துரை​யாடி​னார். அவருடன் பயணித்த பொது​மக்​கள் முதல்​வருடன் உற்​சாக​மாக செல்பி எடுத்​தும், அவர் கைகளில் முத்​தம் தந்​தும் மகிழ்ச்​சியை வெளிப்​படுத்​தினர். அதன்​பின் நந்​தனம் மெட்ரோ ரயில் நிலை​யம் அருகே உள்ள மெட்ரோ தலை​மை அலு​வல​கத்​துக்கு சென்ற முதல்​வர் விஜய்​யை, துறை​சார்ந்த அதி​காரி​கள் வரவேற்று நிலை​யத்​தின் செயல்​பாடு​கள் மற்​றும் நடை​பெற்று வரும் அடுத்​தகட்ட கட்​டு​மானப் பணி​கள் குறித்து விளக்​கம் அளித்​தனர்.

அப்​போது மெட்ரோ ரயில் பாது​காப்பு ஏற்​பாடு​கள், கட்​டு​மானப் பணி​களின் முன்​னேற்​றம், கண்​காணிப்பு நடை​முறை​கள், போக்குவரத்து வசதிகள் குறித்து அதி​காரி​களிடம் முதல்​வர் விஜய் விரி​வாக கேட்​டறிந்​தார். கட்​டுப்​பாட்டு மையத்​தி​லும் ஆய்வு செய்த முதல்​வர், மெட்ரோ ரயில் இயக்​கம் எவ்​வாறு கண்​காணிக்​கப்​படு​கிறது, அவசர​கால பாது​காப்பு நடவடிக்​கைகள், பயணி​களுக்​கான வசதி​கள் மற்​றும் சேவை​கள் எவ்​வாறு மேம்​படுத்​தப்​படு​கின்றன என்​பது குறித்​தும் அதி​காரி​களிடம் விளக்​கம் பெற்​றார்.

அதைத் தொடர்ந்து தற்​போது நடை​பெற்று வரும் விரி​வாக்​கத் திட்​டங்க​ளின் நிலை, அடுத்​தகட்ட வளர்ச்​சிப் பணி​கள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் மூத்த அதி​காரி​களு​டன் அவர் ஆலோ​சனை நடத்​தி​னார். ஆய்வை முடித்து வெளியே வந்த முதல்​வர் விஜய்க்கு அங்கு திரண்​டிருந்த பொது​மக்​கள் அவரை கண்​டதும் கைகளை அசைத்​தும், முழக்​கமிட்​டும் உற்​சாக வரவேற்பு அளித்​தனர். இதையடுத்து கிண்டி கத்​திப்​பாரா பகு​திக்​குச் சென்ற முதல்​வர் விஜய், அங்கு நடந்​து​வரும் மெட்ரோ திட்​டப் பணி​களை பார்​வை​யிட்டு பணி​களின் முன்​னேற்​றம், தரம் மற்​றும் காலக்​கெடு குறித்து அதி​காரி​களிடம் விரி​வாகக் கேட்​டறிந்​தார்.

குறிப்​பாக சுமார் 101 அடி உயரத்​தில் ஏற்​படுத்​தப்​பட்​டுள்ள மேம்​பாலத்​தில் 1354 அடி தூரத்​துக்கு பிரம்​மாண்ட ரயில் பாதை அமைக்​கும் பணி​கள் இறு​தி​கட்​டத்​தில் உள்​ளன. இதை முதல்​வர் பார்​வை​யிட்டு அதன் கட்​டு​மான முன்​னேற்​றத்தை ஆய்வு செய்து மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் அதி​காரி​களை வெகு​வாக பாராட்​டி​னார். தொடர்ந்​து, பணி​கள் திட்​ட​மிட்ட காலக்​கெடு​வுக்​குள் நிறைவடைய தேவை​யான அறி​வுறுத்​தல்​களை அதி​காரி​களுக்கு வழங்​கி​னார்.

அதன்​பின் போரூர் மெட்ரோ ரயில் நிலை​யம் வந்த முதல்​வர் விஜய், அங்​கிருந்து பூந்​தமல்லி வரை ஓட்​டுநர் இல்​லாத மெட்ரோ ரயி​லில் பயணித்து ஆய்வு செய்​தார். திட்​டப்​பணி​களை விரைந்து முடித்து ரயில் சேவையை தொடங்​க​வும் அதி​காரி​களுக்கு அறி​வுறுத்​தி​னார். பூந்​த மல்​லி-​போரூர்​-வடபழனி வழித்​தடத்​தில் மெட்ரோ ரயிலை இயக்​கு​வதற்​கான அனைத்து ஏற்​பாடு​களும் தீவிர​மாக நடை​பெற்று வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.

இந்த ஆய்​வின்​போது நிதித்​துறை அமைச்​சர் மரிய வில்​சன், தலை​மைச் செயலர் எம்​.​சாய்​கு​மார், நிதித்​துறை செயலர் எம்​.சித்​திக் மற்​றும்​ சென்​னை மெட்​ரோ ரயில்​ நிறு​வனத்​தின்​ திட்​ட இயக்​குநர்​ தி.அர்ச்​சுணன்​ உள்​ளிட்​டோர்​ இருந்​தனர்​.

மாற்றுத் திறனாளி உற்சாகம்

மெட்ரோ ரயிலில் பயணித்த முதல்வர் விஜய் மாற்றுத்திறனாளி ஒருவருடன் கலந்துரையாடினார். இதுகுறித்து மாற்றுத்திறனாளி கூறும்போது, ‘‘என்னைபார்த்தவுடன் அருகில் அமர்ந்து முதல்வர் நலம் விசாரித்தார். அவரை பார்த்த ஆனந்தத்தில் பேச்சு வரவில்லை. உடல்நலத்தை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தினார்’’ என்றார்.

மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளை ஆய்வு செய்த முதல்வர் விஜய்: சக பயணியாக பொதுமக்களுடன் பயணித்தார்
டாஸ்மாக் முறைகேடு புகாரில் செந்தில் பாலாஜி மீது புதிய வழக்கு: 45 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in