தவெக எம்​எல்​ஏக்​களைத் தொடர்ந்து கூட்​டணி கட்சி எம்எல்​ஏக்​களு​டன் முதல்​வர் விஜய் இன்று ஆலோ​சனை

முதல்​வர் விஜய்

முதல்​வர் விஜய்

Updated on: 
1 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேரவைத் தேர்​தலில் தனிப்​பெருங்கட்சியாக வென்று காங்​கிரஸ், விசிக, கம்​யூனிஸ்ட் கட்​சிகள், ஐயூஎம்​எல் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்​தது. முதல்​வ​ராகத் தவெக தலை​வர் விஜய் பதவி​யேற்​றார். காங்​கிரஸ் சார்​பில் விஸ்வநாதன், ராஜேஷ் குமார், விசிக சார்​பில் வன்​னியரசு, ஐயூஎம்​எல் சார்​பில் ஷாஜகான் ஆகியோர் அமைச்​சர்​களாகப் பொறுப்​பேற்றனர்.

தவெக அரசு அமைந்து 6 மாதங்​களைக் கடந்த நிலை​யில் சட்​டம் ஒழுங்கு பிரச்​சினை, கட்சி நிர்​வாகி​களின் சர்ச்​சைக்​குரிய செயல்​பாடுகள், மாற்​றுக்​கட்சி எம்​எல்​ஏக்​கள் இணைப்பு, காவிரி நீர் மேலாண்மை, சிறை கைதி​கள் தப்​பியோட்​டம், மின்​வெட்டு, மாநில உரிமை​கள் மற்​றும் நிர்​வாக முடிவு​கள் நிலைத்​தன்மை இல்​லாதது என ஆட்​சிக்கு எதிராக எதிர்க்​கட்​சிகள் தொடர்ச்​சி​யான குற்​றச்​சாட்​டுகளை முன்​வைத்து வரு​கின்​றன.

இந்​நிலை​யில், கடந்த சில வாரங்​களுக்கு முன்பு மாமல்​லபுரத்​தில் உள்ள தனியார் நட்​சத்​திர விடுதி​யில் தவெக எம்​எல்​ஏக்​களு​டன் முதல்​வர் விஜய் ஆலோ​சனை மேற்​கொண்​டார். இதில் தொகுதி சார்ந்த அரசு நலத்​திட்​டங்​களை முதல்​வரிடம் எம்​எல்​ஏக்​கள் எடுத்​துரைத்​தனர்.

மக்​கள் மத்​தி​யில் ஆட்​சி​யின் மீதான கண்​ணோட்​டம் குறித்​தும் முதல்​வர் கேட்​டறிந்​தார். இந்​தச் சந்​திப்​புக்​குப் பிறகு தற்​போது, கூட்​டணி கட்சி எம்​எல்​ஏக்​களு​டன் ஆலோ​சனை நடத்த முதல்​வர் விஜய் திட்​ட​மிட்​டுள்​ளார்.

அந்த வகை​யில் சென்னை கிரீன்​வேஸ் சாலை​யில் உள்ள முதல்​வரின் முகாம் அலு​வல​க​மான பாமினி இல்​லத்​தில் கூட்​டணி கட்சி எம்​எல்​ஏக்​களை இன்று பிற்​பகல் 2.30 மணிக்கு முதல்​வர் விஜய் சந்​திக்​கிறார்.

கூட்​டத்​தில் பங்​கேற்க காங்​கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் மற்​றும் ஐயூஎம்​எல் கட்​சிகளின் எம்​எல்​ஏக்​களுக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. ஏற்​கெனவே, 2 முறை மதச்​சார்​பற்ற சமூக நீதி வெற்றி கூட்​டணி சார்​பில் அக்​கட்​சிகளின் தலை​வர்​களை முதல்​வர் சந்​தித்து ஆலோ​சனை நடத்​தினார். இந்த சூழ்​நிலை​யில் கூட்​டணி எம்​எல்​ஏக்​களு​டன் ஆலோ​சனை நடத்​து​வது முக்​கியத்​து​வம் பெற்​றுள்ளது.

<div class="paragraphs"><p>முதல்​வர் விஜய்</p></div>
திருப்​பரங்​குன்​றம் தீபத்​தூண் விவகாரம்: உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்​கல்

X