“அம்மாவையோ, சகோதரிகளையோ இழிவாகப் பேசினால் சும்மா இருக்க மாட்டேன்” - முதல்வர் விஜய் ஆவேசம்

“அம்மாவையோ, சகோதரிகளையோ இழிவாகப் பேசினால் சும்மா இருக்க மாட்டேன்” - முதல்வர் விஜய் ஆவேசம்
Updated on: 
2 min read

தாராபுரம்: பெண்​களை இழி​வாக​வும் அவதூறாக​வும் பேசுபவர்​களுக்கு மக்​கள் வாக்​களித்து ஆதர​வளிக்​கக் கூடாது என்று தாராபுரம் தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் முதல்​வர் விஜய் பேசி​னார்.

திருப்​பூர் மாவட்​டம் தாராபுரம் தொகுதி இடைத்​தேர்​தல் பிரச்​சா​ரத்​தின் கடைசி நாளான நேற்று (அக்​.4) தவெக தலை​வரும், முதல்​வரு​மான விஜய் ரோடு ஷோ நடத்தி மக்​களிடம் ஆதரவு திரட்​டி​னார். சென்​னை​யில் இருந்து தனி விமானத்​தில் கோவை வந்த முதல்​வர், அங்​கிருந்து ஹெலி​காப்​டரில் தாராபுரம் வந்தார். அங்​கிருந்த பிரச்​சார வேனில் ஏறி ரோடு ஷோவை தொடங்​கிய விஜய், சாலை​யில் இரு​புற​மும் திரண்​டிருந்த மக்​களை பார்த்து கையசைத்​தும், வணக்​கம் தெரி​வித்​த​படி​யும் சென்​றார்.

தாராபுரம் நகரின் மையப் பகு​தி​யில் திரண்​டிருந்த மக்​களிடையே அவர் பேசி​ய​தாவது: திமுக மற்​றும் அதன் கூட்​ட​ணிக் கட்​சிகளுக்கு வாக்​களிப்​பது என்​பது, பெண்​களை அவதூறாகப் பேசுபவர்​களை ஆதரிப்​ப​தற்​குச் சமமாகும். நமது வீட்டு தாய்​மார்​களை​யும், சகோ​தரி​களை​யும் தரக்​குறை​வாக பேசுபவர்​களை எந்​தக் காலத்​தி​லும் மன்​னிக்​கக் கூடாது.

தேர்​தல் ஆதா​யத்​துக்​காக மட்​டும் நான் இதை கூற​வில்​லை. அண்​மை​யில் தாராபுரத்​துக்கு வந்த திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின், அவரது மகன் ஆகியோர் பேசிய பேச்​சுகள் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளன. சகோ​தரி சத்​ய​பாமா குறித்து அவர்​கள் பேசிய வார்த்​தைகள் காது கொடுத்து கேட்க முடி​யாத அளவுக்கு மிக​வும் மோச​மாக உள்​ளன.

என்​னைப் பற்றி யார் என்ன விமர்​சனம் செய்​தா​லும் அதை பொறுத்​துக் கொள்​வேன். ஆனால், நம் வீட்​டுப் பெண்​களையோ அல்​லது நம்ம வீட்​டில் உள்ள அம்​மாவையோ, சகோ​தரி​களையோ இழி​வாகப் பேசி​னால் நிச்​ச​யம் சும்மா இருக்க மாட்​டேன். திமுக​வினரின் செயல்​பாடு​கள் இப்​படித்​தான் உள்​ளன. இந்த இடைத்​தேர்​தலில் அவர்​களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்​டும். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

ரேக்ளா சவாரி: வழக்​கத்​தைக் காட்​டிலும் நேற்று வெயி​லின் தாக்​கம் அதி​க​மாக இருந்​தது. ஆனாலும் வழி நெடு​கிலும் ஆயிரக்​கணக்​கான மக்​கள் திரண்டு விஜய்க்கு வரவேற்​பளித்​தனர். தாராபுரம் அமராவதி ஆற்று பாலம் அரு​கில் வந்​த​போது பிரச்​சார வேனில் இருந்து இறங்​கிய விஜய், விவ​சாயி நிறுத்​தி​யிருந்த ரேக்ளா வண்​டி​யில் ஏறி அமர்ந்து சில அடி தூரம் சவாரி செய்​தார். வழிநெடு​கிலும் பல இடங்​களில் தொண்​டர்​கள் அளித்த பரிசுப் பொருள்​களை உற்​சாக​மாக பெற்​றுக்​கொண்​டார்.

மூலனூர் செல்​லும் வழி​யில் அலங்​கரிக்​கப்​பட்ட காங்​க​யம் காளை மாடு​கள் நிறுத்​தி​யிருப்​ப​தைக் கண்ட அவர் வாக​னத்​தில் இருந்து இறங்கி சென்று காளை​களு​டன் புகைப்​படம் எடுத்​துக் கொண்​டார். மூலனூர் பகு​தி​யில் முருங்கை தோப்​புக்​குள் சென்ற முதல்​வர் விஜய், அங்​கிருந்த தொழிலா​ளர்​களிடம் கலந்​துரை​யாடி​னார். பின் கொக்கி அணிந்த மூங்​கில் கம்பு மூலம் முருங்​கைக் காய்​களை பறித்​தார். அங்கு விவ​சா​யிகள், தொழிலா​ளர்​கள் முதல்​வருடன் புகைப்​படம் எடுத்​துக்​கொண்​டனர்.

இதைத்​தொடர்ந்​து, மூலனூர் வஞ்​சி​யம்​மன் கோயிலுக்கு சென்று சாமி கும்​பிட்​டார். அங்​கிருந்து வெளியே வந்த விஜய், சுமார் அரை கி.மீ. தூரம் சாலை​யில் நடந்து சென்று கூடி​யிருந்த மக்​களிடம் வாக்கு சேகரித்​தார்.

“அம்மாவையோ, சகோதரிகளையோ இழிவாகப் பேசினால் சும்மா இருக்க மாட்டேன்” - முதல்வர் விஜய் ஆவேசம்
விறுவிறுப்பாக நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை வாக்குப் பதிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in