மேட்டூர் அணையை திறக்க வருகை தந்த முதல்வர் விஜய் - மக்கள் உற்சாக வரவேற்பு

மேட்டூர் அணையை திறக்க வருகை தந்த முதல்வர் விஜய் - மக்கள் உற்சாக வரவேற்பு
Updated on
2 min read

சேலம்: காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காகவும், குடிநீர்த் தேவைக்காகவும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதற்காக இன்று (1.9.2026) சேலம் மாவட்டத்திற்கு வருகைதந்த முதல்வர் விஜய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

டெல்டா பாசனத்​துக்கு மேட்​டூர் அணை​யை முதல்​வர் விஜய் இன்று திறந்து வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. மேட்டூர் அணையை திறப்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக சேலம் விமான நிலையம் வந்த முதல்வர் விஜய்க்கு அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து காமாலபுரத்தில் இருந்து சாலை மார்க்கமாக மேட்டூர் அணைக்கு வரும் வழியில் சாலையின் இருபுறமும் மக்கள், தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேள தாளங்கள் முழங்கவும், மலர்களைத் தூவியும் அவருக்கு வரவேபு அளிக்கப்பட்டது.

சேலம் மேச்சேரி பகுதியில் இருந்து முதல்வர் விஜய் திறந்த வேனில் நின்றபடி, கூடியிருக்கும் மக்களைப் பார்த்து கையசைத்தார். பொதுமக்களும், தவெகவினரும் திரளாக கூடி அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

மேட்டூர் அணை திறப்பு: மேட்​டூர் அணை​யில் திறக்​கப்​படும் நீரைப் பயன்​படுத்தி 12 மாவட்​டங்​களில் 17.10 லட்சம் ஏக்​கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 20-க்​கும் மேற்​பட்ட மாவட்​டங்​களுக்கு குடிநீர் ஆதா​ர​மாக விளங்​கு​கிறது. குறு​வை, சம்​பா, தாளடி பரு​வங்​களில் நெல் சாகுபடி மேற்​கொள்​வதற்கு உதவி​யாக ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை 230 நாட்​களுக்கு மொத்​தம் 330 டிஎம்சி நீர் தேவைப்​படும். நடப்​பாண்​டில் அணை​யில் போது​மான நீர்​இருப்பு இல்​லாததால் தண்​ணீர் திறக்க முடிய​வில்​லை.

கேரளா, கர்​நாடகா காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் பெய்து வரும் மழை​யால் அங்​குள்ள அணை​களுக்கு நீர்​வத்து அதி​கரித்தது. பின்​னர், கபினி, கேஆர்​எஸ் அணை​களி​லிருந்து உபரிநீர் திறப்​பால், மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்​தது. அணை​யின் நீர்​மட்​டம் 91 அடியை எட்​டி​யுள்ள நிலை​யில், இன்று (1-ம் தேதி) முதல் 45 நாட்​களுக்கு நீர் திறக்கப்படவுள்ளது. இதன்படி முதல்​வர் விஜய் முதல் முறை​யாக தண்​ணீர் திறந்து வைக்​கிறார்.

டெல்டா பாசன நீர் திறப்​புக்கு உரிய நாளான ஜூன் 12-ம் தேதி 20 முறை​யும், ஜூன் மாதத்​துக்கு முன்​பாக 11 முறை​யும் திறக்​கப்​பட்​டுள்​ளது. மேட்​டூர் அணை​யின் 93 ஆண்டு கால வரலாற்​றில், கால​தாமத​மாக 62-வது முறை​யாக இன்று பாசனத்​துக்கு தண்​ணீர் திறந்து வைக்​கப்​படு​கிறது. அணை​யில் 85 முதல் 90 அடி வரை தண்​ணீர் இருக்​கும் போது 8 முறை திறக்​கப்​பட்​டுள்​ளது.

டெல்டா பாசனத்​துக்கு ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை முழு​மை​யாக 29 முறை திறக்​கப்​பட்​டுள்​ளது. செப்​டம்​பர் மாதத்​தில் தண்​ணீர் திறப்​பது இது 4-வது முறை​யாகும். இதனிடையே அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 10,485 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்​து, மாலை​யில் 11,501 கன அடி​யாக உயர்ந்தது. 2,000 கனஅடி நீர் திறக்​கப்​பட்டு வருகிறது. நீர்​மட்​டம் 91.15 அடி​யாக உள்ளது.

மேட்டூர் அணையை திறக்க வருகை தந்த முதல்வர் விஜய் - மக்கள் உற்சாக வரவேற்பு
விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் - முதல்வர் விஜய் புகழ் வணக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in