சட்டம் - ஒழுங்கு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை: தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

சட்டம் - ஒழுங்கு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை: தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை
Updated on: 
2 min read

சென்னை: தமிழகத்​தில் நடை​பெறும் கொலைகள் மற்​றும் ஆளும் தவெக கட்​சி​யினர் மீது அடுத்​தடுத்து வரும் குற்​றச்​சாட்​டுகள் பெரும் பரபரப்பை ஏற்​படுத்தி உள்ள நிலை​யில், சட்​டம் ஒழுங்கு நிலை​யைத் தீவிர​மாகக் கண்​காணித்து நட​வடிக்கை எடுக்க உயரதி​காரி​களுக்கு முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார். மேலும் கட்சி எம்​எல்ஏ.க்களு​டன் இன்று முக்​கிய ஆலோ​சனை நடத்து​கிறார்.

தமிழகத்​தில் சட்​டம் ஒழுங்கு சீர்​குலைந்​து​விட்​ட​தாகவும் குற்​றங்​கள் அதி​கரித்​து​விட்​ட​தாகவும் திமுக, அதிமுக உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் தொடர்ந்து விமர்​சனங்​களை முன்​வைத்து வரு​கின்​றன. குறிப்​பாக தமிழகம் முழு​வதும் தீபாவளி பண்​டிகையன்று ஒரே நாளில் 11 கொலைகள் நடை​பெற்​றதாக கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் மாநிலத்​தின் சட்​டம் ஒழுங்கு நில​வரம் குறித்து முதல்​வர் விஜய், உயரதி​காரி​களு​டன் தலை​மைச் செயல​கத்​தில் நேற்று ஆலோ​சனை நடத்​தினார்.

இந்​தக் கூட்​டத்​தில் தலை​மைச் செயலர் எம்.சாய்​குமார், உள்​துறை செயலர் ஏ.கார்த்​திக், டிஜிபி மகேஷ்குமார் அகர்​வால், சட்​டம் ஒழுங்கு ஏடி​ஜிபி அன்பு, உளவுப் பிரிவு ஐஜி அஸ்ரா கார்க், சென்னை ஆணை​யர் அமல்​ராஜ் மற்​றும் துறை சார்ந்த அதி​காரி​கள் கலந்து கொண்​டனர். முதல்​வர் விஜய் தலை​மையில் சுமார் 20 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த கூட்​டத்​தில் மாநிலத்​தின் சட்​டம் ஒழுங்கு நிலைமை குறித்து விவாதிக்​கப்​பட்​டது.

சமீப காலமாக நடை​பெற்ற கொலை உட்​பட குற்ற சம்​பவங்​கள், அவற்​றின் மீதான விசா​ரணை​யின் முன்​னேற்​றம் மற்​றும் குற்​றச் செயல்​களைத் தடுப்​ப​தற்​காகக் காவல் துறை மேற்​கொண்டு வரும் நட​வடிக்​கைகள் குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டுள்​ளது.

தொடர்ந்து மாநிலத்​தின் எந்​தப் பகுதி​யிலும் சட்​டம், ஒழுங்கு பிரச்​சினைகள் ஏற்​படாதவாறு காவல் துறை​யினர் உரிய முன்​னெச்​சரிக்கை மற்​றும் கண்​காணிப்பு நட​வடிக்​கைகளை தீவிரப்​படுத்த வேண்​டும் என்று முதல்​வர் விஜய் அறி​வுறுத்​தி​ய​தாகத் தெரி​கிறது.

குறிப்​பாக, பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதிரான குற்​றங்​கள் தொடர்​பாகப் புகார்​கள் பெறப்​பட்​டால், அவற்​றின் மீது எவ்​வித தாமதமுமின்றி உடனே நட​வடிக்கை எடுக்க வேண்​டும் என காவல் துறை அதி​காரி​களுக்கு முதல்​வர் விஜய் உத்​தர​விட்​ட​தாகவும் அலட்​சி​ய​மாகப் பணி​யாற்​றும் அதி​காரி​கள் மீது கடும் நட​வடிக்கை எடுக்​கப்​படும் என்று எச்​சரித்​துள்​ள​தாகவும் தகவல்​கள் வெளியாகி​யுள்​ளன.

இது ஒருபுறம் இருக்க ஆளும் கட்​சி​யினரின் செயல்​பாடுகளும் சர்ச்​சைக்​குள்​ளாகி வரு​கின்​றன. குறிப்​பாக சட்​டப்​பேரவைத் துணைத் தலை​வர் ரவிசங்​கர், கள்​ளக்​குறிச்சி தொகுதி தவெக எம்​எல்ஏ அருள் விக்​னேஷ் மீதான குற்​றச்​சாட்​டுகள் அதிர்​வலைகளை ஏற்​படுத்தி உள்​ளன.

திருச்சி மாவட்​டம் துறையூர் கண்​ணபிரான் காலனியைச் சேர்ந்த கார்த்​திக் குமார் என்​பவர் தனது பகுதி​யில் ஒரு வார​மாகக் குடிநீர் விநியோகம் சீராக நடை​பெறவில்லை எனவும், குப்​பைகள் அகற்​றப்​பட​வில்லை எனவும் இது​தொடர்​பாக நட​வடிக்கை எடுக்​குமாறு தொகுதி எம்​எல்​ஏவும், சட்​டப்​பேரவை துணைத் தலை​வரு​மான ரவிசங்​கரை நேரில் சந்​தித்து முறை​யிட்​டுள்​ளார். அப்​போது, கார்த்​திக் குமாரை ரவிசங்​கர் தகாத வார்த்​தைகளால் திட்டி, தாக்கி விரட்​டிய​தாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

ஆனால் திடீரென, “பேரவைதுணைத் தலை​வர் தன்​னைத் தாக்​க​வில்லை” என்று கார்த்திக் குமார் பேசுவது போன்ற மற்றொரு வீடியோ ஒன்று வெளியானது. பின்​னர், “தனது உயிருக்​கும் குடும்​பத்​தினருக்​கும் அச்​சுறுத்​தல் விடுக்​கப்​பட்​ட​தால் வேறு வழி​யின்றி அந்த வீடியோவில் அவ்​வாறு பேசினேன்” என்று கார்த்​திக் குமார் தெரி​வித்​துள்​ளார்.

மேலும், “மண்​ணச்​சநல்​லூர் காவல் ஆய்​வாளர் கிருபாநிதி தன்னை வலுக்​கட்​டாய​மாக ரவிசங்​கர் வீட்​டுக்கு அழைத்​துச் சென்​றார். அங்கு ரவிசங்​கரும் காவல் ஆய்​வாள​ரும் இணைந்து தன்னை மிரட்​டினர்” என்று குற்​றம் சாட்​டியுள்​ளார்.

இது ஒருபுறம் இருக்க கள்​ளக்​குறிச்சி தொகுதி தவெக எம்​எல்ஏ அருள் விக்​னேஷ், மாவட்ட ஆட்சி​யர் பத்​மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்​செய்​தி​கள் அனுப்​பிய​தாகவும், அவரது வீட்​டுக்கே சென்று பிரச்​சினை செய்​த​தாகவும், இதன் காரண​மாக ஆட்சி​யர் வீட்​டுக்​குப் போலீஸ் பாது​காப்​புப் போடப்​பட்​டுள்​ள​தாகவும் எதிர்க்​கட்​சிகள் குற்​றம் சாட்​டின. இந்த 2 விவகாரங்​களும் தமிழக அரசி​யலில் புயலைக் கிளப்​பியுள்​ளன.

இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலு​வல​கத்​தில் இன்று அக்​கட்​சி​யின் ஒழுங்கு நட​வடிக்​கைக் குழு கூட்​டம் நடை​பெறுகிறது. இக்​கூட்​டத்​துக்கு முதல்​வர் விஜய் தலைமை வகிக்​கிறார். கட்​சி​யின் பொதுச் செய​லா​ள​ரும் அமைச்​சரு​மான என்.ஆனந்த் உள்​ளிட்ட முக்​கிய நிர்​வாகி​கள் பங்​கேற்று சம்​பந்​தப்​பட்ட எம்​எல்ஏ.க்களிடம் விசா​ரணை நடத்த உள்ளனர்.

இக்​கூட்​டத்​தில் தவெக எம்​எல்ஏ-க்​கள் அனைவரும் தவறாமல் பங்​கேற்க வேண்​டும் என்று கட்சி தலைமை உத்​தர​விட்​டுள்​ளது. இதில் சம்​பந்​தப்​பட்ட எம்​எல்​ஏக்​கள் மீது கட்சி ரீதி​யி​லான ஒழுங்கு நட​வடிக்கை எடுக்​கப்​பட வாய்ப்​புள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. மேலும் இந்​தக் கூட்​டத்​தில், எம்​எல்​ஏக்​கள் தொடர்ந்து சர்ச்​சைகளில் சிக்​கு​வதைத் தடுப்​பது, பொது​மக்​களிடம் எப்​படி நடந்து கொள்​வது, கட்​சி​யின் நற்​பெயருக்​குப் பாதிப்பு ஏற்​படா​மல் செயல்​படுவது எப்​படி என்​பது உள்​ளிட்ட விவகாரங்​கள் குறித்து விஜய்​யும், என்.ஆனந்தும் ஆலோ​சனை நடத்த உள்​ளனர்.

443 ரவுடி உட்பட 955 பேர் கைது: சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதல்வர் விஜய், அதிகாரிகளுடன் அவரச ஆலோசனை நடத்திய நிலையில் மாநிலம் முழுவதும் கடந்த 48 மணி நேரத்தில் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் 443 ரவுடிகள் உட்பட 955 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் 8,626 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக் கண்காணித்து போலீஸார் சோதனை நடத்தினர். இதில் 443 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். அதேபோல் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 77 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொலை மற்றும் தாக்குதல் தொடர்பான பழைய வழக்குகளில் தொடர்புடைய 167 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். பொது இடங்களில் மது அருந்தியதாக 195 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றவியல் கும்பலுடன் தொடர்புடைய 1,057 பேர் கண்காணிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டனர். தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட 73 பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகளும் இந்த 2 நாள் சிறப்பு நடவடிக்கையின்போது நிறைவேற்றப்பட்டன.

சட்டம் - ஒழுங்கு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை: தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை
தவெகவின் 6 மாத கால ஆட்சி எப்படி? - ஒரு விரைவுப் பார்வை

X