​மாற்று அரசி​யலுக்​கான அடித்தளமா? - கவனம் ஈர்க்கும் தவெக அரசின் முதல் 100 நாட்கள்

​மாற்று அரசி​யலுக்​கான அடித்தளமா? - கவனம் ஈர்க்கும் தவெக அரசின் முதல் 100 நாட்கள்
Updated on
3 min read

சென்னை: தமிழகத்​தில் நடந்​து​முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் முதல்வர் விஜய் தலை​மையி​லான தமிழக வெற்றிக் கழகம்​(தவெக), 108 தொகு​தி​களில் வென்று தனிப்​பெரும் கட்​சி​யாக உருவெடுத்​தது.

தமிழக அரசி​யல் களத்​தில் பல தசாப்​தங்​களாக ஆதிக்​கம் செலுத்தி வந்த இருபெரும் திரா​விடக் கட்​சிகளை ஓரங்​கட்​டிவிட்​டு, கட்​சித் தொடங்​கிய இரண்டே ஆண்​டு​களில் ஆட்​சிக் கட்​டிலில் அமர்ந்து புதிய வரலாற்று சாதனையை தவெக படைத்​தது. எனினும்​,​போ​திய பெரும்​பான்மை இல்​லாத​தால் ஆட்​சி​யமைப்​ப​தில் பல்​வேறு சிக்​கல்​களை அந்​தக் கட்​சி​யின் தலை​வர் விஜய் சந்​தித்​தார். நீண்ட களேபரங்​களுக்கு பின்​னர், இறு​தி​யில் காங்​கிரஸ், விசிக உள்​ளிட்ட சில கட்​சிகளின் ஆதரவுடன் தமிழக முதல்​வ​ராக விஜய் கடந்த மே 10-ல் பொறுப்​பேற்​றார்.

9 அமைச்​சர்​களு​டன் தவெக ஆட்சியின் நிர்​வாகப் பயணம் தொடங்​கியது. அதன்​பின் அமைச்சரவை இரு​முறை விரி​வாக்​கம் செய்​யப்பட்​டு, விசிக, இந்திய யூனியன் முஸ்​லிம் லீக், காங்​கிரஸ் ஆகிய கூட்​டணி கட்​சிகளுக்​கும் அமைச்​சர​வை​யில் இடம் வழங்​கப்​பட்டது.

தொடர்ந்து மே 13-ம் தேதி சட்​டப்​பேர​வை​யில் நடை​பெற்ற நம்பிக்கை வாக்​கெடுப்​பில், 25 அதி​முக எம்​எல்​ஏ.க்​கள் உள்ளிட்டோரின் ஆதர​வுடன் 144 வாக்​கு​கள் பெற்று பெரும்பான்மையை முதல்​வர் விஜய் நிரூபித்​தார். தற்​போது முதல்​வ​ராக விஜய் பொறுப்​பேற்று நேற்​றுடன் 100 நாள் முடிந்த நிலை​யில், இந்த ஆட்​சி​யின் குறுகிய​கால சிறப்பம்​சங்களைக் காணலாம்.

முக்​கிய அறி​விப்​பு​கள்

முதல்​வ​ராக விஜய் பதவி​யேற்ற முதல்​ நாளி​லேயே, வீடு​களுக்கு 200 யூனிட் இலவச மின்​சா​ரம், பெண்​களின் பாது​காப்​புக்கான சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​ படை, மாவட்​டம் தோறும் போதைப் பொருள் தடுப்புப் படை ஆகிய 3 முக்​கிய அறி​விப்​பு​களை வெளி​யிட்டு அசத்​தி​னார். தொடர்ந்து பிற மாநிலங்​களுக்கு ஜல்​லி, எம்​-சாண்ட் உட்பட கட்​டுமானம் சார்ந்த கனிமங்​கள் கொண்டு செல்ல 3 மாதங்​களுக்கு தற்​காலிக​மாக தடை விதிக்கப்பட்​டது.

இதுத​விர திரு​மண​மாகும் பெண்​களுக்கு 8 கிராம் தங்​கம், பட்டுப்புடவை வழங்​கும் அண்​ணனின் சீர் திட்​டம், அரசு மருத்துவமனை​களில் பிறக்​கும் குழந்​தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்​கும் ‘தாய்​மாமன் தங்க மோதிரம்’ திட்​டம், காலை உணவுத் திட்​டம் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரி​வாக்​கம், பயிர்​கடன் தள்​ளுபடி, 717 டாஸ்மாக் கடைகள் மூடல் உள்​ளிட்ட பல்​வேறு அறி​விப்​பு​கள் வெளி​யாகி​யுள்​ளன.

திடீர் ஆய்​வு​கள்

வார​நாட்​களில் தின​மும் தலை​மைச்​செயல​கம் வந்து காலை முதல் மாலை வரை அங்​கேயே இருந்து அலு​வல் பணி​களை மேற்​கொள்​வது முதல்​வர் விஜய்​யின் பணிஇயல்​பாக இருக்​கிறது. அத்​துடன் வேலையை முடித்​து​விட்​டு, மாலை வீடு திரும்​பும் நேரங்களில் திடீர் ஆய்​வு​கள் மேற்​கொள்​வதை வாடிக்​கை​யாகக் கொண்​டுள்​ளார்.

முதலில் தலை​மைச்​செயலக வளாகத்​தில் தொடங்​கி, பின்பு நெம்​மேலி​யில் உள்ள கடல்​நீரை குடிநீ​ராக்​கும் ஆலை, சென்னை எழும்​பூரில் உள்ள அரசு குழந்​தைகள் நல மருத்​து​வ​மனை, சைதாப்​பேட்​டை​யில் உள்ள மாணவர் விடு​தி​யில் முன்​னறி​விப்​பின்றி திடீர் ஆய்​வு​களை மேற்​கொண்​டார். அங்கு குறை​களை கேட்​டறிந்து உடனடி தீர்​வு​களை ஏற்​படுத்​தி​னார். அதே​போல், சென்னை கோயம்​பேட்​டில் உள்ள கழி​வுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யம், மெட்ரோ ரயில் நிலை​யம், ஒரகடம் சிப்​காட், தனி​யார் தொழிற்​சாலைகளி​லும் அவர் ஆய்வு மேற்​கொண்​டார்.

பட்​ஜெட்

தவெக​வின் முதல் பொது மற்​றும் வேளாண் பட்​ஜெட் ஆகஸ்ட் 5, 6-ம் தேதி​களில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதில் நூறு நாள் வேலை நாட்​களின் எண்​ணிக்கை 150-ஆக உயர்த்​தப்​படு​தல், கர்ப்​பிணி பெண்​களுக்​கான ‘தாய் கேர்’ சேவை மையங்​கள், கல்​லூரி மாணவர்​களுக்​கான வெற்றி மடிக்​கணினி திட்​டம், 10,000 பள்​ளி​களில் ‘சூப்​பர் க்ளீன் சூப்​பர் கேம்​பஸ்’ திட்​டம், வெற்றி வீடு திட்​டம் மூலம் 70,000 வீடு​கள் ரூ.3,500 கோடி​யில் கட்​டப்​படு​தல், ஏக்​கருக்கு ரூ.3,000 உழவு மானி​யம் உட்பட பல்​வேறு முக்​கிய அறி​விப்​பு​கள் வெளி​யிடப்​பட்​டன. 2036-க்​குள் 1.5 டிரில்​லியன் டாலர் பொருளா​தார நோக்​கம் இலக்​காக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

ரூ.1 லட்​சம் கோடி முதலீடு​கள்

தவெக அரசு பொறுப்​பேற்ற 100 நாட்​களில் தமிழகத்​தில் ரூ.1.02 லட்​சம் கோடிக்​கும் மேலான தொழில் முதலீடு​கள் ஈர்க்​கப்​பட்​டுள்​ளன. இதன்​மூலம் 1.22 லட்​சம் புதிய வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாக்​கப்பட உள்​ளன. இதற்​காக சென்​னை​யில் கடந்த வாரம் நடத்​தப்​பட்ட ‘வெற்றி தமிழ்​நாடு’ முதலீட்​டாளர்​கள் மாநாட்​டில் மட்​டும் முதல்​வர் விஜய் முன்​னிலை​யில் ரூ.67,452 கோடி மதிப்​பிலான 97 புதிய புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. இந்த முதலீடுகள் சென்​னை, காஞ்​சிபுரம் மட்​டுமின்றி கடலூர், தென்​காசி, விருதுநகர், புதுக்​கோட்டை உள்​ளிட்ட 23 மாவட்​டங்​களில் பரவலாக மேற்​கொள்​ளப்பட உள்​ளன.

மான்​டேக் சிங் அலு​வாலியா குழு

முன்​ன​தாக, மாநிலத்​தின் கடன் ரூ.10 லட்​சம் கோடி​யாக உயர்ந்துள்​ளது என்​பதை வெள்ளை அறிக்கை மூலம் தமிழக அரசு வெளிப்​படுத்​தி​யது. இதையடுத்து தமிழகத்​தின் வரி மற்​றும் வரி அல்​லாத வரு​வாயை அதி​கரிப்​ப​தற்​கான செயல் திட்​டத்தை வகுக்க பொருளா​தார அறிஞர் மான்​டேக் சிங் அலு​வாலியா தலை​மை​யில் வரு​வாய் மேம்​பாட்​டுக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த குழு​வினர் 3 மாதங்​களில் வழங்​க​வுள்ள பரிந்​துரை அறிக்​கை​யின்​படி அடுத்​தகட்ட நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்பட உள்​ளன.

தனித் தீர்​மானங்​கள்

மத்​திய அரசு வரி​களின் பகிர்வு மேற்​கொள்​ளும்போது தமிழகத்​துக்கு நியாய​மான, உரிய நிதி பகிர்வை வழங்​குதல், அரசு அலு​வல​கங்​கள் மற்​றும் பொது நிறு​வனங்​களில் நிகழ்ச்சி துவங்​கும் முன்​பாக தமிழ்த்​தாய் வாழ்த்து கட்​டா​யம் பாடு​தல், நீட் தேர்வை ரத்து செய்து விட்டு பிளஸ் 2 மதிப்​பெண் அடிப்​படை​யில் மருத்​துவ மாணவர் சேர்க்கை நடத்​துதல், தொகுதி மறு​வரையறை செய்​யாமல் பெண்​களுக்கு 33 சதவீத இடஒதுக்​கீட்டை கால தாமதம் இன்றி வழங்​குதல் என்பன உள்​ளிட்ட பல்​வேறு தனித்​தீர்​மானங்​கள் சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளன. மேலும், சட்​டப்​பேரவை நிகழ்​வு​கள் முழு நேரலை​யில் ஒளிபரப்பு செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

தவெக அரசு பொறுப்​பேற்று 100 நாட்​கள் முடிந்​து​விட்​டதைக் குறிக்​கும் வகை​யில், அரசின் சாதனை​களை விளக்​கும் 2 சிறப்பு நூல்​களை முதல்​வர் விஜய் தலை​மைச் செயல​கத்​தில் நேற்று வெளி​யிட்​டார்.

செய்தி மக்​கள் தொடர்​புத் துறை சார்​பில் தயாரிக்கப்​பட்ட ‘மக்கள் நலனை இலக்​காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்’ மற்​றும் ‘ஒரு புதிய தொடக்​கம்’ என்ற புத்தகம் ஆகிய​வற்​றில் கடந்த 100 நாட்​களில் நிறைவேற்​றப்​பட்ட மக்​கள் நலத்​திட்​டங்​கள், துறை​வாரி​யான சாதனை​கள் ஆவணப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. பல்​வேறு அரசி​யல் சவால்​களைக் கடந்​து, தனது முதல்​ 100 நாட்​களில்​ தவெக அரசு காட்​டி​யுள்​ள செயல்திறன்​ தமிழக அரசி​யலில்​ பெரும் நம்​பிக்​கை​யையும் எதிர்பார்ப்பையும் ஏற்​படுத்​தி​ இருக்கிறது.

​மாற்று அரசி​யலுக்​கான அடித்தளமா? - கவனம் ஈர்க்கும் தவெக அரசின் முதல் 100 நாட்கள்
காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in