73,000 குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை: பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் உடனடியாக விநியோகம் செய்ய நடவடிக்கை
தமிழகம் முழுவதும் 73,000 குடும்பங்களுக்கு புதிய மின்னணு ரேஷன் அட்டை விநியோகத்தை சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட எம்கேபி நகர் சிந்தாமணி கூட்டுறவு நியாயவிலைக் கடையில் முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களையும் வழங்கினார். உடன் அமைச்சர்கள் வெங்கடரமணன், காந்திராஜ், கூட்டுறவு, உணவுத் துறைச் செயலர் அமுதா.

தமிழகம் முழுவதும் 73,000 குடும்பங்களுக்கு புதிய மின்னணு ரேஷன் அட்டை விநியோகத்தை சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட எம்கேபி நகர் சிந்தாமணி கூட்டுறவு நியாயவிலைக் கடையில் முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களையும் வழங்கினார். உடன் அமைச்சர்கள் வெங்கடரமணன், காந்திராஜ், கூட்டுறவு, உணவுத் துறைச் செயலர் அமுதா.

Updated on
2 min read

சென்னை: தேர்​தல் வெற்​றிக்​குப் பிறகு முதல்​வர் விஜய், முதல்​முறை​யாக தனது பெரம்​பூர் தொகு​திக்கு நேற்று சென்​றார். அங்கு புதுப்​பிக்​கப்​பட்ட பெரம்​பூர் சட்​டப்​பேரவை உறுப்​பினர் அலு​வல​கத்​தை​யும், புதி​தாக அமைக்​கப்​பட்​டுள்ள இ-சேவை மையத்​தை​யும் திறந்து வைத்​தார். அங்​குள்ள நியாய​விலைக் கடை​யில் நடை​பெற்ற நிகழ்​வில், தமிழகம் முழு​வதும் 73,000 குடும்பங்களுக்கு புதிய மின்​னணு ரேஷன் அட்​டைகள் வழங்​கும் திட்​டத்தை தொடங்கி வைத்​தார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சென்னை பெரம்​பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டு, இரண்​டிலும் வெற்றி பெற்ற தவெக தலை​வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தார். இதைத் தொடர்ந்து முதல்​வ​ராகப் பதவி​யேற்​றார். கடந்த ஜூன் 1-ம் தேதி திருச்​சிக்கு சென்​று, தொகுதி வாக்​காளர்​களுக்கு நன்றி தெரி​வித்​தார்.

இந்​நிலை​யில், தான் போட்​டி​யிட்டு வென்ற சென்னை பெரம்​பூர் தொகு​திக்கு நேற்று முதல்​முறை​யாக சென்​றார். தொகுதி மக்​கள் அவருக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர். வியாசர்​பாடி சர்மா நகர் முதல் பிர​தான சாலை​யில் புதுப்​பிக்​கப்​பட்​டுள்ள பெரம்​பூர் எம்​எல்ஏ அலு​வல​கம் மற்​றும் அங்கு புதி​தாக அமைக்​கப்​பட்​டுள்ள இ-சேவை மையம் ஆகிய​வற்றை முதல்​வர் விஜய் திறந்து வைத்து பார்​வை​யிட்​டார். எம்​எல்ஏ அலு​வல​கத்​தில் மாற்​றுத் திற​னாளி​கள் எளி​தாக வந்து செல்​லும் வகை​யில் சாய்தள வசதி, அவர்​களுக்​கான சக்கர நாற்​காலிகள் உள்​ளிட்ட பல்​வேறு வசதி​கள் செய்யப்பட்டுள்ளன.

இ-சேவை மையத்​தில் சான்​றிதழ் உள்​ளிட்ட பல்​வேறு சேவை​களுக்​காக விண்​ணப்​பிக்க வந்த மக்​களிடம் முதல்​வர் கலந்​துரை​யாடி​னார். விண்​ணப்​பித்த 5 பேருக்கு உரிய சான்​றிதழ்​களை உடனடி​யாக வழங்​கி​னார்.

ரூ.3 கோடியில் திட்டங்கள்: எம்​எல்ஏ தொகுதி மேம்​பாட்​டுத் திட்​டத்​தின்​கீழ் ரூ.3 கோடி மதிப்​பீட்​டில் பெரம்​பூர் தொகு​தி​யில் பல்​வேறு வளர்ச்​சித் திட்​டப் பணி​களை மேற்​கொள்​வதற்​கான தனது பரிந்​துரைக் கடிதத்தை மாநக​ராட்சி ஆணை​யரிடம் வழங்​கி​னார். தொடர்ந்​து, பெரம்​பூர் தொகு​திக்கு உட்​பட்ட எம்​கேபி நகர் சிந்​தாமணி கூட்​டுறவு நியாய​விலைக் கடையைப் பார்​வை​யிட்​டார்.

தமிழகம் முழு​வதும் ரேஷன் அட்டை கோரி விண்​ணப்​பித்​தவர்​களில் 73 ஆயிரம் குடும்பங்களுக்கு புதிய மின்​னணு ரேஷன் அட்​டைகள் வழங்​கும் திட்​டத்தை தொடங்கி வைத்​தார். இதன் ஒரு பகு​தி​யாக, பெரம்​பூர் தொகு​தி​யைச் சேர்ந்த 50 குடும்​பங்​களுக்குபுதிய ரேஷன் அட்​டைகளை வழங்​கி​னார். அட்​டை​தா​ரர்​களுக்கு அரிசி மற்​றும் இதர உணவுப் பொருட்​களையும் வழங்​கி​னார்.

திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்ததை அடுத்து, மாவட்​டங்​களுக்​குரிய ஒப்​புதல் அளிக்​கப்​பட்ட புதிய ரேஷன் அட்​டைகளை அந்​தந்த மாவட்​டங்​களில் உடனடி​யாக வழங்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.வியாசர்​பாடி​யில் ரூ.47.50 கோடி​யில் செயல்​பட்​டு​வரும் மாநகர் போக்​கு​வரத்​துக் கழகமின்​சா​ரப் பேருந்து பணிமனையையும் முதல்வர் பார்​வை​யிட்​டார். பேருந்​துகளுக்கு எவ்​வாறு சார்ஜ் ஏற்​றப்​படு​கிறது என்​ப​தை​யும் பார்​வை​யிட்​டு, அதுகுறித்து கேட்​டறிந்​தார்.

முதல்​வர் அறி​வுறுத்​தலின்​படி மாநகர் போக்​கு​வரத்​துக் கழகம் சார்​பில், இனிவரும் காலங்​களில் குளிர்​சாதன வசதியுடன் கூடிய தாழ்தள மின்​சா​ரப் பேருந்​துகள் கொள்​முதல் செய்யப்​பட்டுபயணி​களின் வசதிக்​காக இயக்​கப்​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த நிகழ்​வு​களில், அமைச்​சர்​கள் செங்​கோட்​டையன், ஆதவ் அர்​ஜு​னா, வெங்​கடரமணன், விஜய் தமிழன் பார்த்​திபன், காந்​தி​ராஜ், குமார், எம்​எல்​ஏக்​கள், நகராட்சி நிர்​வாகத் துறை செயலர் ககன்​தீப் சிங் பேடி, போக்​கு​வரத்து துறைச் செயலர் வள்​ளலார், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்​குநர் ஆனந்த், சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் சமீரன், மாவட்ட ஆட்​சி​யர் மாலதி ஹெலன், மாநகர்​ போக்​கு​வரத்​துக்​ கழக மேலாண்​மை இயக்​குநர்​ மோகன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

2.28 கோடி குடும்ப அட்டைகள்: தமிழகத்​தில் உள்ள 39 மாவட்​டங்​களில் மொத்​தம் 318 தாலு​காக்​கள் உள்​ளன. இதில் 34,908 நியாய​விலைக் கடைகள் செயல்​படு​கின்​றன. தற்​போதைய நில​வரப்​படி 2 கோடியே 28 லட்​சத்து 53 ஆயிரத்து 037 ரேஷன் அட்​டைகள் உள்​ளன. இவற்றின் மூலம் மொத்தம் 7.01 கோடிக்கு மேற்​பட்​டோர் பயன்​பெறுகின்​றனர். இதில், அந்த்​யோதயா அன்னயோஜனா (ஏஏஒய்) திட்​டத்​தின் ​கீழ் 18.62 லட்​சம் ரேஷன் அட்​டைகள் மூலம் 61.76 லட்​சம் பயனாளி​கள் உள்​ளனர். மேலும், 99.44 லட்​சம் முன்​னுரிமை ரேஷன் அட்​டைகள் (பிஎச்​எச்) வாயி​லாக 3.02 கோடி பேர் பயன்​பெற்று வருகின்​றனர்​ என்பது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>தமிழகம் முழுவதும் 73,000 குடும்பங்களுக்கு புதிய மின்னணு ரேஷன் அட்டை விநியோகத்தை சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட எம்கேபி நகர் சிந்தாமணி கூட்டுறவு நியாயவிலைக் கடையில் முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களையும் வழங்கினார். உடன் அமைச்சர்கள் வெங்கடரமணன், காந்திராஜ், கூட்டுறவு, உணவுத் துறைச் செயலர் அமுதா.</p></div>
“ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருக்கும்; கப்பல்களுக்கு 20% கட்டணம்” - ட்ரம்ப் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in