உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை ரூ.7,000 - அரசாணை வெளியீடு

உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை ரூ.7,000 - அரசாணை வெளியீடு

கோப்புப் படம் 

Updated on: 
1 min read

சென்னை: உப்பளத் தொழிலாளர்களுக்கான மழைக்கால நிவாரணத் தொகையை ரூ.5,000-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதல்வர் விஜய் தலைமையிலான அரசு ‘வெற்றித் தமிழகம் தொலைநோக்குப் பார்வை’ என்ற திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தில், உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களுடைய நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் அவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5,000-லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்த வழிவகை செய்யப்பட்டது.

அதனடிப்படையில், தொழில் துறை அமைச்சர் 25.08.2026 அன்று நடைபெற்ற தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மானியக்கோரிக்கையின்போது, ‘உப்பளத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆண்டொன்றுக்குத் தற்போது வழங்கப்பட்டுவரும் மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5,000-லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, உப்பளத் தொழிலாளர்கள் மழைக்காலத்தில் உப்புத் தொழிலில் ஈடுபட முடியாத சூழலில் அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு வழங்கப்பட்டுவரும் மழைக்கால நிவாரணத்தொகை ரூ.5,000-லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தி வழங்க முதல்வரால் ஆணையிடப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படும். இதன்படி 2026-2027-ஆம் ஆண்டில் 23,979 தொழிலாளர் குடும்பங்கள் பயனடைவார்கள். இதன்மூலம் இந்த ஆண்டுக்கு ஏற்படும் 16.78 கோடி ரூபாய் செலவினை அரசே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை ரூ.7,000 - அரசாணை வெளியீடு
ஜம்மு காஷ்மீரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை; மற்றொருவர் சுற்றி வளைப்பு

X