வடகிழக்குப் பருவ மழை தீவிரம்: ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

வடகிழக்குப் பருவ மழை தீவிரம்: ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்​தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி தீவிரம் அடைந்​துள்ள நிலை​யில், முன்​னெச்​சரிக்கை நட​வடிக்​கைகளைத் தமிழக அரசு முடுக்​கி​விட்​டுள்​ளது. இந்​நிலை​யில் முதல்​வர் விஜய் சென்னை எழில​கத்​தில் உள்ள பேரிடர் மேலாண்​மைத் துறை​யின் மாநில அவசர கால செயல்​பாட்டு மையத்தை நேற்று பார்​வை​யிட்​டார். அப்​போது, சென்​னையைத் தவிர பிற மாவட்​டங்​களில் மேற்​கொள்​ளப்​பட்​டுள்ள முன்​னெச்​சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு செய்​தார்.

தொடர்ந்து மையத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள ஒருங்​கிணைந்த பல்​வகைப் பேரிடர் கண்​காணிப்​புக் கட்​டமைப்​பையும் அவர் பார்​வை​யிட்​டார். இதையடுத்து வானிலை ஆய்வு மையம் மிக கனமழை எச்​சரிக்கை விடுத்​துள்ள மாவட்​டங்​களின் ஆட்சி​யர்​களு​டன் காணொளிக் காட்சி வாயி​லாக முதல்​வர் விஜய் ஆலோ​சனை நடத்​தினார். அப்​போது, கனமழை மற்​றும் வெள்​ளத்​தால் உயி​ரிழப்​பு​கள் ஏற்​படாதவாறு பாது​காப்பு ஏற்​பாடுகளை உறுதி செய்​யுமாறு ஆட்சி​யர்​களுக்கு அறி​வுறுத்​தினார்.

மேலும், பொது​மக்​களிடம் இருந்து புகார்​களைப் பெறும் அழைப்பு மையம், அரசுத் துறைகளுக்கு இடையேயான தகவல் தொடர்பு வசதி​கள், வானிலை முன்​னறி​விப்​பு​களைக் கண்​காணிக்​கும் தொழில்​நுட்​பப் பிரிவு ஆகிய​வற்​றையும் முதல்​வர் ஆய்வு செய்​தார். அப்​போது வானிலை நில​வரங்​களைத் தொடர்ந்து கண்​காணித்து, மாவட்ட நிர்​வாகங்​கள் மற்​றும் தொடர்​புடைய துறைகளு​டன் ஒருங்​கிணைந்து செயல்​பட வேண்​டும்.

முன்​னெச்​சரிக்​கைகள் அடிப்​படை​யில் உடனடி​யாகத் தடுப்பு நட​வடிக்​கைகளை மேற்​கொண்டு, பொது​மக்​களின் உயிர் மற்​றும் உடைமை​களைப் பாது​காக்க வேண்​டும் என்​றும் முதல்​வர் விஜய் அறி​வுறுத்​தினார். இந்த ஆய்​வின் போது வரு​வாய்த் துறை அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன், தலை​மைச் செயலர் மு.சாய்​குமார், மற்றும் அரசுத்துறை அலு​வலர்​கள் உடனிருந்தனர்.

வடகிழக்குப் பருவ மழை தீவிரம்: ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை
இஸ்ரேல் சுதந்திர தின விழா: மோடிக்கு நெதன்யாகு அழைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in