முன்னாள் தலைமைச் செயலர் சுகவனேஸ்வர் மறைவு: முதல்வர் விஜய் இரங்கல்

முன்னாள் தலைமைச் செயலர் சுகவனேஸ்வர் மறைவு: முதல்வர் விஜய் இரங்கல்
Updated on: 
1 min read

சென்னை: தமிழக முன்​னாள் தலை​மைச் செயலர் சுகவனேஸ்​வர் உடல்​நலக் குறைவு காரண​மாக சென்​னை​யில் நேற்று காலமானார். அவருக்கு வயது 82.

தமிழக அரசின் பல்வேறு முக்​கிய துறைகளில் தலை​மைப் பொறுப்பு வகித்​தவர். 2002-ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி​யின்​போது தலை​மைச் செயலராக சுகவனேஸ்​வர் 175 நாட்கள் இருந்​தார். அதன்​ பின்​னர் தமிழ்​நாடு தொழில் முதலீட்டுக் கழகத்​தின் தலை​வ​ராக பணி​யாற்றி 2004-ல் ஓய்வு பெற்​றார்.

மறைந்த சுகவனேஸ்வருக்கு மனைவி உமா, மகன் சிவ பிரசாத், மகள் சிவ கிருபா ஆகியோர் உள்​ளனர். சுகவனேஸ்​வர் மறைவுக்கு முதல்​வர் விஜய் இரங்​கல் தெரி​வித்​துள்​ளார்.

‘பல முக்​கிய பொறுப்​பு​களை வகித்து திறம்​படப் பணி​யாற்​றிய​ சுகவனேஸ்​வரை இழந்து வாடும் குடும்​பத்​தினர், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்​கலை​யும், ஆறுதலை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன்’ என்று தெரி​வித்​துள்​ளார்.

முன்னாள் தலைமைச் செயலர் சுகவனேஸ்வர் மறைவு: முதல்வர் விஜய் இரங்கல்
அம்பத்தூர் ஆவின் பண்ணையில் இனிப்புகள் தயாரிக்க டெண்டர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in