அனைத்துக் குற்றங்களுமே 100 நாட்களில் நடந்தவை அல்ல: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் விளக்கம்

அனைத்துக் குற்றங்களுமே 100 நாட்களில் நடந்தவை அல்ல: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் விளக்கம்
Updated on
2 min read

சென்னை: அனைத்துக் குற்​றங்​களுமே கடந்த 100 நாட்​களில் நடந்​தவை அல்ல; ஒவ்​வொரு குற்​றத்​துக்​குப் பின்​னாலும் பல்​வேறு பிரச்​சினை​கள் இருக்​கலாம் என சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் தெரி​வித்​தார்.

சட்​டப்​பேர​வை​யில் காவல்​துறை மற்​றும் தீயணைப்பு மீட்பு பணி​கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்​துக்கு முதல்​வர் விஜய் நேற்று பதில் அளித்து பேசி​ய​தாவது: முதல்​வ​ராக இருந்​தா​லும், அமைச்​ச​ராக இருந்​தா​லும், அதி​காரி​களாக இருந்​தா​லும், எந்த அரசி​யல் அதி​காரத்​துக்​கும் காவல்​துறை​யின் சட்​டப்​பூர்வ நடவடிக்​கை​களில் தேவையற்ற தலை​யீடு இருக்​கக்​கூ​டாது என்​பதை கடுமை​யாக வலி​யுறுத்​தி​யுள்​ளேன்.

ஒரு குற்​றம் நடை​பெற்​று​விட்​டது என்​ப​தற்​காக மட்​டுமே ஒட்​டுமொத்த மாநிலத்​தின் சட்​டம் - ஒழுங்கு சீர்​குலைந்​து​விட்​டது என்று கூறி​விட முடி​யாது. தனிப்​பட்ட குற்​றச் சம்​பவத்​துக்​கும், மாநிலத்​தின் ஒட்​டுமொத்த சட்​டம் - ஒழுங்கு நிலைக்​கும் வேறு​பாடு இருக்​கிறது.

ஏனெனில், அனைத்​துக் குற்​றங்​களும் கடந்த 100 நாட்​களில் நிகழ்ந்​தவை அல்ல. ஒவ்​வொரு குற்​றத்​துக்​குப் பின்​னாலும் ஒரு குடும்​பப் பிரச்​சினை, சொத்து தகராறு, முன் விரோதம், பழி​வாங்​கும் மனநிலை, போதைப்​பொருள் பயன்​பாட்​டின் தாக்​கம் என எது​வாக​வும் இருக்​கலாம்.

கடந்த காலங்​களில் ஏற்​பட்ட சட்​டத்​தின் மீது பயமில்​லாதது, சிலரின் ஆதிக்​கத்​தின் கீழ் காவல்​துறை​யின் செயல்​பாடு, போதை கலாச்​சார வளர்ச்சி போன்​றவை​களும், சமூகக் கட்​டுப்​பாடு குறைதல், சாதி அடை​யாளம், நிலம் மற்​றும் அதி​காரத்​தின் மீதான போட்​டி, கலப்​புத் திரு​மணத்​துக்கு எதிர்ப்​பு, உள்​ளூர் அதி​காரப் போட்​டி, அரசி​யல் மற்​றும் பொருளா​தார ஆதிக்​கம், சமூக வலையமைப்​பு​களின் தாக்​கம் போன்ற பல்​வேறு சமூகக் காரணி​களும் குற்​றங்​களுக்​குப் பின்​னணி​யாக இருக்​கலாம்.

இன்று சைபர் குற்​றங்​களும் நவீன சட்​டம் ஒழுங்​கின் மிகப்​பெரிய சவாலாக உரு​வெடுத்​துள்​ளன. எனவே, சைபர் குற்​றங்களைத் தடுப்​ப​தற்​கு அனை​வருக்​கும் டிஜிட்டல் பாது​காப்பு குறித்த கல்வி வழங்​கப்பட வேண்​டும். ‘போதைக் கலாச்​சா​ரம்’ என்ற ஒற்றை வார்த்​தையைக் கூறி ஒட்​டுமொத்த மாணவ சமு​தா​யத்​தை​யும் குறை​கூறி​விட்டு நாம் தப்​பித்​துக்​கொள்​வது ஒரு சிறந்த தலை​மைப் பண்பு அல்ல.

இது​ போன்ற சம்​பவங்​களால் மாணவனின் உயிர் போனது மட்​டுமில்​லாமல், அதில் சம்​பந்​தப்​பட்ட அனை​வரின் வாழ்க்​கை​யும் கேள்விக்​குறி​யாகி விடு​வதை மாணவர்​கள் உணர​வில்லை எனில், அவர்​களுக்​குச் சரி​யான பாதை இது​வரை வகுத்​துத் தரப்​பட​வில்லை என்​பது​தான் உண்​மை. இதற்​கும் 100 நாட்​களான இந்த அரசா காரணம்?

நான் பதவி​யேற்ற முதல் நாளே மக்​களுக்கு ஊழலற்ற, வெளிப்​படை​யான, நேர்​மை​யான நிர்​வாகத்தை வழங்​கு​வதேஇந்த அரசின் முதன்​மை​யான நோக்​கம் என்று தெளி​வாக, உறு​தி​யாகக் கூறி​யுள்​ளேன். போதைப்​பொருள் கலாச்​சா​ரம் கடந்த ஆட்​சி​யாளர்​களால் கவனிப்​பாரற்று இருந்​த​தால் தற்​போது ஆழமாக வேறூன்றிமரமாக வளர்ந்து நிற்​கிறது. போதை என்கிற முழு மரத்​தை​யும் வேரோடும் வேரடி மண் ணோடும் அகற்ற வேண்​டும். அது ஒரு நாளிலோ 100 நாட்​களிலோ முடி​யும் பணி​யல்ல.

காவலர்​களின் பணிச்​சுமை​யைக் குறைத்​தல், ஊதிய ஓய்வு மற்​றும் விடுப்பு வழங்​குதல், மனநல ஆலோ​சனை, மருத்​து​வப் பரிசோதனை உள்​ளிட்ட நலத்​திட்​டங்​களை வலுப்​படுத்​தி, பணி​யின் காரண​மாக ஏற்​படும் உயி​ரிழப்​பு​களை தவிர்க்​கும் வகை​யில் தேவை​யான நடவடிக்​கைகள் எடுக்கப்​படும். காவல்​துறை​யில் உள்ள காலிப் பணி​யிடங்​களைத் துறை​வாரி​யாக​வும், மாவட்​ட​வாரி​யாக​வும் கணக்​கிட்​டுத் தேவை​யான பணி​யிடங்​களை முன்​னுரிமை அடிப்​படை​யில் நிரப்​ப நடவடிக்​கைகள் எடுக்கப்​படும்.

முந்​தைய ஆட்​சி​யில் பல்​வேறு இனங்​களில் குற்​றம்​சாட்​டப்​பட்ட நபர்​கள் ஆளுங்​கட்​சி​யைச் சேர்ந்​தவர்​கள் என்ற ஒரே காரணத்​துக்​காக உடனடி​யாக கைது செய்​யப்​ப​டா​மலும், வழக்கு தாமத​மாகவோ அல்​லது வழக்​குப்​ப​திவு செய்​யப்​ப​டா​மலோ இருந்​தார்​கள். ஆனால், தவெக ஆட்​சி​யில் எவ்​வித பாகு​பாடும் இன்​றி, குற்​றம்​சாட்​டப்​பட்​ட​வர்​கள் ஆளுங்​கட்​சியை சார்ந்​தவர்​களாக இருந்​தா​லும் அவர்​கள் மீது சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

அனைத்துக் குற்றங்களுமே 100 நாட்களில் நடந்தவை அல்ல: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் விளக்கம்
72 ஆண்டுகளில் முதன்முறை: டெல்லியில் இருந்து குஜராத்துக்கு செல்லும் தேசிய திரைப்பட விருதுகள் விழா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in