72 ஆண்டுகளில் முதன்முறை: டெல்லியில் இருந்து குஜராத்துக்கு செல்லும் தேசிய திரைப்பட விருதுகள் விழா

72 ஆண்டுகளில் முதன்முறை: டெல்லியில் இருந்து குஜராத்துக்கு செல்லும் தேசிய திரைப்பட விருதுகள் விழா
Updated on
1 min read

புதுடெல்லி: இந்திய திரைத்துறையின் மிக உயரிய விருதான தேசியத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, கடந்த 72 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாகத் தலைநகர் டெல்லிக்கு வெளியே குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ளது.

வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி நடைபெறும் 72-வது தேசியத் திரைப்பட விருதுகள் விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கவுள்ளார்.

1954-ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தொடங்கப்பட்ட இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு, தற்போது 597 அடி உயர சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள ஏக்தா நகருக்கு மாற்றப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த திரைப்படம்: ஆதித்ய சுஹாஸ் ஜம்பாலே இயக்கத்தில் வெளியான 'ஆர்டிகிள் 370' சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நடிகை: 'ஆர்டிகிள் 370' திரைப்படத்தில் நடித்ததற்காகத் தலைசிறந்த நடிகைக்கான விருதை யாமி கௌதம் வென்றுள்ளார்.

சிறந்த நடிகர்: மலையாளத் படமான 'பிரமயுகம்' படத்தில் நடித்ததற்காக நடிகர் மம்மூட்டி தனது 4-வது தேசிய விருதையும், 'சந்து சேம்பியன்' படத்தில் நடித்ததற்காகக் கார்த்திக் ஆர்யனும் சிறந்த நடிகருக்கான விருதை பெறுகின்றனர்.

சிறந்த அறிமுக இயக்குநர்: 'சுவதந்திரிய வீர் சவர்க்கர்' திரைப்படத்தை இயக்கிய ரன்தீப் ஹூடாவுக்குச் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது வழங்கப்படுகிறது.

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான தெலுங்கு படமான 'கல்கி 2898 ஏ.டி' சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக தேர்வாகியுள்ளது.

தேசிய ஒருங்கிணைப்பு திரைப்படம்: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' திரைப்படம் தேசிய மற்றும் சமூக விழுமியங்களை வலியுறுத்தும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது.

72 ஆண்டுகளில் முதன்முறை: டெல்லியில் இருந்து குஜராத்துக்கு செல்லும் தேசிய திரைப்பட விருதுகள் விழா
“சர்க்காரியா கமிஷன் பற்றி நேருக்கு நேர் விவாதிக்க முதல்வர் விஜய் தயாரா?” - ஆர்.எஸ்.பாரதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in