இறுதி ஊர்வலத்தில் வி.எஸ்.பாபுவின் உடலை தோளில் சுமந்த முதல்வர் விஜய்

இறுதி ஊர்வலத்தில் வி.எஸ்.பாபுவின் உடலை தோளில் சுமந்த முதல்வர் விஜய்
Updated on: 
1 min read

சென்னை: மறைந்த தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய், இறுதி ஊர்வலத்தில் வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்து சென்றார். இது, அப்பகுதி மக்கள், தவெகவினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 75.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினைத் தோற்கடித்துப் பெரும் வெற்றியைப் பதிவு செய்த முக்கியத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் வி.எஸ்.பாபு. அவரது மறைவுக்கு ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

பெரம்பூரில், மாதவரம் நெடுஞ்சாலை - மேல்பட்டி பொன்னப்பன் தெரு சந்திப்பு அருகில், திருநாவுக்கரசு தெருவில் உள்ள வி.எஸ்.பாபுவின் இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று வி.எஸ்.பாபுவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய், இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை தனது தோளில் சுமந்து சிறிது தூரம் சென்றார். இது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், ஊர்தியின் பின்னே முதல்வர் விஜய் சோகத்துடன் நடந்து சென்றார்.

திரு.வி.க. நகர், பல்லவன் சாலையில் உள்ள தாங்கல் மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இறுதி ஊர்வலத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக அமைச்சர்கள், தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர். இறுதி ஊர்வலத்தையொட்டி பெரம்பூர் மற்றும் பல்லவன் சாலைப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இறுதி ஊர்வலத்தில் வி.எஸ்.பாபுவின் உடலை தோளில் சுமந்த முதல்வர் விஜய்
பெரியார் அறிவுலகம் முறைகேடு: அதிகாரிகள் மீது வழக்குப் பதியாதது ஏன்? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

X