மதுராந்தகம் தொகுதியில் கிராமம் கிராமமாக ரோடு ஷோ: டீ அருந்தி.. டிராக்டர் ஓட்டி வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்

வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு
மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது, மதுராந்தகம் ஊருக்குள் சென்ற முதல்வர் விஜய், டிராக்டரில் நஞ்சை உழவு ஓட்டினார்.

மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது, மதுராந்தகம் ஊருக்குள் சென்ற முதல்வர் விஜய், டிராக்டரில் நஞ்சை உழவு ஓட்டினார்.

Updated on: 
1 min read

மதுராந்தகம்: தவெக வேட்​பாளரை ஆதரித்து மது​ராந்​தகம் தொகு​தி​யில் ரோடு ஷோ நடத்​திய முதல்​வர் விஜய், டீ அருந்​தி​யும்​, டிராக்​டர் ஓட்​டி​யும் வாக்கு சேகரித்​தார்.

மது​ராந்​தகம் தொகு​தி​யில் தவெக சார்​பில் போட்​டி​யிடும் மரகதம் குமர​வேலை ஆதரித்து கடந்த 25-ம் தேதி முதல்​வர் விஜய் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். நேற்று முன்​தினம் நடந்த பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் தவெக கூட்​ட​ணிக் கட்சி தலை​வர்​களான வைகோ, திரு​மாவளவன், மாணிக்​கம் தாகூர், காதர் மொகிதீன் உள்​ளிட்​டோர் பங்​கேற்று மரகதம் குமர​வேலுக்கு ஆதரவு திரட்​டினர்.

இந்​நிலை​யில், முதல்​வர் விஜய் மது​ராந்​தகம் தொகு​தி​யில் நேற்று இரண்​டாவது முறை​யாக ரோடு ஷோ சென்று வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்​டார். இதற்​காக பனையூரில் இருந்து வேனில் புறப்​பட்ட விஜய், மாமண்​டூரில் மதி​யம் 2.30 மணி அளவில் பிரச்​சா​ரத்தை தொடங்​கி​னார். வாக​னத்​தில் நின்​றபடி சாலை மார்க்​க​மாக சென்று மக்​களிடம் வாக்கு சேகரித்​தார்.

படாளம், கருங்​குழி, பெரும்​பாக்​கம் மற்​றும் மேல்​மரு​வத்​தூர் வழி​யாக அச்​சரப்​பாக்​கம், சோத்​துப்​பாக்​கம், மாம்​பாக்​கம் வரை 35-க்​கும் மேற்​பட்ட கிராமங்​களுக்​குச் சென்று தவெக​வின் விசில் சின்​னத்​துக்கு ஆதரவு திரட்​டி​னார்.

ரோடு ஷோவின்​போது தேசிய நெடுஞ்​சாலையை ஒட்​டி​யுள்ள 16 முக்​கிய இடங்​களில் தவெக நிர்​வாகி​கள் மற்​றும் பொது​மக்​கள் திரண்டு முதல்​வருக்கு ஆரத்தி எடுத்​தும், பூக்​களை தூவி​யும் உற்​சாக வரவேற்பு அளித்​தனர். வேல், செங்​கோல், சிலைகள், படங்​கள் என ஏராள​மான பரிசுகளை முதல்​வருக்கு வழங்​கினர்.

தொடர்ந்து மது​ராந்​தகம் ஊருக்​குள் சென்ற முதல்​வர் விஜய், டீக்​கடை​யில் அமர்ந்து ஊர் பெரிய​வர்​களு​டன் கலந்​துரை​யாடியபடி டீ அருந்​தி​னார். அங்​கிருந்து விவ​சாய நிலங்​களை பார்​வை​யிட சென்ற அவர், டிராக்​டரில் நஞ்சை உழவு ஓட்டி விவ​சா​யிகளின் கவனத்தை ஈர்த்​தார். பின்​னர் மாற்​றுத்​திற​னாளி​களை சந்​தித்து அவர்​களது கோரிக்​கைகள் குறித்து கேட்​டறிந்​தார்.

முதல்​வரின் வாகன பிரச்​சா​ரத்​தையொட்டி 3 ஆயிரத்​துக்​கும் அதி​க​மான போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டனர். முதல்​வர் வரும்​போது அசம்​பா​விதங்​களை தடுப்​ப​தற்​காக, தேசிய நெடுஞ்​சாலை​யில் ஆங்​காங்கே சாலையை கடக்​கும் பகு​தி​களில் தடுப்​பு​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. போக்​கு​வரத்து போலீ​ஸார் வாக​னங்​களை ஒழுங்​குப்​படுத்​தி சீ​ராக அனுப்​பி வைத்​தனர்.

<div class="paragraphs"><p>மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது, மதுராந்தகம் ஊருக்குள் சென்ற முதல்வர் விஜய், டிராக்டரில் நஞ்சை உழவு ஓட்டினார்.</p></div>
ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி மும்பையில் சிஜேபி போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in