இசை உலகின் மகுடமாக திகழ்கிறார் இளையராஜா: முதல்வர் விஜய், ஸ்டாலின் வாழ்த்து

இசை உலகின் மகுடமாக திகழ்கிறார் இளையராஜா: முதல்வர் விஜய், ஸ்டாலின் வாழ்த்து
Updated on
1 min read

சென்னை: இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா தனது 83-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையடுத்து அவரது ரசிகர்கள் அவருடைய ஸ்டூடியோவுக்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர். இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தேனி மாவட்டம், பண்ணைபுரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” என்ற படத்தின் மூலமாக திரைத்துறையில் கால்பதித்து, உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாகத் திகழ்ந்துவரும் இசைஞானி இளையராஜா தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்து வருகிறார். உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். ‘அன்னக்கிளி’யில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும். ராஜா என்றும் ராஜாதான்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இசை உலகின் மகுடமாக திகழ்கிறார் இளையராஜா: முதல்வர் விஜய், ஸ்டாலின் வாழ்த்து
நாளை தொடங்கும் தென்மேற்கு பருவமழை: 16 மாவட்டங்களில் இன்று கனமழை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in