காலநிலை ஆர்வலர் வைத்த கோரிக்கையை ஏற்ற முதல்வர் விஜய்

காலநிலை ஆர்வலர் வைத்த கோரிக்கையை ஏற்ற முதல்வர் விஜய்
Updated on
1 min read

சென்னை: மணிப்​பூரைச் சேர்ந்த இளம் காலநிலை ஆர்​வலர் லிசிப்​ரியா கங்​குஜம் தனது எக்ஸ் பக்​கத்​தில், ‘நாற்​காலிகளில் வெள்​ளைத் துண்​டு​களை வைக்​கும் வழக்​கம் அமைச்​சர்​கள், அரசு அதி​காரி​கள் மட்​டுமல்​லாமல் கீழ்​நிலை அதி​காரி​களாலும் பரவலாக பின்​பற்​றப்​படு​கிறது. முதல்​வர் விஜய் முன்​மா​திரி​யாக திகழ வேண்​டும். இந்த வழக்​கத்தை கைவிடு​வதன் மூலம் ஒரு அடை​யாளப்​பூர்​வ​மான மாற்​றத்​தைத் தொடங்க வேண்​டும்’ என வேண்​டு​கோள் விடுத்​திருந்​தார்.

நேற்று முன்தினம் டாஃபே​வின் தலை​வரும் நிர்​வாக இயக்​குநரு​மான மல்​லிகா சீனி​வாசன் மற்​றும் துணைத் தலை​வர் லட்​சுமி வேணு ஆகியோ​ருடன் விஜய் நடத்​திய சந்​திப்​பின்​போது வெளி​யிடப்​பட்ட புகைப்​படங்​களில் முதல்​வரின் நாற்​காலி​யில் வெள்ளை துண்டு இல்லாமல் இருந்​ததது.

இதையடுத்து அந்​தப் படங்​களை தனது எக்ஸ் பக்​கத்​தில் பகிர்ந்​துள்ள லிசிப்​ரியா கங்​குஜம், முதல்​வர் விஜய்க்கு நன்றி தெரி​வித்​துள்​ளார். மேலும், தனது பதி​வில், ‘சா​மானிய மக்​களின் குரல்​களை நீங்​கள் செவிமடுக்​கிறீர்​கள் என்​பதை உங்​கள் செயல் நிரூபிக்​கிறது. நாம் விரும்​பி​னாலும் விரும்​பா​விட்​டாலும், மாற்​றம்​ வரப்​போகிறது’ என தெரி​வித்​துள்​ளார்​.

காலநிலை ஆர்வலர் வைத்த கோரிக்கையை ஏற்ற முதல்வர் விஜய்
நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in