“அரசியல் தலைவர்களுக்கு குடும்ப ஒழுக்கம் முக்கியம்” - விஜய் மீது வைகோ மறைமுக விமர்சனம்

“அரசியல் தலைவர்களுக்கு குடும்ப ஒழுக்கம் முக்கியம்” - விஜய் மீது வைகோ மறைமுக விமர்சனம்
Updated on
1 min read

அரசி​யல் தலை​வர்​களுக்கு குடும்ப ஒழுக்​கம் முக்​கி​யம் என மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ கூறி​னார்.

சிலிண்​டர் தட்​டுப்​பாடு, தமி​ழ​கத்​துக்​கான நிதியை வழங்​கவில்லை எனக்கூறி மத்​திய அரசை கண்​டித்து மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​டணி சார்​பில் மதுரையில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

ஆர்ப்​பாட்​டத்​தில் மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ பேசி​ய​தாவது: சமையல் எரி​வாயு சிலிண்​டர், பெட்​ரோல், டீசல் தட்​டுப்​பாடு ஏற்​படுமோ என்ற கவலை ஏற்​பட்​டுள்​ளதற்​குக் காரணம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்​தான். அமெரிக்​காவைச் சேர்ந்த ஜனநாயக​வா​தி​கள் ஒன்று சேர்ந்து அவரை பதவி நீக்​கம் செய்ய வேண்​டும்.

ரஷ்​யா​விலிருந்து கச்சா எண்​ணெய் வாங்க அமெரிக்கா அனு​ம​தி​யளி்த்​துள்​ள​தாக மோடி சொல்​வது அவமானம். இந்​தி​யா, அமெரிக்​கா​வின் கொத்​தடிமை​யா? 140 கோடி மக்​களின் தன்​மானத்தை மோடி அடகு வைத்​து​விட்​டார். இந்​தி​யா​வில் இருக்​கும் முற்​போக்கு ஜனநாயக சக்​தி​கள் ஒன்று சேர்ந்து மோடிக்​கும், அவரோடு கூட்​ட​ணி​யில் உள்ள அதி​முக உள்​ளிட்ட கட்​சிகளுக்​கும் பாடம் புகட்ட வேண்​டும். தேர்​தலில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி வேட்​பாளர்​களை படு​தோல்வி அடையச் செய்ய வேண்​டும்.

கற்​பை​யும், மானத்​தை​யும் உயி​ரினும் பெரி​தாக மதிக்​கும் தமி​ழ​கத்​தில், எப்​படி​யும் வாழ்க்கை நடத்​து​வேன், யாரோடும் செல்​வேன், யாரோடும் கரம் கோப்​பேன், யாரோடும் மேடைக்கு வந்து நிற்​பேன் எனச் சொல்​லும் அபா​யம் நேர்ந்​திருக்​கிறது. அரசி​யல் தலை​வர்​களுக்கு குடும்ப ஒழுக்​கம் முக்​கி​யம். தமி​ழ​கத்​தின் மானம், மரி​யாதை, பெரு​மை, உரிமை​களைக் காக்க வேண்​டும்.

மத்​திய பாஜக ஆட்​சி​யில் தமி​ழ​கம் வஞ்​சிக்​கப்​படு​கிறது. தேவை​யான நிதி கொடுப்​ப​தில்​லை. போதிய திட்​டங்​களை கொண்டு வரு​வ​தில்​லை. சொற்ப நிதி​யைக் கொண்​டு​தான் முதல்​வர் ஸ்டா​லின் சாதனை​களை நிகழ்த்தி வரு​கி​றார். அவரே தொடர்ந்து முதல்​வ​ராக வரு​வதற்கு திமுக கூட்​ட​ணியை ஆதரி​யுங்​கள்.

இவ்​வாறு அவர் பேசி​னார். ஒரு நடிகை​யுடன் தவெக தலை​வர் விஜய்க்கு தொடர்பு இருப்​ப​தாக​வும், எனவே, விவ​காரத்து கோரி அவரது மனைவி மனு தாக்​கல் செய்​துள்ள நிலை​யில், விஜய்யை மறை​முக​மாக விமர்சிக்கும் வகை​யில்​ ‘அரசி​யல்​ தலை​வர்​களுக்​கு குடும்​ப ஒழுக்​கம்​ முக்​கி​யம்​’ என்​று வைகோ பேசி​ய​தாக கருதப்​படுகிறது.

“அரசியல் தலைவர்களுக்கு குடும்ப ஒழுக்கம் முக்கியம்” - விஜய் மீது வைகோ மறைமுக விமர்சனம்
டெல்லியில் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் 7 மணி நேரம் தீவிர விசாரணை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in