“தமிழக மக்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் எனது இறுதிமூச்சு உள்ளவரை உழைப்பேன்” - முதல்வர் ஸ்டாலின் உறுதி

“தமிழக மக்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் எனது இறுதிமூச்சு உள்ளவரை உழைப்பேன்” - முதல்வர் ஸ்டாலின் உறுதி
Updated on
2 min read

சென்னை: ‘தமிழக மக்​களுக்​காக​வும்​, தமிழ்​ மொழிக்​காக​வும்​ எனது இறு​தி​மூச்​சு இருக்​கும்​ வரை உழைத்​து கொண்​டே இருப்​பேன்​’ என்​று முதல்​வர்​ மு.க.ஸ்​டா​லின்​ தெரி​வித்​தார்​.

தி​முக மற்​றும்​ கூட்​ட​ணி கட்​சி வேட்​பாளர்​களை ஆதரித்​து முதல்​வர்​ மு.க.ஸ்​டா​லின்​, மறைமலைநகரில்​ நடை​பெற்​ற பிரச்​சா​ர பொதுக்​கூட்​டத்​தில்​ பேசி​யதாவது: காஞ்​சிபுரம்​, செங்​கல்​பட்​டு மாவட்​டத்​தில்​ எந்​தப்​ பக்​கம்​ திரும்​பி​னாலும்​ தொழிற்​சாலைகள்​. எங்​கு பார்த்​தா​லும்​ இளைஞர்​களுக்​கு வேலை​வாய்ப்​பு​கள்​.

இதை எல்​லாம்​ கொண்​டு​வந்​தது தி​முக. நமது ஆட்​சி மீண்​டும்​ வந்ததும் காஞ்சிபுரம்​, செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர்​ மாவட்டங்​களில்​ தொழிற்​சாலைகள்​ மேலும்​ மேம்படுத்​தப்​படும்​. நான்​ கரோ​னா​வில்​ போய்​ இருக்​க வேண்​டுமென பழனி​சாமி பேசி​யுள்​ளார்​.

எல்​லோருக்​கும்​ மரணம்​ வரும்​, இந்​த ஸ்டா​லினுக்​கும்​ வரும்​. ஆனால்​, நான் ​கொண்​டு வந்​த காலை உணவுத்​ திட்டம், நான்​ முதல்​வன்​ போன்​ற திட்​டங்​களுக்​கு ஒரு​போதும்​ மரணம்​ வராது. அவற்​றை மண்​ணில்​ புதைக்​க​வும்​ முடி​யாது.

இந்​த திட்​டங்​கள்​ மண்​ணில்​ இருக்​கும்​ வரை ஸ்டா​லின்​தான் தமிழகத்தை ஆள்​கிறான்​ என்​று அர்த்​தம். இன்​றைக்​கு பேசும்​போது கரோ​னா காலத்​தில்​ ஸ்டா​லின்​ காணா​மல்​ போ​னார்​ என்​றுதான்​ நான்​ சொன்​னேன்​ என்​று பழனி​சாமி பல்​டி​யடித்துவிட்​டார்​.

ஆட்​சி​யில்​ இருந்​தா​லும்​ இல்​லா​விட்​டாலும்​ எப்​போதும்​ களத்​தில்​ நிற்​க கூடிய​வனே தி​முக​காரன்​. அதே​போல்​, தமிழகத்​தில்​ எந்​த மாவட்​டத்​தி​லும்​ மழை, வெள்​ளம்​ பா​திப்​பு ஏற்​பட்​டாலும்​ நேரில்​ சென்​று உடனுக்​குடன்​ பார்​வை​யிட்​டு இருக்​கிறேன்​. எனது இறு​தி​மூச்​சு இருக்​கும்​ வரை தமிழக மக்​களுக்​காக​வும்​, தமிழ்​ மொழிக்​காக​வும்​ உழைத்​துக்​கொண்​டே இருப்​பேன்.

ஆனால்​, பழனி​சாமி​யிடம்​ சொல்​லு​வதற்​கு எந்​த சாதனை​யும்​ இல்​லை. கூவத்​தூரில்​ அவர்​கள்​ அடித்​த கூத்​து நமக்​கு மறக்​க​வில்​லை. கூவத்​தூர்​ ஆட்​டத்​தை பொறுக்​காத தமிழகம்​, இப்​போது பாஜவுடன்​ சேர்ந்​து அதி​முக போடு​கிற ஆட்​டத்​தை​யா தாங்​கிக்​கொள்​ள போகிறது.

பழனி​சாமி, ஏப்​ரல்​ 23-ம்​ தேதி வரை காத்​திருங்​கள்​. உங்​கள்​ கொட்​டத்​துக்​கு முடிவு கட்​டும்​ தீர்ப்​பு அன்​று எழுதப்​படும்​. தமிழகத்​தில்​ பாஜக, அதி​முக வீழ்த்​தப்​படப் போவது உறு​தி. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

கூட்​டத்​தில்​ கர்​நாடக துணை முதல்​வர்​ டி.கே.சிவக்​கு​மார்​ பேசி​ய​தாவது: இந்​த பொதுக்​கூட்​டத்​துக்​கு கர்​நாடக துணை முதல்​வ​ராக நான்​ பங்​கேற்​க​வில்​லை. காங்​கிரஸ்​ தலை​மை, முதல்​வர்​ மு.க.ஸ்​டா​லினுடன்​ உறு​தி​யாக கைகோத்​துள்​ளது என்​ப​தை எங்​கள்​ கட்​சி தலை​வர்​கள்​ மல்​லி​கார்​ஜுன கார்​கே மற்​றும்​ ராகுல்​ காந்​தி சார்​பில்​ சொல்​லிக்​ கொள்​கிறேன்​.

கடந்​த 5 ஆண்​டு​களில்​ முதல்​வர்​ ஸ்டா​லின்​ மேற்​கொண்​ட சிறப்​பான பணி​களால்​ தமிழகம்​ மட்​டுமின்​றி, இந்​தி​யா​வே அவரை பா​ராட்​டு​கிறது. இதை பொறுக்​க முடி​யாமல்​, தமிழகத்​தை அழிப்​ப​தற்​கான பணி​களை பாஜக முன்​னெடுத்​து வரு​கிறது. ஆனால்​, அது பலிக்​காது.

தி​முக தலை​மையி​லான இந்​த கூட்​ட​ணி வெற்​றி பெற்​று ஸ்டா​லின்​ மீண்​டும்​ முதல்​வ​ரா​வார்​. உண்​மை​யான காங்​கிரஸ்​ தங்​களுக்​கு ஆதர​வு அளிப்​ப​தாக புதி​தாக வந்​துள்​ள கட்​சி (தவெக) ஒன்​று சொல்​லிக்​கொண்​டு மக்​களை திசை திருப்​பு​கிறது. அகில இந்​திய ​காங்​கிரஸ்​ என்​பது ஒன்​று​ தான்​. அது முதல்​வர்​ மு.க.ஸ்​​டா​லின்​ பக்​கம்​​தான்​ நிற்​கிறது. இவ்​​வாறு அவர்​ பேசி​னார்​.

“தமிழக மக்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் எனது இறுதிமூச்சு உள்ளவரை உழைப்பேன்” - முதல்வர் ஸ்டாலின் உறுதி
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 10 ஏப்ரல் 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in