மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 10 ஏப்ரல் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 10 ஏப்ரல் 2026
Updated on
2 min read

மேஷம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

ரிஷபம்: பிரியமானவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர். குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர். தலைவலி, தூக்கமின்மை நீங்கும். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

மிதுனம்: இழுபறியில் இருந்த சில பணிகள் முடியும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்காதீர்கள். அலுவலகரீதியான பயணங்களில் கவனம் தேவை.

கடகம்: பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். குழப்பம் நீங்கி மகிழ்ச்சி உண்டு. வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயம் காண்பீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

சிம்மம்: பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர். புது வேலை கிட்டும். தந்தையின் உடல் நலம் சீராகும். பால்ய நண்பர்கள் தேடி வருவர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவர்.

கன்னி: குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல்நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. வியாபாரத்தில் விவாதங்கள் நீங்கும். லாபம் அதிகரிக்கும். அலுவலகரீதியான பயணங்கள் திருப்தி தரும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்.

துலாம்: முக்கிய பிரமுகர்கள் சிலரை சந்திப்பதால் உங்கள் வாழ்வில் மாற்றம் வரக்கூடும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்கள் உதவிகரமாக இருப்பர். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்கவும்.

விருச்சிகம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்குவீர். வியாபாரத்தால் பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக இருக்கவும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.

தனுசு: உறவினர், நண்பர்களால் செலவு வரக்கூடும். குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் அமைதி தங்கும். வாகனத்தில் கவனம் தேவை. அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

மகரம்: குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். புது வேலை கிடைக்கும். பிள்ளைகளின் பாசமழையில் நனைவீர். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். கடையை புதிய இடத்துக்கு மாற்றுவீர்.

கும்பம்: திடீரென்று அறிமுகமாகும் சிலரால் ஆதாயம் உண்டு. விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரம் சிறக்கும்.

மீனம்: தம்பதிக்குள் இருந்த கருத்துமோதல் தீரும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்கு விற்றுத் தீரும். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 10 ஏப்ரல் 2026
ஜோதிட நாள்காட்டி 10.04.2026 | பங்குனி 27 - வெள்ளிக்கிழமை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in