இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு: அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள்.

நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள்.

Updated on
1 min read

ராமேசுவரம் / சென்னை: தமிழக மீனவர்​களின் 4 விசைப்​படகு​களைச் சிறைபிடித்த இலங்கை கடற்​படை​யினர், அதிலிருந்த மீனவர்​கள் 22 பேரை கைது செய்​தனர். ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​தில் இருந்து 500-க்​கும் மேற்​பட்ட விசைப்​படகு​களில் 2,500-க்​கும் மேற்​பட்ட மீனவர்​கள் நேற்று முன்​தினம் கடலுக்​குச் சென்​றனர்.

இதில் அலேக்ஸ் டேனியல், அந்​தோணி கிருமி​ராஜ் ஆகியோரது இரு விசைப்​படகு​களை நெடுந்​தீவு அருகே இலங்கை கடற்​படை​யினர் சிறைபிடித்​தனர்.

பின்​னர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்​த​தாகக் கூறி, இரு படகு​களில் இருந்த விமல்​ராஜ், தபோன் ராஜா, பாக்​கிய​ராஜ், தீபக், ஆரோக்​கிய பிரான்​சிஸ், இம்​மானுவேல், சந்​தியா ஸ்டூவர்ட், பாக்​லின், அந்​தோணி குணால், காளி​தாஸ், சந்​தியா ஆல்​டன், வின்​சர் ஆகிய 12 மீனவர்​களை கைது செய்​து, காங்​கேசன் துறை கடற்​படை முகா​முக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்​து, அவர்​கள் மீது குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​து, ஊர்​காவல்​துறை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தினர். பின்​னர் நீதிபதி உத்​தர​வின்​பேரில் யாழ்ப்​பாணம் சிறை​யில் அடைத்​தனர்.

இதே​போல, மண்​டபம் மீன்​பிடித் துறை​முகத்​தில் இருந்து கடலுக்​குச் சென்ற வெங்​கடேசன் என்​பவரது விசைப்​படகில் இருந்த புவனேஷ் நம்​பு, முரு​க​ராஜ், ஜூட், ராமகிருஷ்ணன், அருள்​தாஸ், பழனி​சாமி ஆகிய 6 மீனவர்​களை, தலைமன்​னார் பகு​தி​யில் இலங்கை கடற்​படை​யினர் சிறை பிடித்​தனர்.

மேலும், மலை​ராஜன் என்​பவரது விசைப்​படகைப் பறி​முதல் செய்த இலங்கை கடற்​படை​யினர், அதிலிருந்த ராம​சாமி, நாகூர் கண்​ணன், பாலசுப்​பிரமணி​யன், ராஜாமணி ஆகிய 4 மீனவர்​களைக் கைது செய்​து, தலைமன்​னார் கடற்​படை முகா​முக்கு கொண்டு சென்​றனர். சிறை பிடிக்​கப்​பட்ட 10 மீனவர்​களை​யும் மன்​னார் மாவட்ட நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​திய இலங்கை கடற்​படை​யினர், பின்னர் வவுனியா சிறை​யில் அடைத்​தனர்.

சிறையில் 104 மீனவர்​கள்... மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கருக்​கு, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக மீனவர்​கள் இலங்கை கடற்​படை​யினரால் கைது செய்​யப்​படு​வது தொடர்​வது, அவர்​களது குடும்​பத்​தினரிடையே கவலையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

தற்​போது 104 மீனவர்​கள் இலங்கை சிறை​களில் உள்​ளனர். அதே​போல, பிப்​ர​வரி முதல் வாரத்​தில் யாழ்ப்​பாணம் நீதி​மன்​றத்​தால் விடுவிக்​கப்​பட்ட 12 மீனவர்​கள் தாயகம் திரும்​புவ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது.

எனவே, இலங்கை காவலிலிருந்து விடுவிக்​கப்​பட்ட அனைத்து மீனவர்​களும் தாயகம் திரும்​புவதற்​கும், தற்​போது கைது செய்​யப்​பட்​டு, காவலில் வைக்​கப்​பட்​டுள்ள அனைத்து இந்​திய மீனவர்​கள் மற்​றும் அவர்​களது படகு​களை விடு​விப்​ப​தற்​கும் உடனடி​யாக தூதரக நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும். இவ்வாறு முதல்​வர் கடிதத்​தில் வலியுறுத்தியுள்​ளார்.

<div class="paragraphs"><p>நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள்.</p></div>
விருதுநகர் அருகே நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டறிந்த கல்வெட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in