தமிழகத்தில் 23 தொகுதிகளில் ரூ.69 கோடியில் சிறு விளையாட்டு அரங்கங்கள் நிறுவ திட்டம்

முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்
தமிழகத்தில் 23 தொகுதிகளில் ரூ.69 கோடியில் சிறு விளையாட்டு அரங்கங்கள் நிறுவ திட்டம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் 23 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் ரூ.69 கோடி​யில் கட்​டப்​பட​வுள்ள முதல்​வர் சிறு விளை​யாட்டு அரங்​கங்​களின் கட்​டு​மானப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டிய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், மீன்​வளத்​துறை சார்​பில் ரூ.98.92 கோடி​யில் மேம்​படுத்​தப்​பட்ட துறை​முகங்​களை​யும் திறந்து வைத்​தார்.

இதுகுறித்​து, தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கடந்த 2021-22ம் ஆண்டு பட்​ஜெட்​டில், விளை​யாட்டு வசதி​கள் இல்​லாத அனைத்து சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களி​லும் தலா ரூ.3 கோடி செல​வில் சிறு விளை​யாட்​டரங்​கங்​கள் நிறு​வப்​படும் என அறிவிக்​கப்​பட்​டது. இதன் மூன்​றாம் கட்​ட​மாக, 44 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் முதல்​வர் சிறு விளை​யாட்​டரங்​கங்​கள் அமைக்க மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் பணி​கள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன.

அந்​தவகை​யில் கிருஷ்ணகிரி மாவட்​டம் – பர்​கூர் மற்​றும் தளி, தஞ்​சாவூர்- பேராவூரணி, திரு​வை​யாறு மற்​றும் ஒரத்​த​நாடு, கோயம்​புத்​தூர்- கிணத்​துக்​கட​வு, திருச்​சி​ராப்​பள்ளி – மணப்​பாறை, விழுப்​புரம் - செஞ்​சி, திண்​டிவனம் மற்​றும் திருக்​கோ​விலூர், சென்னை - மதுர​வாயல், திரு.​வி.க.நகர் மற்​றும் பெரம்​பூர் , விருதுநகர்- திருச்​சுழிமற்​றும் ராஜ​பாளை​யம், காஞ்​சிபுரம் - திருப்​பெரும்​புதூர், திரு​வாரூர் – நன்​னிலம் மற்​றும் திருத்​துறைபூண்​டி, கரூர் – குளித்​தலை, செங்​கல்​பட்டு – ஆலந்​தூர் , கன்​னி​யாகுமரி - கிள்​ளியூர்,சேலம் - சங்​ககிரி, எடப்​பாடி என 23 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் ரூ.69 கோடி மதிப்​பில் முதல்​வர் சிறு விளை​யாட்​டரங்​கங்​கள் அமைக்க முதல்​வர் ஸ்​டா​லின் நேற்று காணொலிவாயிலாக அடிக்​கல் நாட்​டி​னார்.

மீன்​வளத்​துறை: மேலும், மீன்​வளம் மற்​றும் மீனவர் நலத்​துறை சார்​பில் கன்​னி​யாகுமரி மாவட்​டம், தேங்​காப்​பட்​ட​ணம் மீன்​பிடி துறை​முகத்​தில் ரூ.60 கோடி​யில் கூடு​தல் உட்​கட்​டமைப்பு வசதி​கள் மற்​றும் பெரிய​நாயகி தெரு மீனவ கிராமத்​தில் ரூ.26 கோடி​யில் தூண்​டில் வளைவுடன் மீன் இறங்​குதளம் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

மயி​லாடு​துறை மாவட்​டம், தரங்​கம்​பாடி​யில் ரூ.10 கோடி​யில் மீ்ன் பிடிதுறை​முகம் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளது. தென்​காசி மாவட்​டம், கடானா கிராமத்​தில் ரூ.2.92கோடி​யில் அரசு மீன்​விதைப்​பண்ணை அமைக்​கப்​பட்​டுள்​ளது. ரூ.98.92 கோடி மதிப்​புள்ள இவற்றை முதல்​வர் ஸ்டா​லின் நேற்று திறந்​து​வைத்​தார்.

நிகழ்​வில், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர்​கள் அனிதா ஆர்​.​ரா​தாகிருஷ்ணன், அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி, டி.ஆர்​.பி.​ராஜா, தலை​மைச் செயலர் நா. முரு​கானந்​தம்,மீன் வளர்ச்​சிக் கழகத் தலை​வர்ந.க​வுதமன், விளை​யாட்​டுத்துறை செயலர் அதுல்ய மிஸ்​ரா,ஊரக வளர்ச்​சித் துறை செயலர் ககன்​தீப்​சிங் பேடி உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

தமிழகத்தில் 23 தொகுதிகளில் ரூ.69 கோடியில் சிறு விளையாட்டு அரங்கங்கள் நிறுவ திட்டம்
தமிழகம், புதுச்சேரியில் டிச.14 வரை மழைக்கு வாய்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in