

முதல்வர் ஸ்டாலின்
சென்னை: மதுரையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயர் சூட்டப்பட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை வரும் 21-ஆம் நாள் திறந்து வைக்க இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “நீண்ட பாலங்களை அமைத்துச் சாதனை படைத்துவரும் நமது திடாவிட மாடலில், அடுத்து மதுரையில் அமைகிறது 1.3 கிலோமீட்டர் நீளமுள்ள “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்!”
தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு, இந்திய நாட்டின் விடுதலைக்காகத் தனக்கெனப் பாதையை உருவாக்கி, நம் தென்மாவட்ட மக்களை விடுதலைப் போரில் ஈடுபடுத்திய வீரத்தின் அடையாளமான #NetajiSubashChandraBose பெயரைச் சூட்டிப் பெருமிதம் கொள்கிறேன்.
ரூ.213 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தை வரும் 21-ஆம் நாள் என்னுடைய மதுரைப் பயணத்தில் திறந்து வைக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.