“நடிகரின் பின்னால் செல்லும் இளைஞர்கள் விரைவில் திருந்துவார்கள்” - முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நேற்று காலை நடை பயிற்சியின்போது பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நேற்று காலை நடை பயிற்சியின்போது பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Updated on
1 min read

புதுக்கோட்டை: நடிகரின் பின்​னால் செல்​லும் இளைஞர்​கள் விரை​வில் திருந்​து​வார்​கள் என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நம்​பிக்கை தெரி​வித்​துள்ளார்.

புதுக்​கோட்டை மாவட்​டத்​தில் உள்ள தொகு​தி​யில் திமுக கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து புதுக்​கோட்​டை​யில் நேற்று மாலை நடை​பெற்ற பொதுக்​கூட்​டத்​தில் முதல்​வரும், திமுக தலை​வரு​மான மு.க.ஸ்​டா​லின் பிரச்சாரம் செய்தார். முன்​ன​தாக, புதுக்​கோட்​டை​யில் நடைப​யிற்சி மேற்​கொண்ட அவர், விராலிமலை தொகு​திக்கு உட்​பட்ட இலுப்​பூர் கடைவீ​தி​யில்கூடி​யிருந்த பொது​மக்​களிட​மும், பேருந்துக்காக காத்திருந்த பயணி​களிடமும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்​தார்.

அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: தேர்​தலில் திமுக கூட்​ட​ணிக்கு வெற்றி வாய்ப்பு அமோக​மாக உள்​ளது. ஏற்​கெனவே, 200 தொகு​தி​யில் வெற்றி பெறு​வோம் என்று தெரி​வித்து இருந்​தோம். தற்​போதுள்ள மக்​கள் வரவேற்பை​யும், கூட்​டத்தையும் பார்க்​கும்​போது, 234 தொகு​தி​களி​லும் வெற்றி பெறு​வோம் என்ற நம்​பிக்கை ஏற்​பட்​டுள்​ளது.

இந்​தத் தேர்​தலில் தோல்வி என்​ப​தால் அதி​முக பொதுச் செய​லா​ளர் விரக்​தி​யின் உச்​சத்​துக்கு சென்​று​விட்​டார். அதி​முகவை டெல்​லி​யில் அடமானம் வைத்​து, அக்​கட்​சி​யியை அடிமை​யாகி​விட்​டார். அவர்​களை டெல்​லி​தான் ஆட்சி செய்​கிறது. அதி​முக என்ற திரா​விட கட்சி இப்​படி போனதை நினைத்து வெட்​கப்​படு​கிறேன், வேதனைப்​படு​கிறேன்.

தற்​போது தலை​மைச் செய​லா​ளர் உள்​ளிட்ட அதி​காரி​களை மாற்றி உள்​ளனர். இது​போன்று எதை வேண்​டு​மா​னாலும் செய்​யட்​டும். இதற்கு மேலும் செய்​வார்​கள். அதைப் பற்றி நாங்​கள் கவலைப்பட மாட்​டோம். நடிகர் உள்​ளிட்ட யார் வந்​தா​லும் கவலைப்​ப​டா​மல் எங்​கள் வேலையை பார்த்​துக்​கொண்டு இருக்​கிறோம்.

நடிகரின் பின்​னால் இளைஞர்​கள் சென்று விபத்​துகள் நேரிடு​வதை நாட்டு மக்​கள் பார்த்​துக்​கொண்​டிருக்​கின்​றனர். அதனால், நடிகர் பின்​னால் செல்​லும் இளைஞர்​கள் விரை​வில் திருந்​து​வார்​கள். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

<div class="paragraphs"><p>புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நேற்று காலை நடை பயிற்சியின்போது பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.</p></div>
“என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in