“தமிழ்நாட்டின் டிஎன்ஏ-வை மாற்ற நினைக்கும் என்டிஏ” - ஸ்டாலின் குற்றச்சாட்டு

“தமிழ்நாட்டின் டிஎன்ஏ-வை மாற்ற நினைக்கும் என்டிஏ” - ஸ்டாலின் குற்றச்சாட்டு

படம்: நா.தங்கரத்தினம்

Updated on
2 min read

அமை​தி, வளர்ச்​சியை முன்​னிறுத்​தும் தமிழ்​நாட்​டின் டிஎன்​ஏ-வை மாற்ற நினைத்து சொந்த மண்​ணுக்​கும், சொந்த மக்​களுக்​கும் துரோகம் இழைக்​கும் கூட்​ட​ணி​யாக என்​டிஏ (தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி) உள்​ளது என்று மதுரை​யில் நடந்த தேர்​தல் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் குற்றம்சாட்டினார்.

மதுரை மாவட்ட திமுக கூட்​டணி வேட்​பாளர்​கள் அறி​முக பொதுக்​கூட்​டம் திரு​மங்​கலத்​தில் நேற்று நடை​பெற்​றது. திமுக வேட்​பாளர்​கள் பி.மூர்த்தி (மதுரை கிழக்​கு), பழனிவேல் தியாக​ராஜன் (மத்​தி), கோ.தளபதி (வடக்​கு), மணி​மாறன் (திரு​மங்​கலம்), ரகு​பாலாஜி (மேற்​கு), வெங்​கடேசன் (சோழ​வந்​தான்), கிருத்​திகா தங்​கப்​பாண்டி (திருப்​பரங்​குன்​றம்), மதி​முக வேட்​பாளர் பூமி​நாதன் (தெற்​கு), காங்​கிரஸ் வேட்​பாளர்​கள் சரவணகு​மார் (உசிலம்​பட்​டி), மேலூர் தொகு​திக்கு நேற்று காங்​கிரஸ் சார்​பில் வேட்​பாள​ராக அறிவிக்​கப்​பட்ட விஸ்​வ​நாதன் ஆகியோரை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​முகப்​படுத்​தி​னார்.

கூட்​டத்​தில், மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: மதுரை​யில் அமைக்​கப்​பட்​டுள்ள கலைஞர் நூற்​றாண்டு நூல​கத்​தில் படித்து 24 பேர் டிஎன்​பிஎஸ்சி தேர்​வில் தேர்ச்சி பெற்​றுள்​ளனர். ஜல்​லிக்​கட்​டுப் போட்​டிகளை நடத்த கீழக்​கரை​யில் கலைஞர் நூற்​றாண்டு ஏறு​தழு​வுதல் அரங்​கம் கட்​டப்​பட்​டுள்​ளது.

மேலமடை​யில் வீரமங்கை வேலு​நாச்​சி​யார் மேம்​பாலம், கோரிப்​பாளை​யத்​தில் நேதாஜி சுபாஷ் சந்​திர​போஸ் மேம்​பாலம், திரு​மங்​கலம் - கள்​ளிக்​குடி வீர​பாண்​டிய கட்​டபொம்​மன் மேம்​பாலம், உலகத் தரத்​தில் ஹாக்கி விளை​யாட்டு அரங்​கம், புனரமைக்​கப்​பட்ட வண்​டியூர் பூங்​கா, வைகை வடகரைச் சாலை மேம்​பாடு, சிட்கோ தொழிற்​பூங்​கா,குடிநீர்த் திட்​டம், ஒரு லட்​சத்​துக்கு 22 ஆயிரம் பேருக்கு இ-பட்டா வழங்​கல், செல்​லூர் கண்​மாய் முதல் வைகை ஆறு வரை சிமென்ட் கால்​வாய் அமைக்​கும் பணி​களை நிறைவேற்​றி​யுள்​ளோம்.

மதுரைக்​கான வளர்ச்​சியை முன்​னெடுக்​கும் மாடல் தான் திரா​விட மாடல். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்​டணி முன்​வைப்​பது வளர்ச்​சியை கெடுக்​கும், மத நல்​லிணக்​கத்தை பாதிக்​கும் ஆரிய மாடல். மதுரை மக்​கள் புத்​தி​சாலிகள். இங்கு கலவரத்தை தூண்ட நினைத்​தவர்​களின் சதியை சிறப்​பாக முறியடித்​தீர்​கள்​.

அமை​தி, வளர்ச்​சியை முன்​னிறுத்​தும் தமிழ்​நாட்​டின் டிஎன்​ஏ-வை மாற்ற நினைத்து சொந்த மண்​ணுக்​கும், சொந்த மக்​களுக்​கும் துரோகம் இழைக்​கும் கூட்​ட​ணி​யாக என்​டிஏ உள்​ளது. இவர்​கள் தான் டபுள் இன்​ஜின் என்ற டப்பா இன்​ஜின் அரசை தமிழ்​நாட்​டில் அமைக்க துடிக்​கிறார்​கள். நாட்​டிலேயே அதிக திட்​டங்​களை தமிழ்​நாட்​டில் திரா​விட மாடல் அரசு தான் செயல்​படுத்​துகிறது.

இது தெரிந்​தும் மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் எது​வும் தெரி​யாதது​போல் பேசி​யுள்​ளார். தமிழ்​நாட்​டில் எந்த திட்​ட​மும் செயல்​படுத்​தப்​பட​வில்​லை. அரசின் பணம் எங்கு போகிறது? கடன் சுமை அதி​கரித்​துள்​ளது. தமிழ்​நாடு திவாலாகப் போகிறது என எந்த புரிதலும் இல்​லாமல் பேசி​யுள்​ளார். தமிழக அரசின் பணம் மக்​களுக்கு தான் போகிறது.

நான் பியூஷ் கோயலுக்கு சவால் விடு​கிறேன். தமிழ்​நாடு மத்​திய அரசுக்கு தரும் ரூ.1-க்கு பதில் எவ்​வளவு திரும்​பக் கிடைக்​கிறது. பாஜக ஆளும் மாநிலங்​களுக்கு எவ்​வளவு வழங்​கப்​படு​கிறது. இந்த ஒப்​பீட்டை வெளிப்​படை​யாக அறிவிக்க முடி​யு​மா? சொன்​னால் உங்​கள் குட்டு உடைந்​து​விடும். பாஜக ஆளும் மாநிலங்​களுக்கு வழங்​கும் அதே மாதிரி​யான வரி பகிர்வை தமிழ்​நாட்​டுக்கு வழங்​கி​னால் தமிழ்​நாட்​டின் மொத்த கடனும் அடைந்து நிதி நெருக்​கடியே இருக்​காது.

எங்​கள் பணத்தை வாங்​கிக் கொண்​டு,பணம் எங்கே என்று கேட்​பது நியாய​மா? தமிழ்​நாட்டை பார்த்து திவாலாகப் போகிறது என்று பியூஷ் கோயல் கூறி​யுள்​ளார். பார்த்​துக்​கொண்டே இருங்​கள் என்​டிஏ தான் தி​வாலாக போகிறது. இவ்​வாறு அவர் பேசி​னார். அமைச்​சர் தங்​கம் தென்​னரசு, எம்​பிக்​கள் சு.வெங்​கடேசன், தங்க தமிழ்ச்​செல்​வன் முன்​னாள் அமைச்​சர் பொன்​.​முத்​து​ராமலிங்​கம்​, மக்​கள்​ விடு​தலை கட்​சி தலை​வர்​ முருகவேல்​ராஜன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்றனர்.

“தமிழ்நாட்டின் டிஎன்ஏ-வை மாற்ற நினைக்கும் என்டிஏ” - ஸ்டாலின் குற்றச்சாட்டு
“கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்கின்ற ஒரே கட்சி திமுக” - பழனிசாமி கடும் தாக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in