200 தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஸ்டாலின் சபதம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, சைதாப்பேட்டை தொகுதியில் வேட்பாளர் மா.சுப்பிரமணியனை ஆதரித்து நடந்து சென்று பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, சைதாப்பேட்டை தொகுதியில் வேட்பாளர் மா.சுப்பிரமணியனை ஆதரித்து நடந்து சென்று பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

Updated on
2 min read

தி​முக 200 தொகுதிகளில் உறுதியாக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரம் நேற்று மாலை​யுடன் முடிவடைந்​தது. இறு​தி​நாளான நேற்று திமுக தலை​வ​ரும், முதல்​வ​ரு​மான மு.க.ஸ்​டா​லின், சென்​னை​யில் வில்​லி​வாக்​கம் மற்​றும் தான் போட்​டி​யிடும் கொளத்​தூர் தொகு​தி​களில் தீவிர பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார்.

வில்​லி​வாக்​கம் தொகு​தி​யில் முதல்​வர் ஸ்டா​லின் பேசும்​போது, “திமுக ஆட்சி அமைந்த பிறகு 90 சதவீதத்​துக்கு மேலான தேர்​தல் வாக்​குறு​தி​களை நிறை​வேற்றி உள்​ளோம். மிச்​ச​முள்ள உறு​தி​மொழிகூட மத்​திய அரசு நிதி தரா​த​தால் தடைப்​பட்​டது. எனினும், மகளிர் உரிமைத் தொகை உள்​ளிட்ட பல்​வேறு சிறப்​பான திட்​டங்​களை செயல்​படுத்​தினோம்.

முதலில் ஸ்டா​லினுக்கு கட்​டம் சரி​யில்​லை, ஆட்​சிக்கு வர முடி​யாது என்​றார்​கள். ஆனால் வந்​தோம். இப்​போது திமுக தொடர்ந்து 2-வது முறை​யாக ஆட்​சிக்கு வந்​த​தில்லை என கூறுகி​றார்​கள். இந்த விமர்​சனத்தை உடைத்து மீண்​டும் ஆட்சி அமைப்​போம். பதவிக்​காக இல்​லை, ஒட்​டுமொத்த தமி​ழ​கத்​துக்​காக​தான் கூறுகிறேன். எனவே, 2-வது முறை​யாக என் தலை​மை​யில் திமுக ஆட்சி அமைய வாக்​களிக்க வேண்​டும்” என்​றார்.

தொடர்ந்து கொளத்​தூரில் நடை​பெற்ற பொதுக்​கூட்​டத்​தில் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: ஒட்​டுமொத்​தத் தமி​ழ​கத்​துக்​கும் நான் முதல்​வ​ராக இருந்​தா​லும், கொளத்​தூர் எனது செல்​லக் குழந்​தை. இந்த தொகு​திக்கு பல்​வேறு நலத்​திட்​டங்​களை செய்​துள்​ளேன். அந்த பணி​கள்​தான் எனக்​காக இங்கு ஓட்டு கேட்​டிருக்​கின்​றன. ஏற்​க​னவே ஒரு மாடல் தொகு​தி​யாக கொளத்​தூரை மாற்றி வைத்​திருக்​கிறேன். இன்​னும் சிறப்​பாக கொளத்​தூரை மேம்​படுத்​து​வேன்.

அதி​முக​விடம் ஆட்சி சென்​றால், டெல்லி ரிமோட் கன்ட்​ரோல் ஆட்​சி​தான் நடை​பெறும். நமது அனைத்து திட்​டங்​களும் நின்​று​போய்​விடும். மீண்​டும் ஆட்​சிக்கு வந்​தவுடனே இல்​லத்​தரசி திட்​டத்​துக்​கு​தான் முதல் கையெழுத்​து. இதே​போல், 500-க்​கும் மேற்​பட்ட வாக்​குறு​தி​கள் கொண்ட தொலைநோக்கு ஆவண​மாக நம் தேர்​தல் அறிக்கை வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

அடுத்த 5 ஆண்​டில் அதையெல்​லாம் நிறை​வேற்​றி​விட்​டு, 2031 தேர்​தலின்​போது வாக்கு கேட்டு நான்​தான் மீண்​டும் வரு​வேன். இது சத்​தி​யம். தி​முக 200 தொகுதிகளில் உறுதியாக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.இவ்​வாறு அவர் பேசி​னார்.

இதே​போல், முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட காணொலி​யில், “நமது தமி​ழ​கத்​தின் எதிர்​காலத்தை நீங்​கள் எழுதப்​போகும் நாள். உங்​களை யாராலும் ஏமாற்ற முடி​யாது. உங்​களுக்கு தெரி​யும். எது உண்​மை? எது பொய்? எது நடிப்​பு? எது உழைப்​பு? யார் நரி? யார் சிங்​கம்? அடிமைத்​தனம் எது? தைரி​யம் எது? அனைத்​துமே உங்​களுக்கு நன்​றாகவே தெரி​யும்.

நாம் வீழ்த்​திய எதிரி​களின் சதி​களை எண்ண ஆரம்​பித்​தால், அதற்​குள்​ளாக தேர்​தல் முடிவே வந்​து​விடும். நமது திட்​டங்​களை, அதனால் விளைந்த நன்​மை​களை நான் பட்​டியலிட ஆரம்​பித்​தால், அடுத்த தேர்​தலே வந்​து​விடும்.

எனக்கு நீங்​கள் கொடுத்த கடமையை என்​னால் முடிந்த வரைக்​கும் சரி​வரச் செய்​து​விட்​டேன். உங்​கள் கடமையை நீங்​களும் சரிவர செய்ய வேண்​டும். அடுத்த 5 ஆண்​டு​களுக்கு இது​வரை யாரும் காணாத ஒரு பெரிய கனவோடு காத்​திருக்​கிறேன். இனி நமது போட்டி டெல்​லி​யுடன் மட்​டும் இருக்​காது. தெற்​காசி​யா​வில் அனைத்​துத் துறை​களி​லும் முதல் மாநில​மாக தமி​ழ​கத்தை மாற்​றிக் காட்​டு​வேன். மண், மொழி, மானம் மூன்​றை​யும் காப்​பாற்ற மூச்சு இருக்​கும் வரைக்​கும் போராடு​வேன்” என்று தெரிவித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, சைதாப்பேட்டை தொகுதியில் வேட்பாளர் மா.சுப்பிரமணியனை ஆதரித்து நடந்து சென்று பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். </p></div>
கோவை தெற்கு தொகுதியில் மட்டும் ரூ.200 கோடி செலவு செய்துள்ளார் செந்தில் பாலாஜி: அண்ணாமலை குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in