வடலூரில் சன்மார்க்க பயிற்சிப் பள்ளி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வடலூரில் சன்மார்க்க பயிற்சிப் பள்ளி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Updated on
2 min read

சென்னை: வடலூரில் சன்​மார்க்க பயிற்​சிப் பள்ளி ஏற்​படுத்​தப்​பட்​டு, திரு​வருட்பா இசைப் பயிற்சி அளிக்​கப்​படும் என்று சென்​னை​யில் நடை​பெற்ற அனைத்​துலக வள்​ளலார் மாநாட்​டில் முதல்​வர் ஸ்டா​லின் அறி​வித்​துள்​ளார்.

இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில் சென்னையில் அனைத்​துலக வள்​ளலார் மாநாடு நேற்று நடை​பெற்​றது. மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசி​ய​தாவது: தமிழக வரலாற்​றில் இது​வரை இல்​லாத அளவுக்கு 4,192 கோயில்​களில் திருப்​பணி​கள் செய்து குட​முழுக்கு நடத்​தப்​பட்​டுள்​ளது. ரூ.8,423 கோடி மதிப்​பிலான 8,106 ஏக்​கர் நிலங்​களை மீட்​டது உட்பட அறநிலை​யத் துறை​யில் பல்​வேறு சாதனை​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. அதன் தொடர்ச்​சி​யாகவே இந்த மாநாடும் நடத்​தப்​படு​கிறது.

தமிழ்ச் சமூகத்​தில் உதித்த புரட்​சி​யாளர் வள்​ளலார். அவரது வழி​யில்​தான், எளிய மக்​களுக்​கான காலை உணவு, தாயுமானவர் உட்பட பல்​வேறு திட்​டங்​களை அரசு செயல்படுத்தி வரு​கிறது. இந்த மாநாட்டில் 7 புதிய அறி​விப்​பு​களை வெளி​யிடு​கிறேன். அதன்​படி, இந்த மாநாட்​டைக் குறிக்​கும் வித​மாக இந்தப் பள்ளி வளாகத்​தில் நினை​வுத் தூண் அமைக்​கப்​படும். வடலூரில் சன்​மார்க்க பயிற்​சிப் பள்ளி ஏற்​படுத்​தப்​பட்​டு, திரு​வருட்பா இசைப் பயிற்சி அளிக்​கப்​படும். வடலூரில் வள்​ளலார் பெயரில் மூலிகைத் தோட்​டம் அமைக்​கப்​படும். ஆண்​டு​தோறும் அவரது பிறந்​த​நாளை​யொட்டி 3 நாட்​கள் விழா நடத்​தப்​படும்.

அறநிலை​யத் துறை பதிப்​பகம் மூல​மாக ‘ஸ்​பிரிச்​சுவல் அல்​-கெமி’ என்ற வள்​ளலார் புத்​தகம் வெளி​யிடப்​படும். மருதூர், மேட்​டுக்​குப்​பம், கருங்​குழி ஆகிய இடங்​களில் வள்​ளலார் அன்​ன​தானக் கூடங்​கள் திறக்​கப்​படும். கடலூர் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே உள்ள பூங்கா​வுக்கு அவரது பெயர் சூட்​டப்​படும். அது மட்​டுமின்​றி, சென்​னை​யில் வள்​ளலார் ஆய்வு மையம் அமைக்​கப்​படும். சமூகத்​தில் இறுகிப் போயிருந்த பழமை​வாதங்​கள், மூடத்​தனங்​களை வள்​ளலார் சாடி​னார்.

சாதி, சமய வேறு​பாடு​கள் இல்​லாத சமூகத்தை உரு​வாக்க வேண்​டும் என்ற அவரது கனவு​தான் திரா​விட இயக்​கத்​தின் முக்​கியக் கொள்​கை. அவரது நோக்​கங்​களை மக்​கள் முழு​மை​யாக உணர்ந்து பின்​பற்ற வேண்​டும். அதற்கு இந்த மாநாடு வழி​வகுக்க வேண்​டும். நமது பண்​பாட்டு அடை​யாளங்​களுக்கு வேறு வர்​ணம் பூச நினைக்​கின்​றனர். வள்​ளலாரின் நோக்​கங்​களை சிதைக்க நாம் அனு​ம​திக்கக் கூடாது. பிரி​வினை சக்​தி​களுக்கு இடம் கொடுக்​காமல் அன்​பும், அறனும், கருணை​யும் கொண்ட சமு​தா​யத்தை உரு​வாக்​கு​வோம். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

மாநாட்​டில், திரு​வொற்​றியூர் நெடுஞ்​சாலைக்கு ‘வள்​ளலார் நெடுஞ்​சாலை’ என பெயர் சூட்​டிய முதல்​வர், பெயர் பலகையை திறந்து வைத்​தார். வடலூர் வள்​ளலார் சர்​வ​தேச மையத்​தில் ரூ.12.23 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள சித்த மருத்​து​வ​மனை, பக்​தர்​கள் தங்​கு​வதற்​கான 3 விடு​தி​களை காணொலி வாயிலாக திறந்து வைத்​தார். சன்​மார்க்​கர்​களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கி கவுர​வித்​தார். இந்த நிகழ்​வில் அமைச்​சர்​கள் எ.வ.வேலு, எம்​ஆர்​கே.பன்​னீர்​செல்​வம், சேகர்​பாபு உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

மாநாட்​டின் ஒருபகு​தி​யாக, சேத்​துப்​பட்டு நேரு பூங்கா அருகே நடை​பெற்ற சமரச சுத்தசன்​மார்க்​கப் பேரணியை அமைச்​சர் சேகர்​பாபு தொடங்கி வைத்​தார். இதில்​ சுமார்​ 2 ஆயிரம்​ பேர்​ கலந்​துகொண்​டனர்​.

வடலூரில் சன்மார்க்க பயிற்சிப் பள்ளி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பேரவையில் நாளை தாக்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in