

ராமதாஸ்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
அதன்படி, சேலம் மேற்குத் தொகுதியில் பாமக (ராமதாஸ் தரப்பு) மாநில இணைப் பொதுச் செயலாளர் இரா. அருள் போட்டியிடுகிறார். வந்தவாசி தொகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் முரளி சங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கும்பகோணம் தொகுதியில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும் மாவட்டச் செயலாளருமான ம.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். இதேபோல், விருத்தாசலம் தொகுதியில் மாவட்டச் செயலாளர் இ.கே.சுரேஷ் மற்றும் மயிலாடுதுறை தொகுதியில் மாவட்டச் செயலாளர் பாக்கம் சக்திவேல் ஆகியோர் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சியில் சமீபகாலமாக ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்கும் இடையே நிலவி வரும் அதிகாரப் போட்டி, கட்சியின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் யாருடைய கை ஓங்கியிருக்க வேண்டும் என்பதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில், இந்த முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.