மாதம் ரூ.12 ஆயிரம் ஓய்வூதிய ஆணை: ஓய்வுபெற்ற 42 பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் வழங்கினார்

மாதம் ரூ.12 ஆயிரம் ஓய்வூதிய ஆணை: ஓய்வுபெற்ற 42 பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் வழங்கினார்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் ஓய்​வு​பெற்ற 42 பத்​திரி​கை​யாளர்​களுக்​கு, மாதம் ரூ.12 ஆயிரம் ஓய்​வூ​தி​யத்​துக்​கான ஆணை​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று வழங்​கி​னார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: பேரிடர் காலங்​களி​லும் புயல், மழை, பெரு​வெள்​ளத்​தால் பொது மக்​கள் பாதிக்​கப்​படும்​போதும் பெரும் விபத்​துகள், தொற்று நோய்ப் பரவல்​கள் முதலிய சோதனைக் காலங்​களிலும் இரவு பகல் பாராது ஓய்​வின்றி பணி செய்​து, உண்​மைச் செய்​தி​களைத் திரட்டி மக்​களிடம் கொண்டு சேர்த்து வரும், பத்​திரி​கை​யாளர்​களின் பணியை சிறப்​பிக்​கும் வகை​யில் தமிழகத்​தில் முதன்​முறை​யாக உழைக்​கும் பத்​திரி​கை​யாளர்​களை முன்​களப் பணி​யாளர்​களாக முதல்​வர் ஸ்டா​லின் அறி​வித்​தார்.

திமுக அரசு பொறுப்​பேற்ற பின் செய்தி மக்​கள் தொடர்​புத் துறை​யின்​கீழ் பத்​திரி​கை​யாளர் நலவாரி​யம் உரு​வாக்​கப்​பட்​டு, உழைக்​கும் பத்​திரி​கை​யாளர் களின் குடும்​பத்​துக்கு நலத்​திட்ட உதவி​கள் கடந்​தாண்டு மார்ச் மாதம் முதல் வழங்​கப்​பட்டு வரு​கிறது. வாரி​யத்​தில் தற்​போது வரை 3,674 பேர்​உறுப்​பினர்​களாக சேர்க்​கப்​பட்​டு, 81 பத்​திரி​கை​யாளர்​களுக்கு ரூ.8 லட்​சத்து 56,500 உதவித் தொகை வழங்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், பத்​திரி​கை​யாளர் மாதாந்​திர ஓய்​வூ​தி​யம் ரூ.12 ஆயிர​மாக உயர்த்​தப்​பட்​டு, 356 பத்​திரி​கை​யாளர்​களுக்கு வழங்​கப்​பட்டு வரு​கிறது. குடும்ப ஓய்​வூ​தி​யம் ரூ.6 ஆயிர​மாக உயர்த்​தப்​பட்டு 72 பேர் குடும்​பத்​துக்கு வழங்​கப்​படு​கிறது.

மேலும், 59 பத்​திரி​கை​யாளர் குடும்​பங்​களுக்கு ரூ.2.09 கோடி குடும்ப நல நிதி வழங்​கப்​படு​கிறது. பத்​திரிகை துறை​யில் ஆசிரியர், உதவி ஆசிரியர், புகைப்​படக்​காரர், பிழை திருத்​துநர் ஆகியோர் பணிக்​காலத்​தில் மறைந்​தால், அவர்​கள் குடும்​பத்​துக்கு முதல்​வர் பொது நிவாரண நிதி​யில் இருந்து வழங்​கப்​படும் குடும்ப உதவி நிதி ரூ.2.50 லட்​சம், ரூ.5 லட்​சம், ரூ.7.50 லட்​சம், ரூ.10 லட்​சம் என இரு​மடங்​காக உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

மேலும், பத்​திரி​கை​யாளர்​களுக்​கான மருத்​துவ உதவித்​தொகை​யாக இது​வரை 16 பத்​திரி​கை​யாளர்​களுக்கு ரூ.30.61 லட்​சம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

பத்​திரி​கைத் துறையி​லிருந்து ஓய்​வு​பெற்று நலிந்த நிலை​யில் உள்ள 42 பத்​திரி​கை​யாளர்களுக்​கு, பத்​திரி​கை​யாளர் ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தின்​கீழ் மாதந்​திர ஓய்​வூ​தி​ய​மாக தலா ரூ.12 ஆயிரம் வழங்க கடந்த நவ.27-ம் தேதி அரசாணை வெளி​யிடப்​பட்டது. அதன்​படி, நேற்று தலை​மைச் செயல​கத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் 42 பத்​திரி​கை​யாளர்​களுக்கும் தலா ரூ. 12 ஆயிரம் மாதாந்திர ஓய்​வூ​தி​யத்​துக்​கான ஆணைகளை முதல்​வர் வழங்​கி​னார்.

நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன், தலைமைச் செயலர் நா.​முரு​கானந்​தம், செய்​தித்​துறை செயலர் வே.​ராஜா​ராமன், செய்​தித்​துறை இயக்​குநர் இரா.​வைத்​திநாதன், கூடு​தல் இயக்​குநர்​கள் ச.செல்​வ​ராஜ், ஆர்​.பாஸ்​கரன்​ ஆகியோர்​ பங்​கேற்​றனர்​.

மாதம் ரூ.12 ஆயிரம் ஓய்வூதிய ஆணை: ஓய்வுபெற்ற 42 பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் வழங்கினார்
பட்டு சால்வைகளுக்கு பதில் பாலியஸ்டர் சால்வைகள்: திருப்பதி தேவஸ்தானத்தில் ரூ.54 கோடி ஊழல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in