அரசு ஐடிஐ-க்களில் ரூ.5 கோடியில் நிறுவப்பட்ட நவீன மின்ஆய்வகங்களை முதல்வர் திறந்தார்

தமிழகத்தில் உள்ள 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.5.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நவீன மின் ஆய்வகங்களை முதல்வர் விஜய் நேற்று சென்னையில் இருந்தபடி  திறந்து வைத்தார். உடன், அமைச்சர் முகமது பர்வேஸ், அருள்பிரகாசம் எம்எல்ஏ, தலைமைச் செயலாளர் சாய்குமார், துறை செயலாளர் கொ.வீரராகவ ராவ்.

தமிழகத்தில் உள்ள 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.5.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நவீன மின் ஆய்வகங்களை முதல்வர் விஜய் நேற்று சென்னையில் இருந்தபடி திறந்து வைத்தார். உடன், அமைச்சர் முகமது பர்வேஸ், அருள்பிரகாசம் எம்எல்ஏ, தலைமைச் செயலாளர் சாய்குமார், துறை செயலாளர் கொ.வீரராகவ ராவ்.

Updated on: 
1 min read

சென்னை: தனியார் நிறு​வனத்​தின் உதவியுடன் ரூ.5.10 கோடி செல​வில் 30 அரசு ஐடிஐ-க்களில் அமைக்​கப்​பட்​டுள்ள மேம்​பட்ட மின்​ஆய்​வகங்​களை முதல்​வர் விஜய் நேற்று திறந்​து​வைத்​தார்.

தமிழகம் முழு​வதும் 30 அரசு தொழிற்​பயிற்சி நிலை​யங்​களில் (ஐடிஐ) ஸ்னைடர் எலெக்ட்​ரிக் இந்​தியா நிறு​வனத்​தின் உதவியுடன் ரூ.5.10 கோடியில் மேம்​பட்ட மின்​ஆய்​வகங்கள் அமைக்கப்​பட்​டுள்​ளன. இதனை கிண்டி அரசு ஐடிஐ-யில் நேற்று நடை​பெற்ற விழா​வில், முதல்​வர் திறந்​து​வைத்தார்.

மேலும், மாநில அளவி​லான திறன் போட்​டி​யில் வெற்​றி​பெற்ற 15 மாணவர்​களுக்கு தலா ரூ.25 ஆயிரத்​துக்​கான காசோலைகளை​யும் அகில இந்​திய தொழிற் தேர்​வு​களில் தேசிய அளவில் முதலிடம் பெற்​றவர்​களுக்கு பாராட்​டுச் சான்​றிதழ்​களை​யும் டிஎன்​பிஎஸ்சி மூலம் இளநிலை பயிற்சி அலு​வலர் பணிக்கு தேர்வான 673 பேருக்கு பணி​நியமன ஆணைகளை​யும் முதல்​வர் வழங்​கினார்.

மேலும் ரூ.6.80 கோடி மதிப்​பீட்​டில் 40 அரசு ஐடிஐ-க்களில் நவீன மின்​ஆய்​வகங்​கள் அமைப்​பது தொடர்​பாக முதல்​வர் முன்​னிலை​யில் வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித் துறை இயக்​ககத்​துக்​கும் ஸ்னைடர் எலெக்ட்​ரிக் இந்​தியா நிறு​வனத்​துக்​கும் இடையே புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

முன்​னதாக, முதல்​வர் விஜய் மாணவர்​களின் திறன் படைப்​பு​களைப் பார்​வை​யிட்டு மாணவர்​களு​டன் கலந்​துரையாடினார். விழா​வில் அமைச்​சர் முகமது பர்​வேஸ், எம். அருள்பிரகாசம் எம்எல்ஏ, தலை​மைச் செயலர் எம்.சாய்​குமார், துறை செயலர் கொ.வீரராகவ ராவ், துறை இயக்​குநர் சி.பழனி உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

<div class="paragraphs"><p>தமிழகத்தில் உள்ள 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.5.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நவீன மின் ஆய்வகங்களை முதல்வர் விஜய் நேற்று சென்னையில் இருந்தபடி  திறந்து வைத்தார். உடன், அமைச்சர் முகமது பர்வேஸ், அருள்பிரகாசம் எம்எல்ஏ, தலைமைச் செயலாளர் சாய்குமார், துறை செயலாளர் கொ.வீரராகவ ராவ்.</p></div>
ஜோதிட நாள்காட்டி 29.10.2026 | ஐப்பசி 12 - வியாழக்கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in