சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஜீவா நினைவு அரங்கை முதல்வர் திறந்தார்

சிவகங்கை மாவட்டம் சிறாவயலில் ஜீவா நினைவரங்கை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின். அருகில் அமைச்சர்கள் சிவ.வீ.மெய்யநாதன், மு.பெ.சாமிநாதன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர். | படம்: எல்.பாலச்சந்தர் |

சிவகங்கை மாவட்டம் சிறாவயலில் ஜீவா நினைவரங்கை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின். அருகில் அமைச்சர்கள் சிவ.வீ.மெய்யநாதன், மு.பெ.சாமிநாதன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர். | படம்: எல்.பாலச்சந்தர் |

Updated on
1 min read

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் அருகே பொது​வுடைமை​வா​தி​யும், சுதந்​திரப் போராட்ட தியாகி​யு​மான ஜீவா நினை​வரங்கை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார்.

திருப்​பத்​தூர் அருகே சிறாவயலில் பொது​வுடைமை​வா​தி​யும், சுதந்​திர போராட்ட தியாகி​யு​மான ப.ஜீ​வானந்​தத்தை (ஜீ​வா) காந்​தி​யடிகள் சந்​தித்த இடத்​தில் செய்தி மக்​கள் தொடர்​புத்​துறை சார்​பில் ரூ.3.27 கோடி​யில் நினை​வரங்​கம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. ஜீவா நினை​வரங்கை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார். அங்கு அமைக்​கப்​பட்​டிருந்த காந்​தி​யடிகள், ஜீவா சிலைகளுக்கு மலர் தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

அமைச்​சர்​கள் சாத்​தூர் ராமச்​சந்​திரன், தங்​கம் தென்​னரசு, கே.ஆர்​.பெரியகருப்​பன், ஆர்​. எஸ்​.​ராஜகண்​ணப்​பன், மு.பெ.​சாமி​நாதன், சிவ.வீ.மெய்​ய​நாதன், செய்தி மக்​கள் தொடர்​புத்​துறை செயலர் ராஜா​ராமன், இயக்​குநர் வைத்​தி​யலிங்​கம், சிவகங்கை மாவட்ட ஆட்​சி​யர் கா.பொற்​கொடி, முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப.சிதம்​பரம், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம், இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், முன்​னாள் மாநில செய​லா​ளர் இரா.​முத்​தரசன், கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாங்குடி எம்எல்ஏ, துணை மேயர் குணசேகரன் முன்​னாள் எம்​எல்ஏ குணசேகரன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

நிகழ்ச்​சி​யில் முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: காந்​தி​யடிகள் -ஜீவா சந்​தித்த இடத்​தில் நினை​வரங்​க​மும், உரு​வச் சிலை​யும் அமைக்​கப்​பட்​டுள்​ளன. வெறும் நினை​வரங்​காக மட்​டுமில்​லாமல் சுற்​று​வட்​டாரப் பகுதி மக்​கள் பயன்​படுத்​தும் வகையி​லான திரு​மண மண்டப​மாக​வும் கட்​டி​யுள்​ளோம்.

இப்​பகு​தி​யில் ஆசிரமம் அமைத்து ஜீவா தங்​கி​யிருந்​த​போது, அவரை சந்​தித்த காந்​தி​யடிகள், ‘உங்​களுக்கு என்ன சொத்து இருக்​கிறது?’ என்று கேட்​டுள்​ளார். அதற்​கு, ‘தாய் நாடு​தான் எனது சொத்​து’ என்று ஜீவா தெரி​வித்​துள்​ளார். அதற்கு காந்​தி​யடிகள், ‘நீங்​கள்​தான் இந்​தி​யா​வின் சொத்​து’ என்று குறிப்​பிட்​டுள்​ளார்.

மார்க்​சிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் கேட்​டுக்​கொண்​டதற்கு ஏற்ப சென்னை கன்​னி​மாரா நூல​கத்​தில் காரல் மார்க்ஸ் சிலை பிப். 6-ம் தேதி திறக்​கப்பட உள்​ளது. இவ்​வாறு அவர் பேசி​னார். அதைத்​தொடர்ந்து குன்​றக்​குடி சென்ற முதல்​வருக்கு வெள்ளி செங்​கோலை அளித்து பொன்​னம்பல அடிகளார் வரவேற்​றார்.

குன்​றக்​குடி அடிகளாரின் நூற்​றாண்டு விழா கல்​வெட்டை திறந்து வைத்த முதல்​வர், நூற்​றாண்டு மலரை வெளி​யிட்​டார். குன்​றக்​குடி அடிகளார் சிலைக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி​னார்.

பின்​னர், காரைக்​குடி கழனி​வாசலில் தமிழ் வளர்ச்​சித்​துறை சார்​பில் ரூ.50 லட்​சத்​தில் அமைக்​கப்​பட்ட வீறுக​வியரசர் முடியரச​னாரின் சிலையை முதல்​வர் திறந்து வைத்​தார். முன்​ன​தாக திருப்​பத்​தூருக்கு வந்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுக்கு அமைச்​சர் கே.ஆர்​.பெரியகருப்​பன் தலை​மையில் வரவேற்பு அளித்​தனர்.

<div class="paragraphs"><p>சிவகங்கை மாவட்டம் சிறாவயலில் ஜீவா நினைவரங்கை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின். அருகில் அமைச்சர்கள் சிவ.வீ.மெய்யநாதன், மு.பெ.சாமிநாதன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர். | <em>படம்: எல்.பாலச்சந்தர்</em> |</p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 31 ஜனவரி 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in