மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 31 ஜனவரி 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 31 ஜனவரி 2026
Updated on
2 min read

மேஷம்: குடும்ப பிரச்சினைகள் ஓயும். பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பளிக்கவும். ஓரளவு பணவரவு உண்டு. வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பதில் சிரமம் இருக்கும். தவிர்க்க முடியாத பயணம் ஏற்படும். அலுவலகத்தில் விவாதங்களைத் தவிர்த்து விடவும்.

ரிஷபம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர். மனக் குழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். தம்பதிக்குள் நெருக்கம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

மிதுனம்: திடீர் செலவு இருக்கும். அலைச்சல், காரியத் தடைகள் வரும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். பங்குதாரரின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தாதீர்.

கடகம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீர்ந்து நெருக்கம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். இதுவரை வராதிருந்த உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

சிம்மம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்திகட்டுவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

கன்னி: விடாப்பிடியாக செயல்பட்டு பணிகளை முடிப்பீர். உடன்பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பணவரவு அதிகரிக்கும். தன்னம்பிக்கை பிறக்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். உத்தியோகம் சிறக்கும்.

துலாம்: நெடுநாட்களாக தடைபட்டு வந்த காரியங்கள் சுமுகமாக முடியும். கருத்து மோதல் விலகி தம்பதிக்குள் மகிழ்ச்சியுண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அடுத்தவரைப் பற்றி குறை கூறாதீர்.

விருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளின் அறிமுகம்கிட்டும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்.

தனுசு: முன்கோபம், டென்ஷன் கூடும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். பூர்வீக சொத்து பிரச்சினைகளை நினைத்து வருந்தாதீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகளை போராடி வசூலிப்பீர்.

மகரம்: குழப்பங்கள் நீங்கி வீட்டில் நிம்மதி பிறக்கும். பழைய கடன் பிரச்சினையை தீர்க்க வழி கிட்டும். திடீர் பணவரவு இருக்கும். சகோதர வகையில் சுபச் செலவு உண்டு. உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். உத்தியோகம் சிறக்கும்.

கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். முகப் பொலிவு கூடும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக நடந்து கொள்வார்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: தடைபட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். குடும்பத்தில் அமைதி திரும்பும். புது எண்ணங்களில் மனம் தோன்றும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்கள்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 31 ஜனவரி 2026
ஜோதிட நாள்காட்டி 31.01.2026 | தை 17 - விசுவாவசு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in