முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 லட்சமாக உயர்வு

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 லட்சமாக உயர்வு
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்தில் முதலமைச்​சரின் விரிவான மருத்​துவக் காப்​பீட்டுத் திட்ட பயனாளிகளின் குடும்ப ஆண்டு வரு​மான வரம்பு ரூ.1.20 லட்​சத்​தில் இருந்து ரூ.2.50 லட்​ச​மாக உயர்த்​தப்​பட்​டது.

இக்காப்​பீட்​டுத் திட்​டம், பிரதான் மந்​திரி ஜன் ஆரோக்யா யோஜனா, ஆயுஷ்​மான் பாரத் திட்​டத்​துடன் ஒருங்​கிணைத்து செயல்​படுத்​தப்​படு​கிறது. இதற்கான பயனாளி குடும்​பத்​துக்கு ஆண்​டுக்கு ரூ.5 லட்​சம் காப்​பீட்​டுத் தொகை வழங்​கப்​படு​கிறது.

இதில், ரூ.2 லட்​சம் முதல்​வர் காப்​பீடுத் தொகை, ரூ.3 லட்​சம் ஆயுஷ்​மான் பாரத் காப்​பீட்டுத் தொகை​யாகும். முதல்​வர் காப்​பீட்​டுத் திட்​டம் 2,100-க்​கும் மேற்​பட்ட அரசு மற்​றும் தனியார் மருத்​து​வ​மனைகளில் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. 1.48 கோடிக்​கும் மேற்​பட்ட குடும்​பங்​கள் காப்​பீட்​டுத் திட்​டத்​தில் இணைக்​கப்​பட்​டுள்​ளன. அந்த குடும்​பங்​களுக்கு ஆண்​டுக்கு ரூ.5 லட்​சம் வரையி​லான சிகிச்சைகள் வழங்​கப்​படு​கின்​றன. சில உயர் சிகிச்​சைகளுக்கு ரூ.22 லட்​சம் வரை வழங்​கப்​படு​கிறது.

இந்நிலையில் சில மாதங்​களுக்கு முன்பு நடந்த சட்​டப்​பேரவைக் கூட்​டத்​தொடரில் காப்​பீட்​டுத் தொகை ரூ.5 லட்​சத்​தில் இருந்து ரூ.25 லட்​ச​மாக உயர்த்​தப்​படும் என முதல்​வர் விஜய் அறி​வித்​தார். இந்​நிலை​யில், இதற்காக காப்​பீட்​டுத் திட்ட பயனாளி குடும்ப ஆண்டு வரு​மான வரம்பாக ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த ரூ.1.20 லட்​சம் தற்போது ரூ.2.50 லட்​ச​மாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, காப்​பீட்​டுத் திட்​டத்தை 2027-ம் ஆண்டு ஜன.11-ம் தேதி முதல் 5 ஆண்​டுகளுக்கு செயல்​படுத்த புதிய காப்​பீட்டு நிறு​வனங்​களை தேர்வு செய்ய தமிழக அரசு டெண்​டர் வெளி​யிட்​டுள்​ளது.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 லட்சமாக உயர்வு
அரசுப் பணிக்கான வயது வரம்பு மேலும் 5 ஆண்டுகள் அதிகரிப்பு: எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு வயது வரம்பு உயர்வு?

X