வீட்டுவசதி வாரியத்தில் ஒதுக்கீடு பெற்ற 6,496 பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி: முதல்வர் விஜய் உத்தரவு

வீட்டுவசதி வாரியத்தில் ஒதுக்கீடு பெற்ற 6,496 பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி: முதல்வர் விஜய் உத்தரவு
Updated on: 
1 min read

சென்னை: தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழ்​நாடு வீட்​டு​வசதி வாரி​யத்​தில் தவணை முறை திட்​டத்​தின் கீழ் மனை, வீடு மற்​றும் அடுக்​கு​மாடிக் குடி​யிருப்பு ஒதுக்​கீடு பெற்று தவணைக் காலம் முடிவுற்ற பின்​பும் விற்​பனைப் பத்​திரம் பெறாமல் சுமார் 6,496 ஒதுக்​கீடு​தா​ரர்​கள் உள்​ளனர்.

இவர்​கள் முழுத் தொகை​யை​யும் செலுத்​தாமல் விற்​பனைப் பத்​திரம் பெற முடி​யாமல் உள்​ளனர். இந்​நிலை​யில், முதல்​வர் விஜய் அறி​வுரை​யின்​படி ஒதுக்​கீடு​தா​ரர்​களுக்கு விற்​பனைப் பத்​திரம் விரை​வாக வழங்க வட்​டித் தள்​ளு​படி செய்​வ​தாக 2026-27-ம் ஆண்​டுக்​கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்​தின் போது சட்​டப்​பேர​வை​யில் வீட்டு வசதித் துறை அமைச்​சர் அறி​வித்​தார்.

கடந்த மார்ச் 31-ம் தேதிக்​குள் தவணைக் காலம் முடிவுற்ற திட்​டங்​களில், நிலு​வைத்​தொகை செலுத்​தத் தவறியவர்​களுக்கு விதிக்​கப்​படும் அபராத வட்​டித் தள்​ளு​படி​, வட்டி முதலாக்​கத்​தின் மீதான வட்​டித் தள்​ளு​படி​ மற்​றும் நிலத்​தின் இறுதி விலை வித்​தி​யாசத்​தில் வசூலிக்​கப்​படும் தொகைக்​கான வட்​டி​யில் ஒவ்​வொரு ஆண்​டுக்​கும் 5 மாதத்​துக்​கான வட்​டித் தள்​ளு​படி​யும் செய்து விற்​பனைப் பத்​திரம் வழங்​கப்​படும்.

இந்​தத் திட்​டம் ஓராண்​டுக்​குச் சிறப்​புத் திட்​ட​மாகச் செயல்​படுத்​தப்​படும் என்று முதல்​வர் விஜய் தெரி​வித்​துள்​ளார். இத்​திட்​டம் மூலம், 6,496 ஒதுக்​கீடு​தா​ரர்​கள் பயன்​பெறு​வார்​கள். இதனால், வாரி​யத்​துக்கு ரூ. 92.39 கோடி வரு​வாய் இழப்பு ஏற்​படு​வதுடன், இச்​சிறப்பு வட்டி சலுகை​யின் மூலம் ஒதுக்​கீட்​டாளர்​களுக்கு ரூ.18.45 கோடி தள்​ளு​படி​யும் வழங்​கப்​படும்​. இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வீட்டுவசதி வாரியத்தில் ஒதுக்கீடு பெற்ற 6,496 பயனாளிகளுக்கு வட்டி தள்ளுபடி: முதல்வர் விஜய் உத்தரவு
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ்: ரூ.56 கோடிக்கு 5 டெண்டர்கள் வெளியீடு

X