அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ்: ரூ.56 கோடிக்கு 5 டெண்டர்கள் வெளியீடு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: தமிழக பாடநூல் கழகம் வெளி​யிட்​டுள்ள டெண்​டர் அறி​விப்​பில் கூறி​யுள்​ள​தாவது: தமிழகத்​தில் அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு ஷூ, சாக்​ஸ், ஆங்​கிள் பூட்​ஸ், மழை​கோட், கம்​பளி ஸ்வெட்​டர் ஆகியவை இலவச​மாக வழங்​கப்​பட்டு வரு​கிறது. இவை ரூ.56 கோடியில் கொள்​முதல் செய்​யப்பட உள்​ளன.

அதன்​படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்​களுக்கு 28 லட்​சத்து 32,935 ஜோடி ஷூக்​கள் வாங்க ரூ.37.24 கோடிக்​கும், 58 லட்​சத்து 23,755 ஜோடி சாக்ஸ் வாங்க ரூ.9.07 கோடிக்​கும் டெண்​டர் கோரப்​பட்​டுள்​ளது.

அதே​போல், மலைப்​பகு​திபள்ளி மாணவர்​களுக்கு 91,771 மழை​கோட்​டு​கள் ரூ.3.32 கோடி​யிலும், 92,062 கம்​பளி ஸ்வெட்​டர்​கள் ரூ.2.42 கோடி​யிலும், 91,351 ஜோடி ஆங்​கிள் பூட்​ஸ்​கள் ரூ.4 கோடி​யிலும் வாங்​கப்பட உள்​ளன.

இவை அந்​தந்த மாவட்ட, வட்​டாரக் கல்வி அலு​வல​கங்​களுக்கு அனுப்​பவேண்​டும்.

விருப்​ப​முள்ள நிறு​வனங்​கள் tntenders.gov.in எனும் இணை​யதளம் வழி​யாக டிசம்​பர் 10-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்​கலாம். ஒப்​பந்​தம் பெறும் நிறு​வனங்​கள் ஆணை கிடைத்த 120 நாட்​களுக்​குள் பொருட்​களை வழங்க வேண்​டும். சாக்​ஸ்​களை மட்​டும் 90 நாட்​களுக்​குள் வழங்க வேண்​டும்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
ரூ.400 கோடி முறைகேடு வழக்கில் அன்பில் மகேஸ் ஜாமீன் மனு 17-க்கு தள்ளி வைப்பு

X