

அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், இரும்புலியூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அவருக்கு நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கினர்.
தாம்பரம்: தாம்பரம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தொகுதிக்கு உட்பட்ட கிழக்கு தாம்பரம், இரும்புலியூர் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, 62-வது வார்டு கிழக்கு வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அந்த பகுதி நிர்வாகிகள் சார்பில், சட்டப்பேரவை உறுப்பினராக அமர்வது போது அவரின் புகைப்படத்தை நினைவு பரிசாக வழங்கினார்.
அப்போது, ராஜேந்திரன் பேசியதாவது: கிழக்கு தாம்பரம் பகுதியில் மினி பேருந்து இயக்கவும், இரும்புலியூரில் இருந்து ஜிஎஸ்டி சாலைக்கு செல்ல ரயில்வே நடைமேம்பாலமும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், போதை கலச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில் கிலோ ரூ.30 விற்ற அரிசி, இன்று ரூ.70க்கு விற்கிறது.
கட்டிடம், சொத்து, குப்பை, வணிகம் என அனைத்து வரிகளும் உயர்ந்து விட்டது. இந்த நிலைமைக்கு ஆளும் அரசாங்கமே பொறுப்பு. திமுகவின் மோசமான நிர்வாக திறமையால் விலைவாசி குறையவில்லை.
அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. உங்களுடைய கஷ்டங்களில் பங்குகொள்ளக் கூடிய எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.