காலை உணவுத் திட்டம் ‘காமராஜர்’ பெயரில் மாற்றம்: விரிவாக்கம் செய்ய ரூ.217 கோடி ஒதுக்கீடு

காலை உணவுத் திட்டம் ‘காமராஜர்’ பெயரில் மாற்றம்: விரிவாக்கம் செய்ய ரூ.217 கோடி ஒதுக்கீடு
Updated on
2 min read

சென்னை: அரசுப் பள்​ளி​களில் செயல்​படுத்​தப்​பட்டு வரும் காலை உணவுத் திட்​டம் ‘காம​ராஜர்’ பெயரில் மாற்​றப்​பட்​டுள்​ளது.இந்​தத் திட்​டத்தை 6 முதல் 8-ம் வகுப்​பு​களுக்கு விரி​வாக்​கம் செய்​வதற்​காக ரூ.217 கோடி நிதி​யும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்​தைகளுக்கு காலை சிற்​றுண்டி வழங்​கும் நோக்​கத்​தில் முதல்​வரின் காலை உணவுத் திட்​டம் 2022 செப்​டம்​பர் 15-ம் தேதி தொடங்​கப்​பட்​டது. தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்​ளி​களுக்கு இத்​திட்​டம் விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டது. இந்​தத் திட்​டத்​தின்​கீழ் கிச்​சடி, பொங்​கல், உப்​புமா என தின​மும் ஏதேனும் ஒரு வகை உணவு​கள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. தற்​போது மாநிலம் முழு​வதும் உள்ள 37,447 அரசு, அரசு உதவி​பெறும் பள்​ளி​களில் படிக்​கும் 19.34 லட்​சம் குழந்​தைகளுக்​குக் காலை உணவு வழங்​கப்​பட்டு வரு​கிறது.

இதற்​கிடையே, சமூக நலத்​துறை செயல்​பாடு​கள் குறித்த ஆலோ​சனை கூட்​டம் முதல்​வர் விஜய் தலை​மை​யில் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் கடந்த ஜூன் 15-ம் தேதி நடை​பெற்​றது. இதில் காலை உணவுத் திட்​டத்தை 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்​கும் விரி​வாக்​கம் செய்​வதற்கு முடி​வானது. இந்​நிலை​யில் காலை உணவுத் திட்​டத்​தின் பெயர் மாற்​றப்​பட்​டு, அதை விரி​வாக்​கம் செய்​வதற்​காக ரூ.217 கோடி நிதி​யும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து சமூக நலத்​துறை செயலர் ம.பல்​லவி பல்​தேவ் வெளி​யிட்ட அரசாணை: அரசு, அரசு உதவி பெறும் பள்​ளி​களில் செயல்​படுத்​தப்​பட்டு வரும் காலை உணவுத் திட்​டம் இனி ‘பெருந்​தலை​வர் காம​ராஜர் காலை உணவுத் திட்​டம்’ என்று பெயரிடப்​படு​கிறது. இத்​திட்​டம் 6 முதல் 8-ம் வகுப்​பு​களுக்கு விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளது. இத்திட்டம் பெரி​யாரின் பிறந்​த​நாளான செப்​டம்​பர் 17-ம் தேதி முதல்​வர் விஜய்​யால் தொடங்கி வைக்​கப்பட உள்​ளது. தமிழகம் முழு​வதும் 15,454 அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளிகளில் பயிலும் 15 லட்​சத்து 14,274 மாணவர்​கள் பயன்​பெறு​வார்​கள்.

இந்​தத் திட்​டத்தை விரிவுபடுத்​து​வதற்​காக, நடப்பு நிதி​யாண்​டில்​(2026-27) தொடர் செல​வின​மாக ரூ.204 கோடி​யும், தொடரா செல​வின​மாக (உபகரணங்​கள் வாங்​குதல்) ரூ.13.57 கோடி​யும் என ஒட்​டுமொத்​த​மாக ரூ.217.63 கோடிக்கு நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. ஒவ்​வொரு மாணவருக்​கும் தினசரி காலை உணவுச் செல​வாக ரூ.12.71 நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யில் ஆணை​யரக​மும், பிற மாநக​ராட்​சிகள் மற்​றும் நகராட்​சிகளில் நகராட்சி நிர்​வாக இயக்​குநரக​மும் ஒருங்​கிணைந்த சமையல் கூடங்​கள் வாயி​லாக செயல்​படுத்​தப்​படும்​.

மேலும், ஊரகப் பகு​தி​களில் தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் மூலம் அந்​தந்​தப் பள்​ளி​களி​லேயே காலை உணவு தயாரிக்​கப்​பட்டு வழங்​கப்​படும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டு உள்​ளது.

காங்​கிரஸ் வரவேற்பு

தமிழக காங்​கிரஸ் தலை​வர் ப.மாணிக்​கம் தாகூர் வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘காலை உணவு திட்​டத்​துக்கு காம​ராஜர் பெயர் சூட்டி இருப்பதை வரவேற்கிறோம். இதற்காக முதல்​வர்​ விஜய்க்​கு நன்​றி தெரி​வித்​துக்​ கொள்​கிறேன்​’ என்​று கூறியுள்ளார்.

காலை உணவுத் திட்டம் ‘காமராஜர்’ பெயரில் மாற்றம்: விரிவாக்கம் செய்ய ரூ.217 கோடி ஒதுக்கீடு
கரப்பான் பூச்சி கட்சியினரின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பை தொடர்ந்து டெல்லியில் துணை ராணுவம் குவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in