நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் தூய்மைப் பணி: 78 டன் கழிவுகள் அகற்றம்

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் தூய்மைப் பணி: 78 டன் கழிவுகள் அகற்றம்
Updated on: 
1 min read

சென்னை: சென்​னை​யில் உள்ள நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரிய குடி​யிருப்​பு​களில் மாநக​ராட்சி சார்​பில் நேற்று மேற்கொள்ளப்​பட்ட தீவிர தூய்​மைப் பணி மூலம் 78 டன் கழிவு​கள் அகற்றப்பட்​டன.

இது தொடர்​பாக மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: பொது​மக்​களுக்கு தூய்​மையான, பாது​காப்​பான மற்​றும் சுகாதா​ர​மான வாழ்​விடத்தை உறுதி செய்​யும் நோக்​கில், சென்னை மாநக​ராட்சி பகுதி​களில் உள்ள அனைத்து நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரியக் குடி​யிருப்​பு​களி​லும் மாநக​ராட்சி சார்​பில் சிறப்​புத் தீவிர தூய்​மைப் பணிகள் நேற்று மேற்​கொள்​ளப்​பட்​டன.

இதன்​படி, குடி​யிருப்​புப் பகுதி​களில் தேங்​கி​யிருந்த குப்​பைகள் மற்​றும் கட்​டிட இடிபாட்​டுக் கழிவு​கள் முழு​மையாக அகற்றப்பட்டன. குடி​யிருப்​பு​களைச் சுற்​றியுள்ள பகுதி​களில் வளர்ந்​திருந்த புற்​கள், களைகள் மற்​றும் புதர்​கள் அகற்​றப்​பட்டு தூய்​மைப்​படுத்​தப்​பட்​டன. குடி​யிருப்​புப் பகுதி​களில் இருந்த பயன்​பாடற்ற பொருட்​கள் மற்​றும் தேவையற்ற கழிவு​கள் அகற்றப்​பட்​டன. பூங்​காக்​கள் மற்​றும் விளை​யாட்​டுத் திடல்​களில் தேங்​கி​யிருந்த குப்​பைகள் மற்​றும் கட்​டிடக் கழிவு​கள் அகற்றப்பட்டன.

குடி​யிருப்​புக் கட்​டிடங்​களுக்கு இடை​யி​லான காலி​யிடங்​கள் மற்றும் கட்​டிடங்​களைச் சுற்​றியுள்ள காலி​யிடங்​களில் தேங்கியிருந்த குப்​பைகள் மற்​றும் கழிவு​கள் முழு​மையாக அகற்றப்​பட்​டன. இச்​சிறப்​புத் தீவிரத் தூய்​மைப் பணி​யின் போது, 51 டன் குப்​பைகள் மற்​றும் 27 டன் கட்​டிடக் கழிவு​கள் என மொத்தம் 78 டன் கழிவு​கள் சேகரிக்​கப்​பட்டு அகற்​றப்​பட்​டன. இப்பணி​யில் மாநக​ராட்​சி​யின் சார்​பில் 1,142 தூய்​மைப் பணியாளர்​கள், 225 வாக​னங்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டன.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் தூய்மைப் பணி: 78 டன் கழிவுகள் அகற்றம்
சிஆர்பிஎப் முகாம் மீதான தாக்குதல்: 500-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை

X