சிஆர்பிஎப் முகாம் மீதான தாக்குதல்: 500-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை

சிஆர்பிஎப் முகாம் மீதான தாக்குதல்: 500-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை
Updated on: 
1 min read

குல்காம்: ஜம்மு காஷ்மீரின் குல்காமில் 46-வது பட்டாலியனைச் சேர்ந்த சிஆர்பிஎப் சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இதன் மீது கடந்த நவம்பர் 11-ம் தேதி தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 சிஆர்பிஎப் வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதனிடையே, இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் குறித்து பாதுகாப்பு முகாம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, உள்ளூரைச் சேர்ந்த அப்துல் லத்தீப் மற்றும் 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள் தலைமையிலான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை குறிவைத்து விசாரணை நடைபெறுகிறது.

இந்தத் தாக்குதல் தற்செயலானது அல்ல என்று புலனாய்வாளர்கள் நம்புகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு அவர்கள் அப்பகுதியை வேவு பார்த்துள்ளனர். இந்தத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு உள்ளூரில் வசிப்பவர்கள் தங்குமிடம் வழங்கியதுடன் அவர்கள் தப்பியோட உதவியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எனவே, உள்ளூர் ஆதரவு வலையமைப்பைக் கண்டறிய, பாதுகாப்புப் படையினர் கடந்த 2 நாட்களில் 500-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட நிலையில், மேலும் தீவிர விசாரணைக்காக 20 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சிஆர்பிஎப் முகாம் மீதான தாக்குதல்: 500-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை
ஓலா, ஊபர், ஜொமோட்டோ உள்ளிட்ட செயலி மூலம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நலத் திட்டங்கள் தொடங்கினார் ராகுல்

X