புதுச்சேரியில் காங்கிரஸ் - பாஜக கடும் மோதல்: கற்கள், காலணிகளை வீசி தாக்குதல்

 பிரதமரின் உருவபொம்மையை எரிக்க முயன்ற காங்கிரஸாரை விரட்டியடித்த போலீஸார். படங்கள்: எம்.சாம்ராஜ்

பிரதமரின் உருவபொம்மையை எரிக்க முயன்ற காங்கிரஸாரை விரட்டியடித்த போலீஸார். படங்கள்: எம்.சாம்ராஜ்

Updated on
1 min read

புதுச்சேரி: டெல்​லி​யில் நடந்த ஏ.ஐ மாநாட்​டில் இளைஞர் காங்​கிரஸார் போராட்​டம் நடத்​தி, தங்​களது மேல் சட்​டையைக் கழற்றி இந்​தி​ய-அமெரிக்க வர்த்தக ஒப்​பந்​தத்​துக்கு எதி​ராக முழக்​கமிட்​டனர்.

இதைக் கண்​டித்து புதுச்​சேரி வைசி​யாள் வீதி​யில் உள்ள காங்​கிரஸ் அலு​வல​கம் முன்பு நேற்று முன்​தினம் மாலை பாஜக இளைஞரணி​யினர் ஆர்ப்​பாட்​டம் நடத்​தினர். அப்​போது ராகுல்​காந்தி உருவ பொம்​மையை எரித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வகை​யில் புதுச்​சேரி 100 அடி சாலை​யில் உள்ள கல்​வித் துறை அலு​வல​கம் எதிரே காங்​கிரஸார் நேற்று திரண்​டனர். காங்​கிரஸ் மாநிலத் தலை​வர் வைத்​திலிங்​கம், முன்​னாள் முதல்​வர் நாராயண​சாமி, வைத்​தி​ய​நாதன் எம்​எல்ஏ, இளைஞர் காங்​கிரஸ் தலை​வர் ஆனந்​த​பாபு நடராஜன், மகளிர் காங்​கிரஸ் தலைவி நிஷா உள்​ளிட்​டோர் போராட்​டம் நடத்த தயா​ராகினர்.

தகவலறிந்த ரெட்​டி​யார்​பாளை​யம் போலீ​ஸார் அங்கு வந்​தனர். மேலும், பாஜக நிர்​வாகி​களும் கட்சி அலு​வல​கத்​தில் ஒன்று கூடினர். இதனிடையே, காங்​கிரஸார் ஊர்​வல​மாகப் புறப்​பட்டு பாஜக அலு​வல​கம் நோக்கி முன்​னேறினர். சித்​தானந்தா நகர் 4-வது குறுக்கு தெரு​வில் போலீ​ஸாரின் தடுப்​பு​களை மீறிய காங்​கிரஸார், பிரதமர் மோடி​யின் உரு​வபொம்​மையை எரிக்க முயன்றனர். இதனால் அங்கு பதற்​றம் ஏற்​பட்​டது.

அப்​போது, முன்​னாள் எம்​எல்ஏ பாஸ்​கர், செய​லா​ளர் வெற்​றிச்​செல்​வன் மற்​றும் பாஜக​வினர் திரண்​டு, காங்​கிரஸ் கட்​சி​யினருடன் மோதலில் ஈடு​பட்​டனர். இரு தரப்​பினரும் ஒரு​வருக்​கொரு​வர் கற்​கள், காலணி​களை வீசி எறிந்​தனர். அங்​கிருந்த போலீ​ஸார் இரு தரப்​பினரை​யும் விரட்டி அடித்​தனர். பின்​னர் காங்​கிரஸார் மீண்​டும் எல்லை பிள்​ளைச்​சாவடி சந்​திப்பு அருகே ஆர்ப்​பாட்​டம் நடத்​தினர்.

இந்த மோதலின்​போது எஸ்​.பி. வம்​சிதரெட்​டிக்கு கையில் காயம் ஏற்​பட்​டது. மேலும், இரு தரப்​பைச் சேர்ந்த சிலர் காயமடைந்​தனர். இந்த சம்​பவத்​தால் அந்​தப் பகு​தி​யில் பதற்​றம் நில​வியது. தொடர்ந்​து, ஏராள​மான போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டனர். இதையொட்​டி, பாஜக அலு​வல​கம் மற்​றும் சுற்று வட்​டாரப் பகு​தி​யில் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p> பிரதமரின் உருவபொம்மையை எரிக்க முயன்ற காங்கிரஸாரை விரட்டியடித்த போலீஸார். படங்கள்: எம்.சாம்ராஜ்</p></div>
ஏஐ மாநாட்டில் காங்கிரஸார் போராட்டம் அநாகரிகமானது: என்டிஏ தலைவர்கள் கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in