900-க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம்: கோரோஹெல்த் நிறுவனத்தை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

900-க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம்: கோரோஹெல்த் நிறுவனத்தை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

சென்னை: சென்​னையை தலை​மை​யிட​மாகக் கொண்டு கோரோஹெல்த் நிறு​வனம் செயல்​படு​கிறது. இந்த நிறு​வனம், மகா​ராஷ்டி​ரா, கர்​நாடக, கேரள மாநிலங்​களில் அலு​வல​கங்​களை கொண்​டுள்​ளது. அண்​மை​யில் கேரள அலு​வல​கத்​தில் 900-க்​கும் அதி​க​மான ஊழியர்​களை சட்​ட​விரோத​மாக பணிநீக்​கம் செய்​துள்​ளது.

இழப்​பீடு மற்​றும் பணிநீக்​கம் தொடர்​பாக சட்​டத்​துக்கு புறம்​பான நடவடிக்​கைகளை மேற்​கொண்​டுள்​ளது. இதனை எதிர்த்து ஊழியர்கள் தொடுத்த வழக்கை விசா​ரித்த மாநில உயர்​ நீ​தி​மன்​றம், மாநில அரசு பேச்​சு​வார்த்தை நடத்தி தீர்​வு​காண அறி​வுறுத்​தி​யது.

இதனைத் தொடர்ந்து அரசு 2 முறை அழைப்பு விடுத்​தும் கோரோ ஹெல்த் நிர்​வாகம் பேச்​சு​வார்த்​தைக்கு செல்​லாமல் உள்​ளது. இந்த நிலை​யில் சென்னை கிண்​டி​யில் உள்ள தபால் அலு​வல​கம் அருகே சிஐடியு தென்​சென்னை மாவட்​டக்​குழு​வும், தகவல் தொழில்​நுட்​பம் மற்​றும் தகவல் தொழில்​நுட்ப சார்பு ஊழியர்​கள் சங்​க​மும் (யுனைட்) இணைந்து சிஐடியு மாவட்​டத் தலை​வர் ஏ.முரு​கானந்​தம் தலை​மை​யில் கண்டன ஆர்ப்​பாட்​டத்தை நடத்​தின.

இதில், பணி நீக்​கம் செய்​யப்​பட்ட ஊழியர்​களுக்கு மீண்​டும் பணிவழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி​யுறுத்தினர். ஆர்ப்​பாட்​டத்​தில் மாவட்​டச் செய​லா​ளர் ஜி.செந்​தில்​கு​மார், பொருளாளர் ஏ.நட​ராஜன், யுனைட் பொதுச்​செய​லா​ளர் அழகுநம்பி வெல்​கின், நிர்​வாகிகள் கலந்து கொண்டனர்.

900-க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம்: கோரோஹெல்த் நிறுவனத்தை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்
உயர் கல்விக் கடன் பெற மாவட்டம்தோறும் ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்: அமைச்சர் விஸ்வநாதன் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in